ஆஹா பயண அனுபவத்தை வழங்கப்போகும் ஆகாய கப்பல்: லாக்ஹீட் அறிமுகம்!

Written By:

அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் புதிய ஆகாய கப்பல் ஒன்றை எல்எம்எச்-1 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

அதிக சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கும், பயணிகள் போக்குவரத்திற்கும் ஏற்ற அம்சங்களுடன் இந்த ஆகாய கப்பல் தயாராகி வருகிறது. விமானங்களைவிட ஆகாய மார்க்க பயணத்தில் இந்த புதிய ஆகாய கப்பல் புதிய பயண அனுபவத்தை வழங்கும் என்று லாக்ஹீட் மார்ட்டின் தெரிவித்துள்ளது.

 புரோட்டோடைப் மாடல்

புரோட்டோடைப் மாடல்

லாக்ஹீட் மார்ட்டின் தயாரிக்கும் எல்எம்எச்-1 ஆகாய கப்பல் 300 அடி நீளம் கொண்டதாக இருக்கும். இதற்காக, தற்போது பி-791 என்ற புரோட்டோடைப் மாடலையும் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

சொகுசு பயணம்

சொகுசு பயணம்

இந்த ஆகாய கப்பலில் 23 டன் சரக்குகளையும், 19 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியையும் கொண்டிருக்கும். 2 பைலட்டுகள் மூலமாக இயக்கப்படும். அதிர்வுகள் குறைவான மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும்.

ஓடுபாதை வேண்டாம்

ஓடுபாதை வேண்டாம்

இந்த ஆகாய கப்பலில் முக்கிய விசேஷம் என்னவெனில், அடிப்பாகத்தில் நான்கு தாங்கிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலமாக, ஓடுபாதை இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தரை இறக்க முடியும். ஏன், மணல், சேறு நிறைந்த பகுதி மற்றும் தண்ணீரில் கூட தரையிறக்கலாம். மேலும், இந்த தாங்கிகள் அதிக தரைப்பிடிப்பை கொண்டது.

மற்றொரு விசேஷம்

மற்றொரு விசேஷம்

பிற ஆகாய கப்பல்களை சரக்கு ஏற்றும்போது, கயிறு மூலம் கட்டப்பட வேண்டும். ஆனால், இதன் தாங்கிகள் அதிக எடை கொண்டதாக இருப்பதால், ஆகாய கப்பலை ஆடாமல், அசங்காமல் நிறுத்தி வைக்க உதவுகிறது. எனவே, கயிற்றால் இழுத்துக் கட்ட வேண்டிய அவசியமில்லை.

எந்த மூலைக்கும் செல்லும்

எந்த மூலைக்கும் செல்லும்

உலகின் எந்த மூலையிலுள்ள இடத்திற்கும் இந்த ஆகாய கப்பல் மூலமாக சரக்குகளையும், பயணிகளையும் ஏற்றிச் செல்ல முடியும். இதனால், எளிதான போக்குவரத்து சாதனமாக அமையும். விமான நிலையம், ஓடுபாதை தேவை என்ற பிரச்னைகளுக்கு குட்பை சொல்லும்.

ராட்சத பலூன்கள்

ராட்சத பலூன்கள்

இந்த ஆகாய கப்பலில் மூன்று ராட்சத பலூன்களை பிணைத்து உருவாக்கியிருக்கின்றனர். இதில், சரக்கு வைப்பதற்கான பகுதி, எரிபொருள் பகுதி மற்றும் அடிப்பாகத்தில் பயணிகளுக்கான கேபின் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நீண்ட நாள் பறக்கும்

நீண்ட நாள் பறக்கும்

இந்த ஆகாய கப்பலில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் இரண்டு முதல் மூன்று வாரங்கள் தொடர்ந்து பறக்கும். தரையிறக்க வேண்டிய அவசியம் இல்லை.

அனுமதி

அனுமதி

கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆகாய கப்பலை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், ஆகாய கப்பலை தயாரிப்பதற்கும், வர்த்தக ரீதியில் விற்பனை செய்வதற்கும் அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால், இந்த ஆகாய கப்பலை உருவாக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

எரிபொருள்

எரிபொருள்

இந்த ஆகாய கப்பல் ஹீலியம் வாயு மற்றும் டீசல் ஆகியவற்றை வைத்து இயக்கப்படும். மேலே எழும்புவதற்கு மட்டும் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். சப்தமில்லாமல் செல்லும் என்பதால், சுற்றுச்சூழல் விதிகள் கடுமையாக உள்ள இடங்களிலும் இயக்க முடியும்.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

இந்த ஆகாய கப்பல் நவீன எலக்ட்ரானிக் ஃப்ளை- பை ஒயர் தொழில்நுட்பத்தில் கட்டுப்படுத்தப்படும். மேலும், வழித்தடத்தின் வானிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதியும், எளிதாக திருப்புவதற்கான தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது.

செலவு குறைவு

செலவு குறைவு

ஹெலிகாப்டரை விட 10 மடங்கு போக்குவரத்து செலவு குறைவானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 60 அடி நீளம், 10 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட சரக்கு வைக்கும் இடவசதி உள்ளது. இதில், பெரிய கட்டுமான தளவாடங்கள், எந்திரங்களையும் எடுத்துச் செல்ல முடியும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறைக்கு 5,000 கேலன் வரை எரிபொருள் நிரப்பிச் செல்ல முடியும். அதிகபட்சமாக 2592 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

 ஒரே பாதகம்

ஒரே பாதகம்

மிக மிக சொகுசான பயண அனுபவத்தையும், விசாலமான ஜன்னல்களையும் கொண்ட இந்த ஆகாய கப்பல் விமானங்களை போல அல்லாமல், சற்று மெதுவாக பயணிக்கும் என்பதால், சுற்றுலா துறைக்கும், அதிக எடையுடைய தளவாடங்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படும்.

விலை

விலை

எடை சுமக்கும் திறனை பொறுத்து இந்த ஆகாய கப்பல்கள் 25 மில்லியன் டாலர் முதல் 40 மில்லியன் டாலர் வரை விலை கொண்டதாக இருக்கும்.

உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் அறிமுகம்!

உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் அறிமுகம்!

Pictures Credit: Aviationweek 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Lockheed Martin Reveals New Hybrid Airship.
Story first published: Thursday, March 31, 2016, 10:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark