சொந்தமாக விமானம் வாங்கிய 18 வயது இளம்பெண்! விலை இத்தன கோடியா! அருணாச்சலம் ரஜினி மாதிரி காசை அள்ளி வீசறாங்க!

வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் (Airplane) பறக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலரது மனதிலும் உள்ளது. ஆனால் டிக்கெட் கட்டணம் (Ticket Price) மிகவும் அதிகம் என்பதால், பலராலும் இன்று வரை அந்த கனவை நிறைவேற்றி கொள்ள முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

அத்துடன் சொந்த கார் கனவை நிறைவேற்றி கொள்ள முடியாமலும் இங்கே பலர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் இந்த செய்தி பொறாமையை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தலாம். ஏனெனில் வெறும் 18 வயது மட்டுமே ஆன இளம்பெண் ஒருவர் சொந்தமாக விமானம் வாங்கியிருப்பதுடன், 5 மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) கார்களையும் வாங்கியுள்ளார். அவரது வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த ஒரு அதிசயம்தான் இதற்கு எல்லாம் காரணம்.

சொந்தமாக விமானம் வாங்கிய 18 வயது இளம்பெண்! விலை இத்தன கோடியா! அருணாச்சலம் ரஜினி மாதிரி காசை அள்ளி வீசறாங்க!

தாத்தா சொன்ன ஐடியா!

கனடாவை (Canada) சேர்ந்தவர் ஜூலியட் லமோர் (Juliette Lamour). இவர் சமீபத்தில் தனது 18வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு ஸ்பெஷலாக ஏதாவது வாங்கலாம் என அவர் கடைக்கு சென்றிருந்தார். ஆனால் என்ன வாங்குவது? என்று அவருக்கு தெரியவில்லை. அப்போது லாட்டரி (Lottery) வாங்கும்படி அவரது தாத்தா யோசனை கூறியுள்ளார். அந்த யோசனைதான் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஜூலியட் லமோர் இதற்கு முன்பு லாட்டரி வாங்கியது கிடையாது. எனவே அவருக்கு எப்படி லாட்டரி வாங்க வேண்டும்? என்பதும் தெரியாது. ஆனால் அவரது தாத்தா அவருக்கு உதவி செய்துள்ளார். லாட்டரி வாங்கிய பின்னர், அவர் அதை அப்படியே மறந்து விட்டார். ஆனால் சில நாட்கள் கடந்த பின், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கு லாட்டரியில் பரிசு கிடைத்திருப்பது குறித்த செய்தி அவருக்கு தெரியவந்தது. அப்போதுதான் நாமும் லாட்டரி வாங்கினோமே என்ற சிந்தனையே ஜூலியட் லமோருக்கு வந்துள்ளது.

சொந்தமாக விமானம் வாங்கிய 18 வயது இளம்பெண்! விலை இத்தன கோடியா! அருணாச்சலம் ரஜினி மாதிரி காசை அள்ளி வீசறாங்க!

ஆத்தாடி... இத்தன கோடியா!

எனவே ஏதாவது பரிசு விழுந்துள்ளதா? என அவர் 'செக்' செய்தார். அப்போதுதான் நிகழ்ந்தது அந்த அதிசயம். ஆம், ஜூலியட் லமோருக்கு இந்திய மதிப்பில் சுமார் 290 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருந்தது. இதனால் ஜூலியட் லமோர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார். இந்த நல்ல செய்தியை உடனடியாக அவர் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டார். இதன்பின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 என மொத்தம் 5 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை அவர் வாங்கினார். இந்த கார்கள் ஒவ்வொன்றின் விலையும் இந்திய மதிப்பில் தலா 2 கோடி ரூபாய் ஆகும்.

விமானத்தின் விலை தலை சுத்த வைக்குது!

இதுதவிர சொந்தமாக விமானம் ஒன்றையும் ஜூலியட் லமோர் வாங்கி விட்டார். இந்த விமானத்தின் விலை இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சொந்தமாக ஒரு கார் வாங்க முடியாமலும், ஒரு முறை கூட விமானத்தில் பறக்க முடியாமலும் நிறைய பேர் வருத்தப்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில், லாட்டரி மூலம் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் கிடைப்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல.

பங்களா வேறயா!

இவை எல்லாம் தவிர லண்டன் நகரில் 40 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா ஒன்றையும் ஜூலியட் லமோர் வாங்கியுள்ளார். எஞ்சிய பணத்தை தனது எதிர்காலத்திற்காக அவர் சேமித்து வைத்துள்ளார். டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஜூலியட் லமோரின் ஆசையாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை லாட்டரிக்கு தடை உள்ளது. பல குடும்பங்கள் சீரழிவதாக எழுந்த புகார்களையடுத்து, லாட்டரிக்கு அரசு அதிரடியாக தடை விதித்து விட்டது.

நம்ம வாழ்க்கையில நடக்காதா?

ஆனால் லாட்டரி மூலம் அவ்வப்போது இதுபோன்ற அதிசயங்களும் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. லாட்டரி மூலம் ஆட்டோ டிரைவர்கள் போன்ற ஏழைகள் கூட ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட இதுபோன்ற அதிசயங்கள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற அதிசயங்கள் எல்லாம் நம் வாழ்வில் நடக்காதா? என்ற ஏக்கத்தை இத்தகைய செய்திகள் பலரது மனதிலும் ஏற்படுத்துகின்றன.

Article Published On: Thursday, February 9, 2023, 15:24 [IST]
English summary
Lucky teenager buys 5 mercedes benz cars and a plane all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+