சென்னை எல்லாம் ஓரமா போ! கோவை, சேலம், மதுரைக்கும் தாழ்தள பஸ் வரப்போகுது!
சென்னையை தொடர்ந்து கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, ஆகிய பகுதிகளிலும் தாழ்தள பஸ்களின் பயன்பாடு அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடைந்து பஸ்களுக்கான ஆர்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் கடந்த மாதம் தாழ்தள பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் மாற்றுத்திறனாளிகள் முதல் வயதானவர்கள் வரை எளிதாக பஸ்களில் ஏற, இறங்க முடியும் என்பதால் இந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சிட்டி பயன்பாட்டிற்காக இந்த பஸ்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றது. இந்நிலையில் சென்னையை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த பஸ்களை அறிமுகப்படுத்த தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நகர பயன்பாட்டிற்காக தாழ்தள பஸ்களை வாங்க தற்போது அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 1552 பஸ்கள் ஆர்டர் வழங்க முடிவு செய்யப்பட்டன. இந்த பஸ்கள் எல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படாத திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ்களுக்கான ஆர்டர்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த பஸ்களை வாங்குவதற்கான நிதியை ஜேர்மன் அபிவிருத்தி வங்கியின் தரப்பிலிருந்து வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே எம்டிசி பஸ்களை வாங்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அது அதற்கான பஸ்கள் எல்லாம் தற்போது சென்னை மாநகராட்சி பகுதியை இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கான நிதி ஒதுக்கப்பட உள்ளது. இந்த நிதியின் கீழ் பெறப்படும் பஸ்கள் கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு தலா 100 பஸ்களை முதற்கட்டமாக வாங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த 200 பஸ்களுடன் சேர்த்து மொத்தம் 552 தாழ்தள பஸ்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்கள் எல்லாம் தற்போது செயல்பாட்டில் இருக்கும் பஸ்களை போல அல்லாமல் , பஸ்ஸின் முன்பக்கமும், மத்திய பகுதியில் மட்டுமே கதவுகள் இருக்கும். இந்த கதவுகள் தானியங்கி கதவுகளாக வழங்கப்பட்டுள்ளன. இந்த கதவுகளை அடைத்தால் மட்டுமே பஸ்கள் நகரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது போக கூடுதலாக கேஎஃப்டபிள்யூ நிதியிலிருந்து மொத்தம் 1771 பிஎஸ் 6 டீசல் பஸ் விலை வாங்குவதற்காக மற்றொரு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் தாழ்தள பஸ்களாக அல்லாமல் சாதாரண பஸ்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி எம்டிசிக்கு 245 பஸ்களும், டிஎன்எஸ்டிசி விழுப்புரம் கிளைக்கு 347 பஸ்களும், சேலம் கும்பகோணம் மாநகராட்சி பகுதிக்கு தலா 303 பஸ்களும் வழங்கப்படுகின்றன.

இதுபோக மதுரை மற்றும் கோவை ஆகிய பகுதிகளுக்கு முறையே 251 மற்றும் 155 பஸ்களும், திருநெல்வேலிக்கு 50 பஸ்களும் வழங்கப்பட்டு இந்த பஸ்கள் எல்லாம் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதுபோக எலெக்ட்ரிக் பஸ்கள் தனியார் மூலம் இயக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தனியார் மூலம் இயங்கும் பஸ்களுக்கு டீசல் பஸ்கள் போல இல்லாமல் பல விஷயங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வழங்கப்படும் எலெக்ட்ரிக் பஸ்கள் எல்லாம் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்படுகின்றன. இந்த பஸ்களை தமிழக அரசு வாங்கி தனியார் மூலம் இயக்கும் பஸ்ஸில் உள்ள பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் ஆகிய விஷயங்களை எல்லாம் தனியார் நிறுவனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பஸ்ஸில் கலெக்ஷனை தமிழக அரசு பார்த்துக் கொள்ளும் ஒவ்வொரு பஸ்ஸுக்கும் ஒரு கிலோமீட்டர் பயணத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு இவ்வளவு ரூபாய் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்படும்.
இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தமிழகத்தில் எங்கு எல்லாம் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க முடியுமா? அங்கெல்லாம் எலெக்ட்ரிக் பஸ்ஸில் அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஏகப்பட்ட பணம் லாபமாக கிடைக்கும். டீசல் பஸ்க்களை விட எலெக்ட்ரிக் பஸ்கள் அதிகமாக இருப்பதால் தமிழக அரசு அதை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையை தொடர்ந்து தற்போது மதுரை கோவை திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் தாழ்தள சொகுசு பஸ்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பது பெரும் ஆச்சரியமான விஷயம் தான். இதை அந்தந்த மாவட்ட மக்கள் அதிகமாக வரவேற்பார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் பலன் பெறும் வகையில் இந்த பஸ்கள் அமையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









