Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
சூப்பர் பைக் ரைடர் ஒருவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர் பைக்குகளை வைத்திருப்பதும், அவற்றுடன் வாழ்வதும் நாம் நினைப்பதை விட வித்தியாசமானது. சூப்பர் பைக்குகள் மிக எளிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடும். இதன் காரணமாக சூப்பர் பைக் ரைடர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த சூழலில் குறுகலான சாலையில் சென்ற சூப்பர் பைக் ரைடர் ஒருவர் தற்போது பிரச்னையில் சிக்கி கொண்டுள்ளார்.

இந்த பிரச்னையை விளக்கும் வீடியோ லைஃப் மோட்டோ வேர்ல்டு என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில், அந்த பைக் ரைடரை காவல் துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, அந்த நபர் மேற்கு வங்க மாநிலத்தின் குறுகலான சாலை ஒன்றில் பைக்கில் பயணித்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட தெருவில் மூன்று, நான்கு முறை பைக்கில் பயணம் செய்ததாக அந்த ரைடர் கூறுகிறார். ஆனால் அடுத்த முறை அந்த தெரு வழியாக சென்றபோது, பைக்கின் அதிகப்படியான சத்தம் காரணமாக அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரு குடும்பத்தை சேர்ந்த சிலர் பைக் ரைடரை நோக்கி கத்துவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது.

வீட்டில் வயதானவர் இருப்பதாகவும், அவர் இதய நோயாளி எனவும் அவர்கள் கூறுகின்றனர். பைக் அதிக சத்தம் எழுப்பினால், அவரின் உடல் நிலை மோசமடையக்கூடும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதைக்கேட்ட பைக் ரைடர் அவர்களிடம் மன்னிப்பு கோரினார். மேலும் இனிமேல் இந்த தெருவிற்கு பைக்கை ஓட்டி வர மாட்டேன் எனவும் தெரிவித்தார்.

ஆனால் இந்த பதில், அந்த குடும்பத்தினருக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. அவர்கள் தொடர்ந்து பைக் ரைடரை பார்த்து கத்தினர். இதன்பின் பைக் ரைடர் தனது தந்தையை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். ஆனால் அந்த குடும்பத்தினரோ அவரது தந்தையிடமும் கத்தினர். எனவே பைக் ரைடரின் தந்தை வேலை செய்யும் தொழிற்சாலையின் உரிமையாளரும் சம்பவ இடத்திற்கு வந்தார்.

ஆனால் அவரையும் அந்த குடும்பத்தினர் பேச விடாமல் தடுத்ததாக தெரிகிறது. நீண்ட வாக்குவாதத்திற்கு பின், காவல் துறையினர் அங்கு வந்தனர். அப்போது பைக் ரைடர் ஹெல்மெட்டுடன் இணைக்கப்பட்ட கேமராவில் அங்கு நடக்கும் சம்பவங்களை எல்லாம் பதிவு செய்வதாகவும், இது சட்ட விரோதம் எனவும் காவல் துறையினரிடம் அந்த குடும்பத்தினர் கூறினர்.

ஹெல்மெட்டை பிடுங்கி எறிந்து விடுவோம் என்கிற ரீதியில் அவர்கள் அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன்பின் அந்த பைக் ரைடர் ஹெல்மெட்டை கழற்றி விட்டார். ஆனால் அவர் கேமராவை 'ஆஃப்' செய்யவில்லை. இதற்கிடையே அந்த ரைடர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் எவ்வளவு சத்தம் எழுப்புகிறது? என்பதை புரிந்து கொள்ள காவல் துறையினர் முயன்றனர்.

காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு அந்த பைக்கின் உரிமையாளருடன் சிறிது தூரம் சென்று விட்டு வந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் அந்த குடும்பத்தினர் எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார் காரணமாக பைக் ரைடரை காவல் துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் காவல் துறையினர் அவரை சில மணி நேரம் காவல் நிலையத்தில் இருக்க வைத்து விட்டு, அதன்பின் விடுவித்து விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில சமயங்களில் சூப்பர் பைக்குகள் தேவையில்லாமல் ஒருவரின் கவனத்தை ஈர்த்து விடும். இதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்.

உண்மையில் இந்தியாவில் சூப்பர் பைக்குகளை வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. குறிப்பாக பொறாமை குணம் கொண்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நீங்கள் சூப்பர் பைக் வைத்திருந்தால் சிக்கல்தான். இங்கே இந்த பைக் ரைடர் உதவி கோரியுள்ளார். தன்னை கைது செய்தது நியாயமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் பைக் அதிக சத்தம் எழுப்பியதற்காக பல முறை மன்னிப்பு கேட்ட பிறகும், தன்னிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் சரியானதா? எனவும் அவர் கேட்டுள்ளார். இத்தனைக்கும் இந்த பைக் மாஃடிபிகேஷன் செய்யப்படவில்லை. உற்பத்தி நிறுவனம் எப்படி வழங்கியதோ அப்படியேதான் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.