முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
இந்திய ரயில்வேயில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் லோயர் பெர்த் கிடைப்பதுதான். பெரும்பாலும் வயதானவர்கள் பயணிக்கும் ரயில் பயணத்தில் அவர்களுக்கு லோயர் பெர்த் இல்லாமல் அப்பர் பெர்த் கிடைக்கிறது. இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் லோயர் பெர்த் பெற ரயில்வே நிர்வாகம் புது ரூல்ஸ் ஒன்றை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தினம் தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணிக்கிறது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. இந்த முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் விரும்புவது லோயர் பெத் தான். குறிப்பாக வயதானவர்கள் பலர் லோயர் பெர்த்தில்தான் பயணம் செய்ய விரும்புகிறார்கள். அவர்களால் மேலே ஏறி பயணம் செய்ய முடியாது.

ஆனால் ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட்களை புக் செய்யும் போது பயணிகளுக்கு லோயர் பெர்த் கிடைப்பது என்பது ஒரு சிரமமான விஷயமாக இருக்கிறது. இதனால் பயணிகள் மத்தியில் ஐஆர்சிடிசியில் வயதானவர்களுக்கு நிச்சயம் லோயர் பெர்த்தை அலர்ட் செய்யும் வகையில் அதன் சிஸ்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் தற்போது ரயில் டிக்கெட் அலார்ட் செய்யும் முறை குறித்த சில முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் டிக்கெட்களை புக் செய்பவர்களுக்கு ஏன் முதியவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் லோயர் பெர்த் கிடைப்பதில்லை என்பதற்கு விளக்கமும் அளித்துள்ளனர். இது நாம் டிக்கெட் புக் செய்யும் போது செய்யும் தவறுகளால் நடக்கும் விஷயம் எனவும் கூறியுள்ளனர்.

டிக்கெட்டுகளை புக் செய்யும் முன்னர் நிச்சயமாக லோயர் பெர்த் இருந்தால் மட்டுமே டிக்கெட்டுகளை புக் செய்ய வேண்டும் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அந்த ஆப்ஷனை டிக் செய்தால் டிக்கெட் புக் ஆகும்போது லோயர் பெர்த்தில் டிக்கெட் இருந்தால் மட்டுமே டிக்கெட் புக் ஆகும். இல்லை என்றால் டிக்கெட் புக் ஆகாமல் ரத்தாகிவிடும். இந்த ஆப்ஷன் ரயில்வே நிர்வாகம் முதியவர்களுக்காகவே ஸ்பெஷலாக வழங்கியுள்ளது.
ரயிலில் பயணிக்கும் முதியவர்கள் மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் சரியில்லாதவர்கள் என பல்வேறு வகையான மக்களுக்கு லோயர் பெர்த் தான் தேவை. இதனால் குறிப்பிட்ட பயணிகளுக்கு லோயர் பெர்த் தான் கட்டாயம் வேண்டுமா? வேண்டாமா? என பிரிப்பது கடினமான விஷயமாக இருக்கிறது. இதனால் லோயர் பெர்த்தை டிக்கெட் தேர்வு செய்யும் போதே வழங்குவது என்பது சாத்தியமில்லாத விஷயமாக இருக்கிறது.

ஆனால் கட்டாயம் லோயர் பெர்த் தேவைப்படும் பயணிகளுக்கு ஒரு ஆப்ஷன் ஒன்றை ஏற்கனவே ஐஆர்சிடிசி நிர்வாகம் வழங்கி வருகிறது. அதன்படி லோயர் பெர்த் இருந்தால் மட்டுமே டிக்கெட்டுகளை புக் செய்ய வேண்டும் என்ற ஆப்ஷனை டிக் செய்து புக் செய்தால் குறிப்பிட்ட பயணிக்கு லோயர் பெர்த் மட்டுமே கிடைக்கும். லோயர் பெர்த்தில் டிக்கெட் இல்லை என்றால் டிக்கெட் புக் ஆகாமல் தவிர்க்கப்பட்டு விடும்.
தற்போது வரை ஐஆர்சிடிசி நிர்வாகம் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் லோயர் பெர்த்தை வழங்குகிறது. அதனால் முதலில் புக் செய்பவர்கள் லோயர்பெர்த்தை தேர்வு செய்து புக் செய்து விட்டால் அவர்களுக்கு அந்த பெர்த் வழங்கப்படும். அவர்களது வயது உள்ளிட்ட எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள். ஒருவருக்கு லோயர் பெர்த் புக்கான உடன் அதன்பின்பு வயதானவர் வந்தாலும் அவருக்கு லோயர் பெர்த் பெற்று கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.
இதனால் தற்போது லோயர் பெர்த் கட்டாயம் வேண்டும் என்பவர்கள் கட்டாயம் லோயர் பெர்த்தில் டிக்கெட் புக் செய்ய இருக்கும் ஒரே ஆப்ஷன் முடிந்தளவு சீக்கிரம் டிக்கெட் புக் செய்வதுதான். விரைவாக டிக்கெட் புக் செய்து விட்டால் லோயர் பெர்த் கிடைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. லோயர் பெர்த் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டால் அடுத்து அதே ரயிலில் லோயர் பெர்த் கிடைக்க வாய்ப்பு குறைவு தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் பயணிக்கும் பயணிகள் பலருக்கு இந்த லோயர் பெர்த் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தற்போது ஐஆர்சிடிசி நிர்வாகம் பெரிய அளவில் எந்த தீர்வையும் கொண்டு வரவில்லை. இருக்கும் ஆப்ஷனை மட்டுமே விளக்கமாக அளித்துள்ளது. நீங்கள் இந்த ஆப்ஷனை தேர்வு செய்து டிக்கெட்டை புக் செய்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









