நூதன திருட்டா இருக்கே... இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க...

லண்டனில் திருடப்பட்ட பென்ட்லி மூல்சேன் கார் பாகிஸ்தானில் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டு கார் எப்படி நாடு விட்டு நாடு சென்றது? இது குறித்த விரிவான விளக்கத்தை காணலாம் வாருங்கள்.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

உலகில் வாகன திருட்டு என்பது எல்லா நாடுகளிலும் நடக்கிறது. சாதாரண ஸ்கூட்டர் முதல் பஸ்கள் வரை வரை எல்லா விதமான வாகனங்களும் திருடப்படுகிறது. இப்படியாக திருடப்படும் வாகனங்கள் எல்லாம் அதன்பின்பு என்ன ஆகிறது தெரியுமா? அந்த வாகனங்கள் எல்லாம் தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

இப்படியாக பிரித்தெடுக்கப்பட்ட வாகனங்களில் உதிரிப்பாகங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காகத் தான் வாகனத் திருட்டே நடக்கிறது. ஆனால் இது எல்லாம் சாதாரண கார்களுக்கு தான் சில அதிக விலை மற்றும் பிரத்தியேக கார்கள் கூட திருடப்படுகின்றன. இப்படியாக திருடப்படும் கார்கள் பிரித்தெடுக்கப்படுவதில்லை.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

மாறாக அப்படியே கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இப்படியாக உலகின் சொகுசு கார்களின் ஒன்றான பென்ட்லி முல்சேன் என்ற கார் லண்டனில் திருடப்பட்டது. இந்த கார் ஒரு பிரத்தியேகமான மாடல் கார். பெட்லி நிறுவனம் இதுபோல உலகில் மொத்தம் 7500 கார்கள் மட்டுமே தயாரித்துள்ளது.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

இந்த காரை லண்டனைச் சேர்ந்த ஒருவர் வாங்கியிருந்தார். இந்த கார் சில மாதங்களுக்கு முன்பு திருட்டு போயிருந்தது. இது குறித்து அவர் அந்நாட்டு போலீசில் புகார் அளித்திருந்தார். இந்தக் காரை திருடினால் அதை கள்ளமார்கெட்டில் கூட விற்பனை செய்வது கடினம்.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

இந்த கார் பிரத்தியேக மாடல் என்பதாலும் உலகிலேயே வெறும் 7500 கார்கள் மட்டுமே இருப்பதாலும் இந்த கார் திருட்டை எளிதாக கண்டு பிடித்து விடலாம் என்றே அந்நாட்டு போலீசார் நினைத்தனர். ஆனால் அவர்கள் நினைத்த அளவிற்கு எளிதாக அது இல்லை. எவ்வளவு தேடியும் கார் கிடைக்கவில்லை.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

இதன்பின்தான் அந்நாட்டு போலீசாருக்கு இந்த விவகாரத்தில் போலீசாருக்கும் தெரியாத ஏதோ ஒரு பெரிய விஷயம் நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டனர். பின்னர் இந்தக் காரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என அந்நாட்டின் பல துறையினர் முயற்சி செய்தனர்.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

அப்போது தான் இவர்களுக்கு இந்த கார் பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்தது. அது எப்படி லண்டனில் திருடப்பட்ட கார் கார் பாகிஸ்தான் போனது என அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகம். பொதுவாக கார்களை நாடுவிட்டு நாடு கொண்டு கொல்ல வேண்டும் என்றால் அதற்குப் பல விதமான அனுமதிகள், சோதனைகள் எல்லாம் உள்ளன.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

இதையெல்லாம் கடந்து எப்படி இந்த கார் பாகிஸ்தானிற்கு சென்றது என அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது யாரோ சிலர் இந்த வாகனத்தை லண்டனில் திருடி அதை முறைகேடாக பதிவெண் மாற்றி பாகிஸ்தானிற்குள் இறக்குமதி செய்துள்ளனர். மேலும் இதற்கான ரூ3 கோடி வரியையும் ஏய்ப்பு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

பின்னர் லண்டனை சேர்ந்த இன்டலிஜென்ஸ் ஏஜென்ஸியின் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இப்படியாக திருடப்பட்ட கார் குறித்து அதைத் தற்போது பயன்படுத்தி வரும் நபர்கள் குறித்தும், அந்தக் காரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரியும் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கை பாகிஸ்தான் மத்திய கஸ்டம்ஸ் துறைக்கு மாற்றப்பட்டது.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

அங்கு இந்த கார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட கார் மாடல் பென்ட்லி நிறுவனத்தைச் சேர்ந்த லண்டனில் காணாமல் போன அதே முன்சேன் கார் தான் என்பது தெரியவந்தது. பின்னர் கார் குறிப்பிட்ட ஓனரின் வீட்டில் இருக்கும் போது சரியான நேரம் பார்த்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் ரைடிற்குச் சென்றனர்.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

ரைடில் குறிப்பிட்ட வாகனம் லண்டனில் திருடப்பட்ட அதே VIN எண்ணான SCBBA63Y7FC001375 என்ற எண்ணையும் இன்ஜின் எண்ணான CKB304693 என்ற எண்ணையும் கொண்டது தான் என்பதை உறுதி செய்த பின்பு இந்தக் காரை பறிமுதல் செய்தனர்.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

இந்த கார் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட காராக மாற்றப்பட்டிருந்தது. இது குறித்து அதை வைத்திருந்தவரிடம் விசாரித்த போது இந்த காரை அவர் வேறு ஒருவரிடமிருந்து வாங்கியதாக தெரிவித்தார். தற்போது அவரை பிடிக்கும் முயற்சியிலும் லண்டனிலிருந்து இந்த காரை திருடியதிலிருந்து பாகிஸ்தானிற்கு கொண்டுவந்து போலியாக பதிவு செய்து இதை பாகிஸ்தானில் விற்பனை செய்தது வரை இடையில் உள்ள அத்தனை பேரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளது.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

இது மட்டுமல்ல இப்படியாக ஒருஐடியாவை கொடுத்தது யார் இதைச் செயல்படுத்தியது யார்? இதற்குத் துணை போன அரசு அதிகாரிகள் யார் யார் என்பது உள்ளிட்ட பல விசாரணைகள் முடுக்கவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் மீட்கப்பட்ட காரை மீண்டும் லண்டனிற்கு எடுத்துச் செல்ல டிப்ளமேட்டிக் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

நூதன திருட்டா இருக்கே . . . இப்படி ஒரு கார் திருட்டை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க . . .

திருடப்பட்ட இந்த கார் வி8 இன்ஜினை கொண்டது. இந்த கார் கடைசியாக விற்பனையான விலை இந்திய மதிப்பில் ரூ5.56 கோடியாகும். இந்த காரை தற்போது பென்ட்லி நிறுவனம் தயாரிப்பதை நிறுத்திவிட்டது. மிகவும் பிரிமியம் எடிசனாக இந்த கார் விற்பனையாகியுள்ளது. இந்தச் செய்தி குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Monday, September 5, 2022, 12:54 [IST]
English summary
Luxury Bently Mulsanne car stolen from UK recovered in Pakistan know what happened
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+