விவாகரத்தான பிரபல நடிகரின் வீட்டிற்குள் இருக்கும் மினி ஷோரூம்!! ஒவ்வொன்னும் பல லட்ச ரூபாய் விலையில் இருக்கு!
நாக சைதன்யா அக்கினேனி (Akkineni Naga Chaitanya), முன்னணி தெலுங்கு நடிகர்களுள் ஒருவர். பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த மகன் மற்றும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர். இதெல்லாம் நமக்கு தெரியும். நடிகர் நாக சைதன்யாவிடம் உள்ள சூப்பர் கார்கள் மற்றும் சூப்பர் பைக்குகளை பற்றி தெரியுமா?
பி.எம்.டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூமில் பணியாற்றும் ஒருவருக்கு நாக சைந்தன்யாவின் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அந்த நபர் தனது மொபைல் போனில் நாக சைதன்யாவின் கேரேஜை காட்சிப்படுத்தியுள்ளார். சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த காட்சிகளை வீடியோவாக அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
நடிகர் நாக சைதன்யா ஆன்லைனில் புக் செய்து இருந்த பிஎம்டபிள்யூ எம்2 என்ற ஸ்போர்ட்ஸ் காரை ஹோம் டெலிவிரி கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு இந்த நபர் சென்றுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் நாக சைதன்யாவின் கேரேஜில் இருந்த கார் மற்றும் பைக்குகளை பற்றி இனி பார்க்கலாம்.

ஃபெராரி 488 (Ferrari 488): நடிகர் நாக சைதன்யாவின் கேரேஜில் இடதுபுறத்தில் இருந்து முதலாவதாக இருக்கும் கார். ஃபெராரி கார்களுக்கே உண்டான பளிச்சிடும் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த கார் இப்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. 2018இல் விற்பனையில் இருந்த சமயத்தில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.88 கோடி ஆகும்.

எம்வி அகுஸ்டா எஃப்4 (MV Augusta F4): மேலே கண்ட ஃபெராரி காருக்கு அடுத்ததாக இருக்கும் இந்த ஆற்றல்மிக்க ஸ்போர்ட்ஸ் பைக் கேரேஜிற்குள் கொஞ்சம் மறைவாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் நாக சைதன்யாவிடம் இருப்பது 2017 மாடல் ஆகும். இந்தியாவில் எப்போதோ எம்வி அகுஸ்டா நிறுவனம் கடையை மூடிவிட்டது. தற்சமயம், இந்தியாவிலேயே புனேவில் மட்டும் ஒரேயொரு டீலர்ஷிப் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

டிரையம்ப் த்ரக்ஸ்டன் ஆர் (Triumph Thruxton R): நாக சைதன்யாவின் கேரேஜில் எம்வி அகுஸ்டா பைக்கிற்கு அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த பைக்கை வீடியோவில் கொஞ்சம் தெளிவாக பார்க்க முடிகிறது. இவர் வைத்திருப்பது சிவப்பு மற்றும் கருப்பு என்கிற ட்யூயல்-டோன் நிறத்திலான த்ரக்ஸ்டன் ஆர் பைக் ஆகும். வீடியோவில், இந்த இரு நிறங்களையும் பைக்கில் பார்க்க முடிகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.10.90 லட்சம் என்கிற அளவில் உள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி (BMW R Nine T): இந்த நடிகரிடம் இருக்கும் மற்றொரு விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள் இதுவாகும். இந்த பிஎம்டபிள்யூ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17 லட்சத்தில் இருந்து ரூ.18 லட்சம் வரையில் உள்ளன. இந்த பைக்கில் 1170சிசி, ட்வின்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பைக்கிற்கு அடுத்து நாக சைதன்யாவின் கேரேஜில் டொயோட்டா வெல்ஃபையர் கார் ஒன்று உள்ளது.
போர்ஷே 911 (Porsche 911): கேரேஜிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் இது உலகம் முழுவதும் பிரபலமான போர்ஷே சூப்பர் கார் ஆகும். நாக சைதன்யா வைத்திருப்பது ஓல்டு-ஜென்ரேஷன் மாடல் ஆகும். சிவப்பு நிறத்தில் இவரிடம் இருப்பது 911 கர்ரேரா எஸ் வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டில் 3.8 லிட்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 400 பிஎஸ் மற்றும் 440 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவற்றுடன், டொயோட்டா ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக் வாகனமும் இவரிடம் உள்ளது. என்ன லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகிறது என கேட்கிறீர்களா? நடிகர் நாக சைதன்யா அந்த அளவிற்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் பிரியராக உள்ளார். இதில் சில கார் & பைக்குகள் இவரது தம்பியும், நடிகருமான அகில் அக்கினேனி வாங்கியதாக இருக்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும், சகோதரர்கள் கார்களை மாற்றி உபயோகிப்பதில் கூச்சப்பட மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications









