கண்ட்ரோல் பண்ண முடியல! பைக்கை பெட்ரூமாக ஆக்கிய இளம் காதல் ஜோடி! இன்னும் 18 வயசு ஆகாதவங்க வீடியோவை பாக்காதீங்க!
டூவீலர்களில் பயணம் செய்யும்போது, ஒரு சில இளைஞர்களும், இளம்பெண்களும் சமீப காலமாக மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்கின்றனர். இந்த சம்பவங்களின் வைரல் வீடியோக்கள் (Viral Videos) சமூக வலை தளங்களில் காட்டுத்தீ போல பரவி, காண்பவர்களை முகம் சுழிக்க வைக்கின்றன.
கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான ஒரு வீடியோவில், டூவீலர் ஒன்றில் 2 இளம்பெண்கள் உதட்டோடு உதடு முத்தமிட்டு கொண்டும், கட்டி அணைத்து கொண்டும் பயணம் செய்ததை நம்மால் காண முடிந்தது. அதற்கு பின் வெளியான ஒரு வீடியோவில், 2 இளைஞர்கள் முத்தமிட்டு கொண்டு டூவீலரில் சென்றதை நாம் பார்த்தோம்.

இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பைக் ஒன்றில் ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் கட்டி அணைத்து கொண்டு பயணம் செய்யும் புதிய வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இளைஞர் பைக்கை ஓட்டும் நிலையில், அந்த இளம்பெண் பெட்ரோல் டேங்க்கின் மீது அமர்ந்து கொண்டு பயணம் செய்கிறார். ஆனால் அவர் அமைதியாக எல்லாம் இல்லை. அந்த இளைஞரை இறுக்கமாக கட்டி அணைத்தபடியே பயணம் செய்கிறார். அந்த வழியாக சென்றவர்கள், இதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் காதலர்கள் என கூறப்படுகிறது. இருப்பினும் பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது? என சமூக வலை தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போதெல்லாம் இளைஞர்களும், இளம்பெண்களும் டூவீலர்களையே பெட்ரூம்-ஆக மாற்றி விட்டார்கள் எனவும் சமூக வலை தளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருவதை காண முடிகிறது.
இதுபோன்ற நிகழ்வுகள், நாகரீகமற்றது என்பதையும் கடந்து, மிகவும் ஆபத்தானது என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியம். குறிப்பாக தற்போது நிகழ்ந்துள்ள சம்பவத்தில், 2 பேருமே ஹெல்மெட் அணியவில்லை. ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருக்கும்போது சாலை விபத்தில் சிக்கினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
அத்துடன் இதுபோன்ற பயணங்கள், மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடியவை. முதலில் மற்றவர்களின் கவனம் சிதறி விபத்து நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இரண்டாவது இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபடுபவர்களே, திடீரென வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சிக்கி கொள்ளலாம். எனவே இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. ஆம், தற்போது பைக்கில் எல்லை மீறி நடந்து கொண்ட நபர்கள் காவல் துறையிடம் சிக்கி கொண்டுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் நகரில் அரங்கேறியுள்ளது. இதையடுத்து காஸியாபாத் காவல் துறை அதிகாரிகள், அவர்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதம் (Fine) விதித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது இடங்களில் அநாகரீகமாகவும், விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையிலும் நடந்து கொள்பவர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் பயத்தின் காரணமாக மற்றவர்கள் இதுபோல் நடந்து கொள்ள மாட்டார்கள். இல்லாவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டேதான் இருக்கும்.


Click it and Unblock the Notifications








