பாரத் பெட்ரோல் பங்குகளில் சீக்கிரமே இந்த கருவிகளை பார்க்கலாம்.. உடனே இன்ஸ்டால் செய்ய ஆர்டர் கொடுத்திருக்காங்க!
இந்தியாவின் முன்னணி ஆயில் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் உள்ளது. ஐசிஇ வாகனங்களைத் தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கும் சேவை வழங்கும் பணியில் இது மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே அதி-நவீன வசதிகள் கொண்ட கருவியை மின்சார வாகனங்களுக்காக வாங்க அது முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் திறன் கொண்ட சார்ஜிங் கருவிகளுக்கே ஆர்டரை வழங்கி இருக்கின்றது. லூபி இன்டஸ்ட்ரீஸிடமே அது தன்னுடைய ஆர்டரைக் கொடுத்திருக்கின்றது.
இது ஓர் மின்சார வாகனங்களுக்கான முக்கிய கருவிகளை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கருவிகள் உள்ளன. இதையே இவர்களிடம் இருந்து வாங்கி, தன்னுடைய முக்கிய ஆயில் விற்பனையகங்களில் பயன்பாட்டிற்கிக் கொண்டு வர இருக்கின்றது, பாரத் பெட்ரோலியம்.

சுமார் 1,400 ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட டிசி இவி சார்ஜர்களுக்கே அது ஆர்டரை வழங்கி இருக்கின்றது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதேபோல், அவற்றிற்கான அடிப்படை வசதிகளின் தேவையும் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையிலேயே அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் வசதிக் கொண்ட சார்ஜிங் கருவிகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் பாரத் பெட்ரோலியம் தற்போது களமிறங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக நாட்டில் மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் சற்றே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
60 kW ஃபாஸ்ட் டிசி மின் வாகன சார்ஜிங் கருவிகளே பாரத் பெட்ரோலியம் மையங்களில் பொருத்தப்பட இருக்கின்றன. தற்போது ஆர்டர் செய்யப்பட்டு இருக்கும் சார்ஜிங் கருவிகள் எப்போதில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என்பது தெரயவில்லை. விரைவிலேயே அவை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, அனைத்தும் பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. லூபி நிறுவனத்தின் சார்ஜிங் கருவிகள் அனைத்து மின்சார வாகனங்களுக்குமானது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதனால், எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக வேகத்தில் சார்ஜ் செய்வது மட்டுமல்ல, அதிக பாதுகாப்பாகவும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
பாரத் பெட்ரோலியம் மட்டுமல்ல இன்னும் பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றன. ஆகையால், முன்பைவிட இப்போது நாட்டில் சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, நகரங்களிலேயே இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே இவற்றின் எண்ணிக்கையை இன்னும் சிறிதளவு அதிகரிக்கச் செய்யும் பொருட்டு பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் களமிறங்கி இருக்கின்றன. வாகன உற்பத்தியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை அதிக அளவில் உருவாக்கும் முயற்யிலும் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அதாவது, முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை வழங்கும் மையங்களை உருவாக்கும் பணியிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இவை எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய பெரும் உதவியாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வாகன உற்பத்தியாளர்களும் மிக அதிக எண்ணிக்கையில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் அதன் இரண்டு புதுமுக இ-கார்களை நாட்டில் அறிமுகப்படுத்தியது. விரைவில் ஹூண்டாய் மற்றும் மாருதியும்கூட தங்களின் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.


Click it and Unblock the Notifications








