75 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த தபால் சேவைக்கான சுரங்க ரயில்வே; நம்மில் எத்தனைக்கு பேருக்கு தெரியும்

Written By:

லண்டனில் புகழ்பெற்ற சுரங்க தபால் இரயில் சேவை 14 வருடங்கள் கழித்து வரும் ஜூலை மாதம் 28ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

லண்டனில் 1920களில் நிலவிய போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பேடிங்டன் முதல் கிங்ஸ் கிராஸ் வரையில், சுமார் 10.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1927ம் ஆண்டில் மெயில் இரயில் என்ற பெயரில் இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டது.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

பேடிங்டன் முதல் கிங்ஸ் கிராஸ் வரையில் இருக்கக்கூடிய அனைத்து தபால் அலுவலகங்களுக்கும், தினமும் 4 மில்லியன் கடிதங்கள் வரை மெயில் ரயில் சுமந்து சென்று விநியோகிக்கும்.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

தினமும் 22 மணி நேரங்களாக பயன்பாட்டில் இருந்த இந்த இரயில் சேவை, அதிக செலவு வைப்பதாக கூறி இங்கிலாந்தில் தபால் சேவை நிறுவனமான ராயல் மெயில் 2003ல் நிறுத்திவிட்டது.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

தற்போது தி போஸ்டல் மியூசியம் என்ற நிறுவனத்தின் கீழ் உள்ள மெயில் ரயில் 2017ல் திறக்கப்படும் என அந்நிறுவனம் கடந்தாண்டில் அறிவித்தது.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

இங்கிலாந்தின் தபால் துறை வரலாற்றை பிரதிபலிக்கும் அருங்காட்சியக வடிவில் இதனுடைய பயன்பாடு இருக்கும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

மேலும் தி போஸ்டல் மியூசியம் நிறுவனம் மெயில் ரயிலை மக்கள் பார்வையிடுவதற்கும் மற்றும் அந்த சுரங்க வழித்தடங்களை சுற்றி பார்க்கவும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

மேலும் இந்த சுரங்க தபால் ரயில்வே குறித்த வரலாற்றை ஒலி மற்றும் ஒளி வடிவில் பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

மெயில் ரயில் சேவை பயன்பாட்டில் இருந்த போது, சுமார் 200 பொறியாளர்கள் மற்றும் பல துப்புறவு பணியாளர்கள் இதற்கான இயக்கபணிகளில் வேலை பார்த்தனர்.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

தற்போது 14 வருடங்களுக்கு பிறகு இந்த ரயில் சேவை திறக்கப்பட உள்ளது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

பல மணி நேர வேலை, ஓய்விற்கு நேரமே இல்லாத தருணங்கள் என இதில் பணியாற்றிய பலர் தங்களது அனுபவங்களை நினைவு கூறுவது லண்டன் ஊடகங்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

மே, 2003ம் ஆண்டு மூடப்பட்ட இந்த மெயில் ரயில் மற்றும் அதன் வழிப்பாதையை தற்போது வரை ஒரு பொறியாளர் உட்பட 2 பேர் கொண்ட குழு தினமும் பராமரித்து வருகின்றனர்.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

ஜூலை 28ம் தேதி திறக்கப்படும் சுரங்க தபால் இரயிலை பொது மக்கள் பார்வையிட அவர்கள் இந்திய மதிப்பில் ரூ. 650/- செலுத்த வேண்டும்.

மீண்டும் உயிர்பெறுகிறது சுரங்க தபால் ரயில்வே..!!

மேலும் ரயிலில் பயணிக்க சூடுதலாக இந்திய மதிப்பில் ரூ. 360 செலுத்த வேண்டும் என தற்போது மெயில் ரயிலை பராமரித்து வரும் தி போஸ்டல் மியூசியம் என்ற தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Post Office Underground Railway of London will open to the public after 14 years on July 28. Click for Details...
Story first published: Monday, June 19, 2017, 16:51 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark