பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காருக்கான ஆடம்பர பேக்குகள் அறிமுகம்
ஆடம்பர கார் மற்றும் பைக் நிறுவனங்கள் விலை மதிப்புமிக்க கடிகாரங்களை காருடன் சேர்த்து வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், பிரான்சை சேர்ந்த பாரம்பரியம் மிக்க ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லூயிஸ் விட்டன் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காருக்கு ஆடம்பர சூட்கேஸ் மற்றும் பைகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த உயர்தர பைகள் மற்றும் பெட்டி பிஎம்டபிள்யூ ஐ8 காரின் டிசைன் தாத்பரியங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

4 ஆடம்பர பைகள்
ஒரு பிசினஸ் கேஸ், ஒரு கார்மென்ட் பேக் உள்பட 4 ஸ்பெஷல் எடிசன் பைகளை பிஎம்டபிள்யூ ஐ8 காருக்காக லூயிஸ் விட்டன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இடவசதி
ஒவ்வொரு பேக்கையும் காரின் ஒரு பகுதியில் கச்சிதமாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீக்கெண்டர் பேக்கை காரின் பூட் ரூமிலும், கார்மென்ட் பேக்கை பார்சல் செல்ஃபிலும் வைத்துக் கொள்ளலாம். பிசினஸ் கேஸ் பெட்டியையும் மற்றொரு சிறிய பையையும் பின்புற இருக்கைக்கு கச்சிதமாக பொருந்தும்.

விற்பனை
வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் மூனிச், மிலன், லண்டன், மாஸ்கோ, துபாய் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட சர்வதேச அளவில் இருக்கும் லூயிஸ் விட்டன் ஷோரூம்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் பைகள் விற்பனைக்கு வருகின்றன.

டிசைன்
காரின் வண்ணத்தை பிரதிபலிக்கும் விதத்தில் கருப்பு, நீல நிறத்தில் இந்த பைகள் இருக்கின்றன. மேலும், ஆடம்பரம் மிளிரும் வகையில், தனது பாரம்பரிய பேட்ஜ்கள் பொறித்து இந்த ஸ்பெஷல் எடிசன் பைகளை லூயிஸ் விட்டன் வடிவமைத்துள்ளது.

கார்பன் ஃபைபர்
பிஎம்டபிள்யூ ஐ8 காரைப் போன்றே இந்த இந்த பைகளும், பெட்டியும் கார்பன் ஃபைபரில்தான் தயாரிக்கப்பட்டுள்ளன. லெதர் கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வரும் 1ந் தேதி முதல் ஆர்டரின் பேரில் இந்த ஆடம்பர பொருட்களை முன்பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








