இந்த அறிவுக்கு நம்ம ஊர் லாரி டிரைவர்ஸ் எங்கேயோ போக வேண்டியது! சிசிடிவி கேமராவையே குழப்பிவிடும் டெக்னிக்!
கண்காணிப்பு கேமராவில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வாகன ஓட்டிகள் வேண்டுமென்றே தங்களது வாகனத்தின் நம்பர் பிளேட்டை மறைக்கும் விதமாக, சுற்றி கம்பிகளை பொருத்துவதாக ஓர் அதிர்ச்சிக்கர ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. எவ்வாறெல்லாம் சில வாகன ஓட்டிகள் போலீஸாரின் கண்காணிப்பு கேமராவில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
சாலை போக்குவரத்தை எப்போதும் சீராக வைத்திருக்க வேண்டுமெனில், கேமராக்களின் பயன்பாடு மிகவும் அவசியமாகிறது. பல வெளிநாடுகளில் கண்காணிப்பு கேமராக்களை சாலைகளின் முக்கியமான பகுதிகளில் பொருத்தி உள்ளனர். நம் இந்தியாவில் இன்னமும் பரவலாக கேமராக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. முக்கிய மாநகரங்களில் மட்டுமே போலீஸாரால் பொருத்தப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவிலேயே கண்காணிப்பு சிசிடிவி கேமராக்களை மாநிலம் முழுவதுமாக பொருத்திய முதல் மாநிலம் என்றால், அது நம் அண்டை மாநிலமான கேரளா ஆகும். இந்த சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிப்பது கேரள அரசாங்கத்துக்கு ஒவ்வொரு வருடமும் பெரிய செலவாக அமைகிறது என்றாலும், கிட்டத்தட்ட கடந்த 2 வருடங்களாக கேரளாவில் சிசிடிவி கேமராக்கள் சாலை போக்குவரத்து விதிமீறல்களை பெரிய அளவில் தடுத்துள்ளன.
இதில் சில சம்பவங்களில், வாகன ஓட்டிகளுக்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளன என்றாலும், சிசிடிவி கேமராக்கள் கேரள மக்களின் மனதில் ஒருவித பயத்தையும், ஒழுங்கையும் விதைத்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். போலீஸ் ஒரு ஸ்டெப் முன்னே சென்றால், அதற்கேற்ப குற்றவாளியும் ஒரு ஸ்டெப் அட்வான்ஸாக செல்வது வழக்கம்தானே.
இந்த வகையில், கேரளாவில் விதிமீறல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகள் கேமராவில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க பல்வேறு வழிகளில் தங்களது வாகனத்தின் நம்பர் பிளேட்டை மறைக்க முயற்சி செய்கின்றனர். இது தற்போது கேரள போலீஸாருக்கு பெரிய தலைவலியாக மாறிவருகிறது. குறிப்பாக, சில லாரி டிரைவர்கள் தான் வித்தியாச, வித்தியாசமான முறைகளில் சிசிடிவி கேமராக்களில் இருந்து தப்பித்து செல்வதாக கூறப்படுகிறது.
லாரி டிரைவர்களுக்கு சிசிடிவி கேமராக்கள் எங்கு, எவ்வளவு உயரத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் என்பது தெரியும். அவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்தால், லாரியின் நம்பர் பிளேட் தெரியாத வகையில், நம்பர் பிளேட்டை மறைத்தப்படி, கம்பியை பொருத்துகின்றனர். ஒரு சிலரோ, மிகவும் ஐடியாவாக யோசித்து பாதி நம்பர் பிளேட் மட்டுமே தெரியும் வகையில் இந்த வேலைகளை செய்கின்றனர்.
அதாவது, அத்தகைய லாரி டிரைவர்களின் நோக்கம் என்னவென்றால், சிசிடிவி கேமராவினால் தனது லாரியின் நம்பர் பிளேட்டை அடையாளம் காண முடியாமல் போக வேண்டும் என்பதாகும். மனிதர்களை போல், ஏஐ தொழிற்நுட்பம் கொண்ட சிசிடிவி கேமராவினாலும் கடைசி 4 எண்களை மட்டுமே வைத்து வாகனத்தை அடையாளம் காண முடியாது. இதற்கேற்றவாறு, வாகனத்தின் பாதுகாப்புக்காக பொருத்துவதை போல், நம்பர் பிளேட்டை மறைத்து சேஃப்டி கம்பிகளை பொருத்துகின்றனர்.
இந்த செயல்களில் லாரி டிரைவர்கள் மட்டுமின்றி, எடை குறைவான கமர்ஷியல் வாகன டிரைவர்களும் ஈடுப்படுவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மறுப்பக்கம், அதிவேகமாக செல்லும் பைக் ரைடர்கள் சிசிடிவி கேமராக்களில் சிக்கிவிட கூடாது என்பதற்காக, வேண்டுமென்றே பைக்கின் பின்பக்க நம்பர் பிளேட்டில் சேதம் ஏற்படுத்திக் கொள்வதாகவும், நம்பர் பிளேட்டை காற்றில் ஆடும் விதமாக பொருத்துவதாகவும் தெரிவிக்கும் போலீஸார், ஒரு சில பைக் ரைடர்கள் முற்றிலுமாக பைக்கின் பின்பக்கத்தில் இருந்து நம்பர் பிளேட்டை நீக்கிவிடுவதாகவும் கூறுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மனிதர்கள் அல்லாமல் சிசிடிவி கேமராக்கள் மூலமாக சாலை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் காலத்திற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பது இவ்வாறான செயல்களின் மூலம் அவ்வப்போது தெரிய வருகிறது. அதாவது, தெரியாமல் சாலை விதிமீறல்களில் ஈடுப்படுவோருக்கே சிசிடிவி கேமராக்கள் ஆகும். வேண்டுமென்றே ஈடுப்படுவோர் எத்தனை சட்டங்களை போட்டாலும் அதில் இருக்கும் ஓட்டை வழியாக தப்பிக்கவே பார்ப்பர்.
Source: Mathrubhumi


Click it and Unblock the Notifications








