இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

எதன் அடிப்படையில் ஒரு காரை சொகுசு கார் என வரையறுக்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

எது சொகுசு கார்? என்பதுதான் தற்போதைய நிலையில் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாதான் இந்த விவாதங்களை கிளப்பி விட்டவர். கிருத்திகா சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தங்களிடம் ஆடி ஏ6 கார் மட்டுமே உள்ளது என்றும், சொகுசு கார் இல்லை என்றும் தெரிவித்தார்.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

அப்படியானால் ஆடி ஏ6 சொகுசு கார் இல்லையா? என சமூக வலை தளங்களில் மக்கள் கேள்வி எழுப்பினர். இதன் காரணமாக ஆடி ஏ6 காரில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? அதன் விலை எவ்வளவு? என்பது போன்ற விரிவான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியிருந்தது. ஆனால் இன்னமும் வாசகர்களுக்கு ஒரு சில சந்தேகங்கள் இருக்கின்றன.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

எதன் அடிப்படையில் ஒரு காரை சொகுசு கார் என வரையறை செய்கின்றனர்? என்பதுதான் அந்த சந்தேகம். பலருக்கும் அந்த சந்தேகம் உள்ளது. எனவே எந்தெந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து ஒரு கார் சொகுசு கார் என்று வரையறுக்கப்படுகிறது? என்பதை இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம். வாருங்கள், செய்திக்குள் செல்லலாம்.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

பொதுவாக ஒரு சில நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே சொகுசு கார்கள் வரும் என நம்பப்படுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை. எந்த நிறுவனத்திடம் இருந்து வேண்டுமானாலும் சொகுசு கார்கள் வரலாம். சராசரி தேவைகளுக்கும் அதிகமான சொகுசு வசதிகளை கொண்டிருக்கும் கார்களை சொகுசு கார் என நம்மால் வரையறுக்க முடியும்.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

சிறப்பான செயல்திறன், பகட்டான இன்டீரியர், அதிநவீன தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ள கார்களை சொகுசு கார்கள் என வகைப்படுத்தலாம். பொதுவாக மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள்தான் லக்ஸரி பிராண்ட்கள் என கருதப்படுகின்றன. ஆனால் டொயோட்டா, ஹோண்டா போன்ற நிறுவனங்களிடமும் சொகுசு கார்கள் இருக்கின்றன.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

டொயோட்டா மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கென தனியே லக்ஸரி கார் பிராண்ட்களை வைத்திருப்பது பலருக்கும் தெரியாது. டொயோட்டா நிறுவனம் லெக்ஸஸ் பிராண்டின் கீழும், ஹோண்டா நிறுவனம் அக்யூரா பிராண்டின் கீழும் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகின்றன. சொகுசு கார் சந்தையில் இந்த 2 பிராண்ட்களும் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளன.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

எனவே மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் கார்களை மட்டும் சொகுசு கார்கள் என கூற முடியாது. தற்போது பல்வேறு நிறுவனங்களும் சொகுசு கார் சந்தையில் நுழைந்து வருகின்றன. அதேபோல் ஒரு குறிப்பட்ட ரகத்தை சேர்ந்த கார் மட்டும்தான் சொகுசு காராக இருக்க முடியும் என்பதும் கிடையாது.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

அதாவது செடான் ரகத்தை சேர்ந்த கார்கள் மட்டும்தான் சொகுசு கார்களாக இருக்க முடியும் என்று பலரும் தவறாக புரிந்து வைத்துள்ளனர். ஆனால் அது உண்மை கிடையாது. செடான் ரகத்தில் ஏராளமான சொகுசு கார்கள் இருக்கும் அதே நேரத்தில், ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி ரகத்திலும் கூட பல்வேறு சொகுசு கார்கள் இருக்கின்றன.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

எனவே செக்மெண்ட்டிற்கு அப்பாற்பட்டு, செடான், ஹேட்ச்பேக், க்ராஸ்ஓவர் மற்றும் எஸ்யூவி என அனைத்து ரகத்திலும் உங்களால் சொகுசு கார்களை கண்டறிய முடியும். ஆனால் சராசரி தேவைகளுக்கு அப்பாற்பட்டு ஏராளமான அதிநவீன வசதிகளை வழங்குவதால் சொகுசு கார்களின் விலை நிச்சயமாக மிகவும் அதிகமாக இருக்கும்.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

ஒரு காரை லக்ஸரி கார் என கருதுவதில், அழகான மற்றும் சொகுசான இன்டீரியருக்கும் முக்கிய பங்குள்ளது. அனைத்து கார்களிலும் சௌகரியமான கேபினை வழங்குவதற்கு முயற்சி செய்யப்படுகிறதுதான். ஆனால் சாதாரண கார்களில் நீங்கள் பயண களைப்பை அதிகம் உணர முடியும். ஆனால் சொகுசு கார்கள் அப்படிப்பட்டவை கிடையாது.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

இந்த விஷயத்தில் அவை உண்மையிலேயே மிகவும் சிறப்பானவை. கேபினில் மிகவும் தாராளமான இடவசதி, மிகவும் சௌகரியமான மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பயண களைப்பை தவிர்ப்பதற்கான பல்வேறு வசதிகளை சொகுசு கார்கள் கொண்டிருக்கும்.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

பயண களைப்பு பெரிதாக ஏற்படாது என்பது சொகுசு கார்களின் மிக முக்கியமான அம்சம். மேலும் சொகுசு கார் நிறுவனங்கள் தங்களது டீலர்ஷிப்களையும் கூட மிகவும் ஆடம்பரமாகதான் வைத்துள்ளன. விலை உயர்ந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக டீலர்ஷிப்கள் கூட பார்த்து பார்த்துதான் வடிவமைக்கப்படுகின்றன.

இங்க நிறைய பேர் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க! உண்மையில் எதை வெச்சு ஒரு காரை சொகுசு கார்னு சொல்றாங்க தெரியுமா?

மிகவும் பிரபலமான ஒரு சில லக்ஸரி கார் பிராண்டுகள்:

  • பிஎம்டபிள்யூ
  • மெர்சிடிஸ் பென்ஸ்
  • ஆடி
  • லெக்ஸஸ்
  • வால்வோ
  • கேடிலாக்
  • ரோல்ஸ் ராய்ஸ்
Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Luxury Car Definition And Most Popular Brands. Read in Tamil
Story first published: Thursday, July 8, 2021, 14:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X