மணிக்கு 7,408 கிமீ வேகத்தில் பறக்கும் ஹைப்பர்சானிக் விமானம்: லாக்ஹீட் அசத்தல்!

Written By:

ஒலியின் வேகத்தைவிட 6 மடங்கு வேகத்தில் பறக்க வல்ல ஹைப்பர்சானிக் விமானத்தை தயாரிக்கும் முயற்சி சாத்தியமாகியிருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான, புதிய விமான மாதிரி மற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மேரில்லின் ஹூசன் இந்த தகவலை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஆவலைத் தூண்டும் இந்த புதிய விமானத்தின் சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

லாக்ஹீட் எஸ்ஆர்-72 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய ஹைப்பர்சானிக் விமானத்தை தயாரிக்கும் பணியை லாக்ஹீட் மார்ட்டின் மேற்கொண்டிருக்கிறது.

குறைந்த செலவு

குறைந்த செலவு

இந்த புதிய ஹைப்பர்சானிக் விமானத்தை மிக குறைவான விலையில் தயாரிக்க முடியும் என்றும் லாக்ஹீட் தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு பில்லியன் டாலருக்கும் குறைவான விலையில் இந்த ஹைப்பர்சானிக் விமானத்தை தயாரிக்க முடியும்.

சிறப்பான ஏரோடைனமிக்ஸ்

சிறப்பான ஏரோடைனமிக்ஸ்

நீண்ட மூக்குப் பகுதியுடன் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தில் இந்த விமானம் உருவாக்கப்படும். அதிவேகத்தில் செல்லும்போது, விமானத்தின் மேற்புறம் அதிக வெப்பம் உண்டாகும் என்பதை கருதி, விண்கலங்கள் போன்றே செராமிக் டைல்ஸ் பூச்சுடன் தயாரிக்கப்படும்.

 விமான வடிவம்

விமான வடிவம்

தற்போது பயன்பாட்டில் உள்ள லாக்ஹீட் எஃப்-22 போர் விமானத்தின் வடிவத்திலேயே இந்த புதிய ஹைப்பர்சானிக் விமானமும் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 இரட்டை ஆற்றல் மையம்

இரட்டை ஆற்றல் மையம்

இந்த விமானத்தில் டர்பைன் எஞ்சின் மற்றும் ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் என இரட்டை ஆற்றல் மையங்களை ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். இதன்படி, விமானம் மேலே எழும்புவதற்கும், மேக்-3 வேகம் வரை பறப்பதற்கும் டர்பைன் எஞ்சின் பயன்படும். அதிலிருந்து மேக்-6 வேகத்தை தொடுவதற்கு ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் பயன்படும்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன. அதில், தற்போது குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டிருப்பதாக லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ஸ்க்ராம்ஜெட் எஞ்சின்

ஸ்க்ராம்ஜெட் எஞ்சின்

விமானத்தின் முன்புறத்தில் இருக்கும் துளை வழியாக அதிக அழுத்தத்தில் காற்று உள்வாங்கப்படும். பின்னர், அந்த காற்றில் திரவ ஹைட்ரஜனை கலந்து காற்று சூடாக்கப்பட்டு பின்புறத்தில் இருக்கும் துளை வழியாக அதிக அழுத்தத்தில் வெளியேறும். இதனால், கிடைக்கும் அபரிதமான காற்றழுத்தத்தால், விமானம் முன்னோக்கி உந்தப்படும். இது எளிமையான தொழில்நுட்பமாக இருந்தாலும், இது மிகவும் துல்லியமான அமைப்புடையதாக வடிவமைக்கப்பட வேண்டும்.

வேகம்

வேகம்

இந்த விமானம் மணிக்கு 7,408 கிமீ வேகம் வரை பறக்க வல்லதாக இருக்கும். ராணுவ பயன்பாட்டிற்கு இந்த விமானத்தை தயாரிப்பதாக லாக்ஹீட் மார்ட்டின் தெரிவித்துள்ளது. அதாவது, உலகின் எந்தவொரு நாட்டு ராணுவத்தை விடவும் அதிகவேகத்தில் பறக்கும் ஹைப்பர்தானிக் விமானத்தை முன்னதாக தயாரித்து விட அமெரிக்கா துடித்துக் கொண்டிருப்பது இதன் மூலமாக புலப்படுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

வரும் 2023ம் ஆண்டில் ஹைப்பர்சானிக் விமானத்தை ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், 2030ம் ஆண்டில் இந்த புதிய எஸ்ஆர்-72 விமானத்தை பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்ய இருப்பதாக லாக்ஹீட் மார்ட்டின் தெரிவித்துள்ளது.

உலகின் அதிவேக விமானங்கள்

உலகின் அதிவேக விமானங்கள்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Lockheed Hypersonic plane details Revealed.
Story first published: Tuesday, March 29, 2016, 16:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark