லாரி டிரைவராக ஆரம்பித்த வாழ்க்கை...! புது மஹிந்திரா கார் வாங்கியதில் மொத்த குடும்பமும் மகிழ்ச்சி!!

ஒரு சிலர் அவர்களது அன்றாட வேலைகளை வீடியோவாக காட்சிப்படுத்தி சமூக வலைத்தள பக்கங்களில் அவ்வப்போது பதிவிடுவதை பார்த்து இருப்பீர்கள். அவ்வாறு, தனது லாரி டிரைவிங் வீடியோக்களை பதிவிடும் லாரி டிரைவர்கள் நம் தமிழ்நாட்டிலேயே ஏகப்பட்ட பேர் உள்ளனர். அப்படியிருக்கையில், ஒட்டுமொத்த இந்திய அளவில் எத்தனை பேர் இருப்பர் என்று யோசித்து பாருங்கள். அத்தகையவர்களுள் பிரபலமானவர், ராஜேஷ் ராவானி (Rajesh Rawani) என்கிற ஜார்காண்ட் மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஆவார். இவர் தற்போது பல லட்ச ரூபாய் மதிப்பிலான மஹிந்திரா (Mahindra) காரை வாங்கி உள்ளார்.

ஜார்காண்ட் மாநிலத்தின் ஜம்தரா என்கிற பகுதியை சேர்ந்தவரான ராஜேஷ் ராவானி, லாரி ஓட்டுவதில் சுமார் 25 வருட அனுபவம் கொண்டவர். இதனாலேயே பாதுகாப்பான முறையில் எவ்வாறு லாரி ஓட்டுவது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் ராஜேஷ் ராவானி, மேலும் லாரி உடன் நீண்ட நாட்களுக்கு தனியாக வாழ்வது எப்படி என்பதையும் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்.

rajesh rawani s mahindra scorpio-n carbon edition

பொதுவாகவே, லாரி டிரைவர்கள் தொலைத்தூர பயணங்களை பல நாட்களுக்கு அடிக்கடி மேற்கொள்வர் என்பதால், அவர்களது லாரிக்குள் அன்றாட வாழ்விற்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்கும். குறிப்பாக, செல்லும் இடத்தில் சமைத்து சாப்பிட, சமையல் செய்வதற்கான அடுப்பில் இருந்து மசாலா பொருட்கள் வரையில் அனைத்தையும் எப்போதுமே தயார் நிலையில் வைத்திருப்பர்.

இதனாலேயே பல லாரி டிரைவர்கள் சமையலிலும் கைத்தேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், அந்த வகையில் 25 வருடங்களாக லாரி ஓட்டும் ராஜேஷ் ராவானியும் சமையலில் புலி ஆவார். தனது சமையலை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவிட ஆரம்பித்தவர், அதன்பின் தனது அன்றாட வேலைகளையும் சமூக வலைத்தளங்களில் காட்ட ஆரம்பித்தார்.

rajesh rawani s mahindra scorpio-n carbon edition

முக்கியமாக, 25 வருட ராஜேஷ் ராவானியின் லாரி டிரைவிங் பார்வையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அது தந்த ஊக்கத்தில் தொடர்ச்சியாக ராஜேஷ் ராவானி வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். இதன் மூலமாக, யூடியூப் (Youtube), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் இவருக்கு வருவாய் கிடைத்து வருவதால், அதன் மூலம் தற்போது பல இலட்ச ரூபாய் மதிப்பிலான மஹிந்திரா காரை ராஜேஷ் ராவானி வாங்கி உள்ளார்.

லாரி டிரைவர் ராஜேஷ் ராவானி வாங்கியிருப்பது மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ-என் 4x4 கார்பன் எடிசன் (Scorpio-N 4x4 Carbon Edition) கார் ஆகும். தனது அன்றாட வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அனைத்தையும் மறக்காமல் வீடியோவாக பதிவிடும் ராஜேஷ் ராவானி, புதியதாக கார் வாங்கியதை மட்டும் வீடியோவாக பதிவிட மறப்பாரா என்ன...?

குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ மஹிந்திரா காரை லாரி டிரைவர் ராஜேஷ் ராவானி டெலிவிரி பெறும் வீடியோவை இதுவரையில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இவரது யூடியூப் சேனலை மட்டும் இதுவரையில் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்த அளவிற்கு இணையத்தில் பிரபலமாக இருக்கும் ராஜேஷ் ராவானி புதியதாக வாங்கியிருக்கும் ஸ்கார்பியோ-என் கார்பன் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.21.72 லட்சமாக உள்ளது.

ஆனால், ஸ்கார்பியோ-என் கார்பன் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.19.19 லட்சத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அதாவது, ஸ்கார்பியோ-என் கார்பன் எடிசன் காரின் விலைமிக்க இசட்8எல் (Z8L) வேரியண்ட்டை லாரி டிரைவர் ராஜேஷ் ராவானி வாங்கியுள்ளார். இந்த காரின் பெயரில் உள்ள 4x4 ஆனது காரில் வழங்கப்படும் 4x4 டிரைவ் சிஸ்டத்தை குறிக்கிறது. அதாவது, ஸ்கார்பியோ-என் கார்பன் எடிசன் ஆனது 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லாரி டிரைவராக பணியாற்றிக் கொண்டு இந்த அளவிற்கு விலையுயர்ந்த மஹிந்திரா காரை வாங்குவது பெரிய விஷயம் ஆகும். ரூ.21.72 லட்சம் என்பது இவர் வாங்கிய ஸ்கார்பியோ-என் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். அதேபோல், லாரி டிரைவர் ராஜேஷ் ராவானி தனது புத்தம் புதிய காரை '7777' என்கிற ஃபேன்சி வாகன பதிவெண் உடன் வாங்கி உள்ளார். இதற்கு தனியாக செலவாகி இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 23, 2025, 23:02 [IST]
English summary
Lorry driver and famous youtuber rajesh rawani bought mahindra scorpio n carbon edition
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X