20 கிமீ வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் 120 கி.மீ வேகத்தில் சீறி பாய்ந்த ரயில்! உசுரை கையில் பிடித்த பயணிகள்!
20 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய ரயிலை 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கியதால் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஓட்டுநர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த ரயில் விபத்தில் சிக்காமல் தப்பி உள்ளது. ரயில் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்தும் அவர்கள் அதிக வேகமாக ரயில் பயணம் செய்துள்ளார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பொதுவாக ரயில் ஓட்டுநர்களுக்கு ஒவ்வொரு ஸ்டேஷனுக்கு கடந்த அடுத்த ஸ்டேஷனுக்கு செல்லும்போது எந்த வேகத்தில் ரயில் செல்ல வேண்டும் என்ற வேகக் கட்டுப்பாடு என்பது இருக்கும். இந்த கட்டுப்பாடை ரயிலில் உள்ள அனைத்து ஓட்டுனர்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். இதனால் அவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் பயணம் செய்ய மாட்டார்கள்.

இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கிறது. தண்டவாளத்தின் பலத்தன்மை பாதுகாப்பற்ற பகுதிகள் அல்லது வனவிலங்குகள் நடமாடும் பகுதி உள்ளிட்ட இடங்களில் வேகக் கட்டுப்பாடு என்பது இருக்கும். இப்படியாக வேக கட்டுப்பாடு உள்ள ஒரு பகுதியில் அதிக வேகத்தில் இரண்டு ரயில்கள் பயணம் செய்துள்ளது.
டெல்லியை அடுத்த ஆக்ரா கண்ட்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து கவாலியர் ரயில் நிலையம் வரை உள்ள பகுதியில் ஜாஜூ- மணியா ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அந்த பகுதி வழியாக பயணிக்கும் ரயில்கள் எல்லாம் அதிகபட்சம் 20 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு ரயில் ஓட்டுநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த பகுதி வழியாக பயணித்த கான்டிமன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆல்வா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் இந்த கட்டுப்பாட்டை மீறி 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்துள்ளார்கள். இதையடுத்து ரயில்வே நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தியது.
இதில் முதல் சம்பவமான கடிமன் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சம் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியதாக இருந்தது. இது நிஜாமுதீன் முதல் ஜான்சி வரை பயணிக்க கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இந்த ரயில் வழக்கமாக இந்த ரூட்டில் 120 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்கும். ஆனால் குறிப்பிட்ட நாளில் விடுக்கப்பட்ட தற்காலிக வேக கட்டுப்பாடு குறித்த தெளிவு இல்லாததால் ரயில் ஓட்டுநர்கள் வேக கட்டுப்பாட்டை பின்பற்றவில்லை என தெரிகிறது.

அதேபோல இந்த சம்பவம் நடந்து ஓரிரு நாட்களில் மீண்டும் மால்வா எக்ஸ்பிரஸ் என்ற ரயிலும் இப்படியாக அதிக வேகத்தில் பயணம் செய்துள்ளது. இந்த ரயிலை ஓட்டிச் சென்ற ஓட்டுனர்களுக்கு இந்த தற்காலிக கட்டுப்பாடு குறித்து அறிவிப்பை மறந்து விட்டார்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட லோகோ பைலட் மற்றும் துணை லோகோ பைலட் ஆகிய பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாக ஒரு ரயில் ஓட்டுநர் ரயிலில் ஏறிய பிறகு லோகோ பைலட் மற்றும் துணை லோகோ பைலட் என இருவர் இருப்பார்கள். லோகோ பைலட் முழுமையாக ரயிலை இயக்குவார். துணை லோகோ பைலட் கூட இருந்து எதிர்வரும் அறிவிப்புகளை சொல்லுவார். ரயில் பயணம் துவங்கும் போது முழுமையாக ரூட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த முழு பட்டியல் அவர்கள் கையில் இருக்கும்.
குறிப்பிட்ட இந்த இரண்டு சம்பவத்தில் லோகோ பைலட் மற்றும் துணை லோகோ பைலட் இருவருமே இந்த எச்சரிக்கையை மீறி ரயிலை அதிக வேகத்தில் இயக்கியுள்ளார்கள். இந்தப் பகுதியில் உள்ள பாலத்தில் வேலை நடந்து கொண்டிருந்ததால் ரயிலில் வேகம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதிக வேகத்தில் ரயில் பணிக்கும்போது பாலம் சேதம் அடைய வாய்ப்பிருப்பதால் இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான சேதாரங்களும் ஏற்படவில்லை. ஆனால் ரயில் வேகமாக சென்றது முற்றிலும் தவறான விஷயமாகும் . ரயில் விபத்து ஏற்பட்டால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாக வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரயில் ஓட்டுநர்கள் எப்பொழுதும் சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









