8 கோடி ரூபாய் காரில் வலம் வந்த சூப்பர்ஸ்டார்! கூட இருக்கறது பெரிய கை ஆச்சே! அவரே கார் ஓட்னதுலாம் பெரிய விஷயம்!

இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் பலர் வெளிநாடுகளில் வெற்றி கொடி நாட்டி வருகின்றனர். இதில், யூசுஃப் அலி (Yusuff Ali) மிகவும் முக்கியமானவர். கேரளாவை (Kerala) சேர்ந்த இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE - United Arab Emirates) வெற்றிகரமான தொழில் அதிபர்களில் ஒருவராக உள்ளார்.

லூலூ குரூப் இன்டர்நேஷனல் (Lulu Group International) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக (Managing Director) யூசுஃப் அலி இருந்து வருகிறார். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில், பல்வேறு ஷாப்பிங் மால்கள் (Shopping Malls) மற்றும் ஹைப்பர் மார்க்கெட்களை (Hypermarkets) யூசுஃப் அலி வைத்துள்ளார். இந்த சூழலில், யூசுஃப் அலி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajnikanth) ஆகிய இருவரும் மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) காரில் ஒன்றாக வலம் வந்த வைரல் வீடியோ (Viral Video) இணையத்தில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Rolls Royce Cullinan

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை (Golden Visa), ரஜினிகாந்த் பெற்றுள்ளார். இதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு (Abu Dhabi) ரஜினிகாந்த் சென்றுள்ளார். அப்போதுதான் யூசுஃப் அலியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் ஒன்றாக வலம் வந்துள்ளனர்.

பொதுவாக பிரபல மனிதர்கள் எல்லாம் காரின் பின் இருக்கையில் அமர்ந்துதான் பயணம் செய்வார்கள். ஆனால் இந்த வீடியோவிலோ, யூசுஃப் அலி காரை ஓட்ட, ரஜினிகாந்த் அவருக்கு அருகே உள்ள முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். எனவே இந்த வைரல் வீடியோ, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

Yusuff Ali Takes Rajnikanth For A Spin In Rolls Royce Cullinan

இந்த வீடியோவில் நாம் பார்க்கும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் இதுதான் ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய முதல் சொகுசு எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த காரில், 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 569 பிஹெச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் இணைக்கப்பட்டிருப்பது, 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் ஆரம்ப விலையே 6.95 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமாராக 8.20 கோடி ரூபாய் வரை வரும்.

அதிலும் மாடிஃபிகேஷன்களை மேற்கொண்டால், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை இன்னும் உயர்ந்து விடும். மேற்கொண்டு எவ்வளவு உயரும்? என்பது வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் மாடிஃபிகேஷன்களை பொறுத்தது. யூசுஃப் அலியை பொறுத்தவரையில், இந்தியாவில் ஒன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்று என மொத்தம் 2 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

யூசுஃப் அலி தவிர இன்னும் பல்வேறு பிரபலங்களும், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வைத்துள்ளனர். இதில், முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பம் மிகவும் முக்கியமானது. யூசுஃப் அலியை போல், முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடமும் நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: யூசுஃப் அலியிடம் நிறைய சொகுசு கார்கள் உள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ மிகவும் எளிமையான வாழ்க்கையை விரும்ப கூடியவர். டொயோட்டா இன்னோவா (Toyota Innova) போன்ற எளிமையான கார்களில் பயணம் செய்வதைதான் ரஜினிகாந்த் விரும்புவார். எனவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் சொகுசு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 28, 2024, 14:28 [IST]
English summary
Lulu mall owner yusuff ali takes rajnikanth for a spin in rolls royce cullinan viral video
மேலும்... #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+