மனைவி, குழந்தைகள் உடன் ஷோரூமில் நிற்கும் இவர் இவ்வளவு பெரிய பணக்காரரா? ஃபேமலியா பயணிக்க சரியான கார்!

ஐடி (IT) வேலைக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. அவ்வாறு கேரளாவில் செயல்படும் ஐடி பயிற்சி நிறுவனங்களுள் ஒன்று, லூமினார் டெக்னோலேப் (Luminar Technolab) ஆகும். கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தப்புரம் என 3 நகரங்களில் லூமினார் டெக்னோலேப்-க்கு சொந்தமான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்தின் சிஇஓ (CEO) ஆக இருப்பவர், ராகுல் எம் குமார் (Rahul M Kumar) ஆவார். இவர் தற்போது புதியதாக டிஃபெண்டர் (Defender) கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தால் உருவாக்கப்படும் டிஃபெண்டர் கார்களுக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், லேண்ட் ரோவர் நிறுவனம் உருவாக்குவதிலேயே ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் டிஃபெண்டர் கார்களுக்கே உலகம் முழுக்க தொடர்ந்து கஸ்டமர்கள் பெருகி வருகின்றனர்.

rahul m kumar buys defender

அத்தகைய கார்களுள் ஒன்றான டிஃபெண்டரை கேரளாவின் நம்பர் ஒன் சாஃப்ட்வேர் பயிற்சி நிறுவனமான லூமினார் டெக்னோலேப் நிறுவனத்தின் சிஇஓ வாங்கியுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகள் உடன் புதிய டிஃபெண்டர் காரை ஷோரூமில் சிஇஓ ராகுல் எம் குமார் டெலிவிரி பெறும் வீடியோவை சம்பந்தப்பட்ட லேண்ட் ரோவர் டீலர்ஷிப் ஷோரூம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

இவர் வாங்கியிருப்பது டிஃபெண்டர் 110 கார் ஆகும். இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் மொத்தம் 3 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. 90, 110 மற்றும் 130 என்பன அந்த 3 வெர்சன்கள் ஆகும். 90, 110 மற்றும் 130 என்பன காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தை குறிக்கின்றன.

rahul m kumar buys defender

இதில், டிஃபெண்டர் 110 ஆனது பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றுள், டிஃபெண்டர் 110 எக்ஸ்-டைனாமிக் எச்.எஸ்.இ (X-Dynamic HSE) வேரியண்ட்டை ராகுல் எம் குமார் வாங்கி உள்ளார். இந்த வேரியண்ட்டை பெட்ரோல் என்ஜின் அல்லது டீசல் என்ஜின் உடன் வாங்கலாம். ராகுல் எம் குமார் எந்த என்ஜின் உடன் இந்த காரை வாங்கி உள்ளார் என்பது தெரியவில்லை.

டிஃபெண்டர் 110 எக்ஸ்-டைனாமிக் எச்.எஸ்.இ ஆனது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்களிலேயே விலை குறைவானது ஆகும். அதாவது, பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கினாலும் சரி... டீசல் என்ஜின் உடன் வாங்கினாலும் சரி மற்ற டிஃபெண்டர் வேரியண்ட்களை காட்டிலும் ராகுல் எம் குமார் வாங்கி இருக்கும் வேரியண்ட்டின் விலை குறைவே.

rahul m kumar buys defender

குறைவான விலை என சொன்னாலும், இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.04 கோடியில் இருந்து ரூ.1.39 கோடி வரையில் தற்சமயம் உள்ளன. டிஃபெண்டர் 110 எக்ஸ்-டைனாமிக் எச்.எஸ்.இ கார் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 5 லிட்டர் பெட்ரோல் என 2 விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களிலும், 3 லிட்டர் டீசல் என ஒரேயொரு டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது.

டிஃபெண்டர் 90 கார் 3 கதவுகளுடன் மட்டுமே உருவாக்கப்படும் நிலையில், டிஃபெண்டர் 110 மற்றும் டிஃபெண்டர் 130 கார்கள் 5 கதவுகள் உடன் கிடைக்கின்றன. டிஃபெண்டர் 110 காரை 5-சீட்டர் அல்லது 7-சீட்டர் ஆப்ஷனில் வாங்கலாம். ஆனால், லூமினார் டெக்னோலேப் நிறுவனத்தின் சிஇஓ ராகுல் எம் குமார் எத்தனை இருக்கைகள் உடன் இந்த காரை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்களிலேயே மீடியம் அளவில் கிடைக்கும் டிஃபெண்டர் 110 காரை ராகுல் எம் குமார் வாங்கி உள்ளார். இத்தகைய காரின் விலை குறைவான வேரியண்ட்டை வாங்கி இருப்பதன் மூலம், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டிஃபெண்டர் காரை இந்த தொழிலதிபர் வாங்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 3, 2025, 22:25 [IST]
English summary
Luminar technolab training center ceo rahul m kumar buys land rover defender 110
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X