கார் ஓட்ட லைசென்ஸ் வச்சிருந்தாலே டி-போர்டு வண்டிய ஓட்டலாம்! சூப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
இந்தியாவில் இனி இலகு ரக வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தாலும் அவர்கள் 7500 கிலோ வரை எடை கொண்ட வாகனத்தை அந்த உரிமத்தை வைத்து ஓட்ட அனுமதி இருப்பதாக சமீபத்தில் 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. இது பலரை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது. சமீபத்தில் இன்சூரன்ஸ் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பல்வேறு விதமான வாகன ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கார் பைக் ஓட்டுவதற்கு இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த உரிமத்தை கொண்டு சொந்த வாகனங்களை ஒருவரால் இயக்க முடியும். கனரக வாகனங்கள் அல்லது போக்குவரத்திற்கான வாகனங்களை இயக்க வேண்டும் என்றால் அதற்கான தனி லைசென்ஸ் எடுக்க வேண்டும்.

இந்நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட விபத்தில் வாகனம் ஓட்டிய நபர் இலகு ரக வாகன உரிமம் வைத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஓட்டிச் சென்ற வாகனம் போக்குவரத்து வாகனம் என்பதால் அதற்கான இன்சூரன்ஸ் பணத்தை வழங்க முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும் இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இலகு ரக வாகனத்திற்கும் போக்குவரத்து வாகனத்திற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை இதற்கான தனித்தனி ஓட்டுனர் உரிமம் என்பது வைத்திருந்தாலும் இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருப்பவர்கள் 7500 கிலோ வரை எடை கொண்ட வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி இருக்கிறது என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நீதிபதி அவர்கள் இந்தியாவில் ஆண்டுதோறும் 1.7 லட்சம் மனித உயிர்கள் சாலை விபத்தில் மரணம் அடைகின்றன. இந்த சாலை விபத்தில் உள்ள மரணத்தால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக இன்சூரன்ஸ் என்பது இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் எல்லாம் தற்போது இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டு வாகனம் ஓட்டினால் மட்டுமே சட்ட விதிமுறை உட்பட்டு வாகனம் ஓட்டுவதாக அர்த்தம் ஆகும்.
இந்நிலையில் சில வாகன விபத்துகளில் போக்குவரத்து வாகனத்தை இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் ஓட்டி விபத்தில் சிக்கும் போது இதை காரணம் காட்டி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் கிளைம் பணத்தை வழங்க மறுக்கிறார்கள். இது முற்றிலும் சட்ட விரோதமாகும். இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் 7500 கிலோ எடை கொண்ட எந்தவிதமான வாகனத்தையும் ஓட்ட அனுமதி இருக்கிறது என தெரிவித்துள்ளது.
இது குறித்த தீர்ப்பை வழங்கும்போது இதற்கு முன்னர் கடந்த 2017ம் ஆண்டு முகுந்தேவகன் என்பவர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எடுத்துக்காட்டாக தெரிவித்துள்ளது. அந்த தீர்ப்பிலும் விபத்தில் சிக்கிய வாகனம் 7500 கிலோவிற்கு குறைவான எடையில் இருந்ததால் அந்த வாகனத்தை ஓட்ட இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவருக்கு அனுமதி இருக்கிறது. எனக் கூறி இன்சூரன்ஸ் தொகையை வழங்க உத்தரவிட்டிருந்தது.
தற்போது இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் போக்குவரத்து வாகனங்களுக்கான தனி ஓட்டுனர் உரிமம் இருக்கும்போது இப்படியாக இலகு ரக வாகன உரிமம் வைத்து போக்குவரத்து வாகனங்களை ஓட்ட சட்டபூர்வமாக அனுபவிப்பது பல்வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு படி மத்திய அரசு அதன் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளும் பட்சத்தில் சாதாரணமாக லைசென்ஸ் செய்திருக்கும் நபரும் இனி போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்ற நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது குறித்து அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இது இன்சூரன்ஸ் கிளைம்க்காக மட்டுமான சட்டமா அல்லது அனுமதி வழங்குவதற்கான சட்டமா என்பது குறித்து தெளிவு பெறப்படும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஓட்டுனர் உரிமம் என்பது பெரும்பாலான மக்களால் வைத்திருக்கப்படுகிறது இதில் பலர் முறையாக டிரைவிங் தெரியாமலேயே ஓட்டுனர் உரிமத்தை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் இது போன்ற சட்டங்கள் கொண்டு வருவது இந்தியாவில் சாலை பாதுகாப்பில் குறைபாடு ஏற்படுத்தும் என தெரிகிறது. இது குறித்த முழுமையான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications








