உலகில் அதிக நேரம் பயணம் செய்யகூடிய விமான பட்டியல்
உலகில் அதிக தூரம் பயணம் செய்யும் விமானங்களில் பட்டியல் உங்களுக்கு தெரியுமா ஏர் இந்தியா நிறுவனம் தான் உலகில் அதிக தூரம் பயணம் செய்யும் விமானத்தை இயக்குகிறது.
நம்மில் பலருக்கு விமான பயணம் என்பது பெரும் கனவாக இருக்கிறது. சிறுவயதில் வானத்தில் விமானம் பறப்பதை வேடிக்கை பாத்த காலத்தில் துவங்கிய இந்த ஆசை பலருக்கு நிறைவேறாமல் இருக்கிறது. சமீபகாலமாக விமான பயண டிக்கெட்களில் விலை கணிசமாக குறைந்து வரும் நிலையில் விரைவில் விமான பயணம் சாமானியனுக்கும் சாத்தியப்படும் என தெரிகிறது. இந்நிலையில் உலகில் அதிக நேரம் பயணம் செய்யும் விமானங்கள் எது என உங்களுக்கு தெரியுமா?

10. ஜெத்தா - லாஸ் ஏஞ்சல்ஸ்
சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்கு ஏர்லைன் சவுதியா நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுகிறது. இது சுமார் 13,380 கி.மீ., பயணம் செய்கிறது. இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதக்கூடிய மெக்கா - மதினாவை இணைக்ககூடிய விமான நிலையமாக ஜெத்தா இருப்பதால் இந்த விமான சேவை இயக்கப்படுகிறது. பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள இந்த விமானத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

9. துபாய்- லாஸ் ஏஞ்சல்ஸ்
ரிவல் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் துபாய் - லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே விமானத்தை இயக்குகிறது. இது சுமார் 13,390 கி.மீ., தூரம் இந்த விமானம் பயணம் செய்கிறது.

8. அபுதாபி - லாஸ் ஏஞ்சல்ஸ்
எதிஹாத் நிறுவனத்தின் விமானம் அபுதாபில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சுமார் 13,470 கி.மீ., தூரம் பயணம் செய்கிறது. இந்த விமானம் கடந்த 2014 முதல் இயக்கப்பட்டுவருகிறது.

7. ஜோனர்ஸ்பெர்க் - அட்லாண்டா
ஆப்ரிக்காவில் உள்ள ஜோனர்ஸ் பெர்க் நகரில் இருந்து அமெரிக்கா ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானத்தை இயக்குகிறது. இது சுமார் 13,500 கி.மீ வரை பயணம் செய்கிறது. இந்த விமானம் கடந்த 2009ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

6. சான் பிரான்சிஸ்கோ - சிங்கப்பூர்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைட்டெட் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக விமானங்களை இயக்குகின்றனர். இது சுமார் 13,600 கி.மீ., வரை பயணம் செய்கிறது.

5. ஹாஸ்டான் - ஆஸ்திரேலியா
யுனைட்டெட் நிறுவனத்தின் 787 ரக விமானம் அமெரிக்காவின் தென் பகுதியான ஹாஸ்டானில் இருந்து 13,800 கி.மீ., பயணம் செய்கிறது. இது சுமார் 17.30 மணி நேரம் பயணம் செய்து இலக்கை அடைகிறது.

4. லாஸ் ஏஞ்சல்ஸ் - சிங்கப்பூர்
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக விமானத்தை இயக்குகிறது. இந்த விமானம் 14,100 கி.மீ தூரம் பயணம் செய்கிறது. அமெரிக்கவில் இருந்து கிளம்பும் விமானங்களில் அதிக நேரம் பயணிக்கும் விமானமாக இது கருதப்படுகிறது.

3. ஆக்லாந்து - துபாய்
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் இருந்து துபாய் வரை பயணிக்கும் ஏமிரேட்ஸ் ஏர்லைன் சார்பில் இயங்கும் ஏர்பஸ் 380 ரக விமானம் சுமார் 17.30 மணி நேர பயணத்தில் 14,200 கி.மீ. வரை கடக்கிறது. இது தான் உலகில் 2 வது அதிக நேரம் பயணம் செய்யும் விமானமாக கருதப்படுகிறது.

2. கத்தார் ஏர்வேஸ்
கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் இருந்து லண்டனுக்கு நேரடியாக போயிங் 777 ஏர்லைனர் ரக விமானங்களை இயக்க துவங்கியுள்ளது. இந்த விமானம் தான் உலகிலேயே அதிக நேரம் பயணம் செய்யும் விமானமாக கருதப்படுகிறது. இது சுமார் 18 மணி நேரத்தில் 14,500 கி.மீ., வரை பயணம் செய்து இலக்கை அடைகிறது.

1. டில்லி - சான் பிரான்சிஸ்கோ
டில்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு இயக்கப்படும் விமானம் தான் உலகிலேயே அதிக தூரம் பயணம் செய்யும் விமானமாக கருதப்படுகிறது. இந்த விமானம் சுமார் 16,980 கி.மீ.தூரம் பயணம் செய்கிறது. இந்த விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் பேயிங் 777 - 200 எல்.ஆர். ரக விமானத்தை கொண்டு இயக்குகிறது. கடந்த 2016ம் ஆண்டு இந்த விமானத்திற்கு அதிக தூரம் பயணம் செய்யும் விமானம் என்ற விருது வழங்கப்பட்டது.

உலகில் அதிக தூரம் பயணம் செய்யும் விமானங்கள் பெரும்பாலும், அமெரிக்கா, அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை இணைப்பதாகவே உள்ளது. பெரும்பாலும் வர்த்தக காரணங்களுக்காக இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications