குறுக்கே வந்த யானைகள், சாமர்த்தியமாக செயல்பட்ட இரயில் ஓட்டுனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

தண்டவாளத்திற்கு குறுக்கே வந்த யானைகளை காப்பாற்ற அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த இரயிலை நிறுத்திய ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

குறுக்கே வந்த யானைகள், சாமர்த்தியமாக செயல்பட்ட இரயில் ஓட்டுனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

இரயில் தண்டவாளங்கள் என்றாலே சிலருக்கு மனதில் பயம் வரக்கூடும். ஏனெனில் இரயில்களில் அடிப்பட்டு இருப்போரின் செய்திகளை அன்றாடம் பார்த்து கொண்டிருக்கிறோம். ஊரடங்கினால் வேண்டுமானால் தற்சமயம் அவ்வாறான சம்பவங்களை பார்க்க முடியாமல் இருக்கலாம்.

குறுக்கே வந்த யானைகள், சாமர்த்தியமாக செயல்பட்ட இரயில் ஓட்டுனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் இரயில் விபத்து எல்லாம் சர்வ சாதாரணமாக நடப்பவையாகவே உள்ளது. மனிதர்களுக்கே இப்படியென்றால், விலங்குகளுக்கு எல்லாம் சொல்லவே வேண்டாம். இதற்கு ஓட்டுனர் மேலே எல்லாம் நம்மால் முழு குறையையும் சொல்ல முடியாதுங்க.

குறுக்கே வந்த யானைகள், சாமர்த்தியமாக செயல்பட்ட இரயில் ஓட்டுனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

சிக்னல்களின் படி தான் அவர் இரயிலை இயக்கி வருவார். ப்ரேக் அழுத்தியதும் இரயில் உடனே நிற்கும் அளவிற்கு நம் கண்டுப்பிடிப்புகள் இன்னும் வளரவில்லை. இருப்பினும் இரயில் ஓட்டுனர்கள் தங்களால் முடிந்தவரை விபத்துகளை தவிர்க்க முயற்சிக்கின்றனர்.

குறுக்கே வந்த யானைகள், சாமர்த்தியமாக செயல்பட்ட இரயில் ஓட்டுனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

சான்றாக, மாராடைப்பில் இரயிலை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு இறந்த ஓட்டுனர்களை பற்றி பார்த்திருக்கிறோம். இதற்கு மற்றொரு உதாரணமாகவே குறுக்கே வந்த யானைக்காக இரயிலை உடனடியாக நிறுத்திய ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல் பார்க்கப்படுகிறது.

இந்திய மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் காட்டப்படும் சம்பவம் மேற்கு வங்காளம், சிவோக்- குல்மா இரயில் நிலையங்களுக்கு இடையில் நடந்துள்ளது. இந்த வீடியோவில், 3 யானைகளும் தண்டவாளத்தை கடக்கும் பகுதிக்கு 15 அடிக்கு முன்பே நல்லவேளையாக இரயில் நின்றுள்ளது.

குறுக்கே வந்த யானைகள், சாமர்த்தியமாக செயல்பட்ட இரயில் ஓட்டுனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

இதுகுறித்து அமைச்சர் பியூஷ் கோயல் பதிவிட்டுள்ள பதிவில், "லோகோ பைலட் & குழுவினரின் விழிப்புணர்வு மற்றும் உடனடி நடவடிக்கை தான் மூன்று யானைகளின் உயிரைக் காப்பாற்ற உதவியது. மேற்கு வங்காளத்தின் சிவோக்-குல்மா பிரிவில் நடந்துள்ள இந்த நிகழ்வில் ஒரு குட்டி யானை ரயில் தடங்களை கடக்கிறது. அப்போதே ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது, அதன்பின் யானைகள் பாதுகாப்பாக மறுபுறம் சென்றன" என குறிப்பிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Piyush Goyal Share Video Loco Pilot Stopped Train to Save lives of Three Elephants
Story first published: Thursday, November 12, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X