லோகேஷ் கனகராஜ் வாங்கிய காரின் உண்மையான விலை இத்தன கோடியா! அதான் கருப்பு கலர்ல இருக்கா! மிரண்டு போன ரசிகர்கள்!
தமிழ் திரையுலகில் தற்போதைய நிலையில் Most Wanted Director யார் என கேட்டால், லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) என பள்ளியில் படிக்கும் குழந்தை கூட கூறி விடும். அந்த அளவிற்கு முன்னணி ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் காத்து கிடக்கும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் உருவெடுத்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என லோகேஷ் கனகராஜ் இயக்கிய அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த வரிசையில் தளபதி விஜய் (Thalapathy Vijay) நடிப்பில் உருவாகி வரும் லியோ (Leo) திரைப்படம் கூடிய விரைவில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள ஜெயிலர் (Jailer) திரைப்படம், பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஸனில் (Box Office Collection) பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதையெல்லாம் தகர்க்க வாய்ப்புள்ள படமாக லியோ கருதப்படுகிறது. எனவே லியோ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விக்ரம் திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசனின் (Kamal Haasan) திரையுலக பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது. இதனால் உற்சாகம் அடைந்த கமல்ஹாசன், புத்தம் புதிய லெக்ஸஸ் இஎஸ் 300 (Lexus ES 300) காரை, லோகேஷ் கனகராஜிற்கு பரிசாக வழங்கினார். இதன் விலை (Price) சுமார் 65 லட்ச ரூபாய்.
லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜிற்கு மேலும் ஒரு சில சொகுசு கார்கள் பரிசாக கிடைக்கலாம். அதற்குள்ளாக மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) கார் ஒன்றை, லோகேஷ் கனகராஜ் தற்போது வாங்கியுள்ளார். இதன் விலை சுமார் 1.70 கோடி ரூபாய் ஆகும்.
இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் கிடைக்கிறது. அது 740ஐ (740i) ஆகும். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 375 பிஹெச்பி பவர் மற்றும் 520 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் அதிபர்கள் பலர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வைத்துள்ளனர். இந்த வரிசையில் லோகேஷ் கனகராஜ் பெயரும் பெருமைமிகு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உரிமையாளர்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1.70 கோடி ரூபாய் என்றாலும் கூட, அதன் ஆன் ரோடு விலை சுமார் 2 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வரும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரை லோகேஷ் கனகராஜ் வாங்கியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் தற்போது கருப்பு நிறத்தில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களை இருள் சூழ்ந்த இரவு நேர காட்சிகள்தான் மிகவும் அதிகமாக ஆக்கிரமித்திருக்கும். லோகேஷ் கனகராஜ் கருப்பு நிறத்தை தேர்வு செய்ததற்கு இதுவே காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதாவது கருப்பு அவருக்கு பிடித்த நிறமாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார், லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொகுசான பயணத்தை வழங்கும் என்பது உறுதி. இந்த காரில், அவரது விருப்பமான நடிகர்களான உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் ஆகியோருடன் லோகேஷ் கனகராஜ் ஒரு ரவுண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications