பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்! லக்ஸம்பர்க்கை பின்பற்றி அதிரடி காட்டுமா இந்தியா?

இந்தியாவில் பஸ் மற்றும் ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம் என்ற அறிவிப்பு வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

இந்திய சாலைகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. இதற்கு மக்கள் சொந்த வாகனங்களுக்கு முன்னுரிமை தருவதும் முதன்மையான காரணமாக உள்ளது. அதாவது பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து முறைகளை மக்கள் பயன்படுத்த தொடங்கினால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை கணிசமாக குறையும்.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

ஆனால் அதற்கு பதிலாக தங்களது சொந்த கார் அல்லது டூவீலர் போன்ற வாகனங்களில் பயணிப்பதற்குதான் மக்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். டூவீலர் என்றால் கூட பரவாயில்லை. சில சமயங்களில் ஒருவர் மட்டும் பயணிப்பதற்கு கூட பெரிய காரை பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. இதனால் இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்துள்ளது.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

இதுதவிர வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பால், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. எனவே பஸ் மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து முறைகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் பெரும்பாலானோர் அதனை கண்டு கொள்வதாக இல்லை. இந்த பிரச்னையில் இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று நினைத்து விட வேண்டாம்.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் மக்களை பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்த வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சூழலில், மக்கள் பொது போக்குவரத்து முறைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், உலகிற்கே முன்னோடியான திட்டத்தை லக்ஸம்பர்க் செயல்படுத்தியுள்ளது.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

அதாவது அங்கு பொது போக்குவரத்து வாகனங்களில் பொதுமக்கள் இனி இலவசமாக பயணிக்கலாம். பொது போக்குவரத்து முறைகளில் கட்டணம் வசூலிக்காமல் இலவசம் என்று அறிவித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இதன் மூலம் லக்ஸம்பர்க் (Luxembourg) பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கான காரணங்கள் என்ன? என்பதையும் லக்ஸம்பர்க் விளக்கியுள்ளது.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஆகிய காரணங்களுக்காகதான், பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய இலவசம் என்ற அறிவிப்பை லக்ஸம்பர்க் அதிரடியாக வெளியிட்டுள்ளது. அத்துடன் குறைந்த வருவாய் ஈட்டுபவர்களுக்கு உதவும் நோக்கமும் இதில் அடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

பஸ்கள், ரயில்கள் மற்றும் ட்ராம்களில் லக்ஸம்பர்க் அரசு கட்டணத்தை ஒழித்துள்ளதால், பொதுமக்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம். லக்ஸம்பர்க்கில் பொது போக்குவரத்து முறைகளில் ஸ்டாண்டர்டு கிளாசில் பயணம் செய்ய முன்பு வருடாந்திர பாஸ் முறை அமலில் இருந்தது. இதற்கு 440 யூரோக்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதாவது 485 டாலர்கள்.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

ஆனால் இனி மக்கள் ஸ்டாண்டர்டு கிளாசில் கட்டணம் செலுத்தாமல் இலவசமாகவே பயணம் செய்யலாம். எனினும் முதல் வகுப்பில் பயணிக்க வேண்டுமென்றால், ஒரு வருடத்திற்கு 660 யூரோக்களை கட்டணமாக செலுத்த வேண்டும். உலகிற்கே இது ஒரு முன்னோடி திட்டம் என்று கூறினால் மிகையல்ல. ஏனெனில் இலவசம் என்பதால், மக்கள் இனி பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த தொடங்குவர்.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

எனவே சாலைகளில் கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களின் வருகை கணிசமாக குறையும். இதனால் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு முடிவு கட்டப்படுவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் இலவசம் என்று அறிவித்தாலும் கூட, கார்களையே மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

எனவே படிப்படியாகதான் கார்களின் பயன்பாடு குறையும் என லக்ஸம்பர்க் அரசு கணித்துள்ளது. இத்தகைய திட்டங்களை இந்தியா போன்ற நாடுகளிலும் செயல்படுத்தலாம். ஏனெனில் உலகிலேயே போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியாதான். உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் டாப்-10 பட்டியலில் இந்திய நகரங்கள் அதிகளவில் உள்ளன.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

இதேபோல் காற்று மாசுபாடால், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடும் இந்தியாதான். தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 2 பிரச்னைகளுக்கும், வாகன பெருக்கம்தான் காரணமாக உள்ளது. ஏற்கனவே கூறியது போல், இந்தியாவில் பொது போக்குவரத்து முறைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

அப்படியே கொடுத்தாலும், பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே சொந்த வாகனமே மேல் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுகின்றனர். எனவே பொது போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, இலவசம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டால், இந்தியாவில் போக்குவரத்து நெரிசலும், காற்று மாசுபாடும் கணிசமாக குறையும்.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

ஆனால் லக்ஸம்பர்க் மிக சிறிய நாடு. அத்துடன் அது வளமான நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. எனவே இது போன்ற திட்டங்களை அந்நாட்டு அரசால் எளிதாக செயல்படுத்த முடியும். ஆனால் இந்தியா அப்படிப்பட்டது கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இதுபோன்ற திட்டங்களை இந்தியாவில் எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம்தான்.

பஸ், ரயில்களில் பயணம் செய்ய முழுக்க முழுக்க இலவசம்... அதிரடி காட்டுகிறதா இந்தியா? காரணம் இருக்கு...

ஆனால் நாடு முழுவதும் இல்லை என்றாலும் கூட, போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் மட்டுமாவது இதுபோன்ற திட்டங்களை கொண்டு வரலாம். அதாவது சென்னை, பெங்களூர் மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருவது குறித்து சம்பந்தப்பட்ட அரசுகளும், அதிகாரிகளும் பரிசீலிக்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Luxembourg Makes Public Transport Free To Reduce Road Congestion And Pollution. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X