தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

லாரி டிரைவர்கள் தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்கவுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே வாகனங்களின் தேவையில்லாத இயக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து வாகனங்களின் சேவைகள் அனைத்திற்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

அத்துடன் தனியாருக்கு சொந்தமான கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்த எச்சரிக்கைகளை மீறிய வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு பொது போக்குவரத்து கொஞ்சம் சீராகியிருக்கிறது.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

ஆனால் தனியார் கார், டூவீலர்களை இயக்க இன்னமும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. குறிப்பாக கொரோனா வைரஸால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் தினமும் உரிய காரணம் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் காவல் துறையினரால் கொத்து கொத்தாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

ஆனால் இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலிலும், ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்தே லாரி டிரைவர்கள் ஓயாமல் உழைத்து கொண்டுள்ளனர். கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சத்திற்கு மத்தியிலும், பால், காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அவர்கள் கொண்டு சென்று வருகின்றனர்.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

எனவே லாரி டிரைவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் எனக்கேட்டு வித்தியாசமான ஒரு போராட்டம் நாளை முதல் (ஜூலை 1ம் தேதி) முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு வார காலத்திற்கு தினமும் மதியம் சரியாக 1 மணிக்கு ஒரு நிமிடம் அனைத்து லாரி டிரைவர்களும் ஒரே நேரத்தில் ஹாரனை ஒலிக்கவுள்ளனர்.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த வித்தியாசமான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அனைத்து லாரி டிரைவர்களுக்கும் காப்பீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு லாரி உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து சங்கங்கள் இந்த போராட்டத்தை கூட்டாக அறிவித்துள்ளன. இந்த போராட்டம் ஜூலை 1ம் தேதி தொடங்கி ஒரு வார காலத்திற்கு நடக்கும்.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

அத்தியாவசிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் பணியின்போது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், லாரி டிரைவர்களும் கொரோனா போர் வீரர்கள்தான் எனவும் லாரி உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

‘Driver's Life matters' என்ற அமைப்பு சார்பில், இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு: கொரோனா வைரஸ் பிரச்னை இன்றோ அல்லது நாளையோ முடியப்போவதில்லை.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

போக்குவரத்துதான் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பதை நீங்கள் தொடர்ந்து கூறி வருகிறீர்கள். எனவே லாரி டிரைவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் இந்தியா முழுவதும் ஹாரன் அடிக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், லாரி டிரைவர்கள் பலர் இன்னமும் வேலைக்கு திரும்ப தயக்கம் காட்டுகின்றனர் என போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''கொரோனா வைரஸ் அச்சம் இருப்பதால், லாரி டிரைவர்கள் வேலைக்கு செல்வதை அவர்களின் குடும்பத்தினர் பலர் விரும்பவில்லை.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

ஏதாவது தவறாக நடந்தால், நமது குடும்பத்திற்கு என்ன ஆகும்? என்ற அச்சமும் லாரி டிரைவர்களிடம் காணப்படுகிறது. எனவே ஓரளவிற்காவது பாதுகாப்பு வழங்கும் விதமாக அவர்களுக்கு இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்வது அவசியம்'' என்றனர். இந்த சூழலில் லாரி தொழில் துறை தனது முழு திறனில் தற்போதைக்கு 60 சதவீதம் வரை மட்டுமே இயங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தினமும் சரியாக மதியம் 1 மணிக்கு 1 நிமிடம் ஹாரன் அடிக்க போகும் லாரி டிரைவர்கள்... எதற்காக தெரியுமா?

இந்தியாவில் தற்போதைய நிலையில் 8 மில்லியன் லாரிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் 3 மில்லியன் லாரிகள் இன்னும் ஓடாமல் இருப்பதாக கூறப்படுகிறது. தொழில்துறை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாத காரணத்தால் ஏராளமான லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 30, 2020, 23:59 [IST]
English summary
Lorry Drivers To Blow Horn For A Minute To Seek Health Insurance: Details. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+