சூடுபிடிக்கும் கொரோனா போர்: கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. ஸ்டாஃப்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்

கொரோனாவிற்கு எதிரான போரில் பணியாளர்கள் மற்றும் மக்களை காப்பதற்காக பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ களமிறங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சூடுபிடிக்கும் கொரோனா போர்.. கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. பணியாளர்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்!

கண்களுக்கே புலப்படாத ஒற்றை வைரஸை (கொரோனா எனும் கோவிட்-19 வைரஸ்) எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கின்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்று பெரும் உதவிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் செய்து வருகின்றன. அந்தவகையில், உயிர் காக்கும் கருவியான வென்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட பலவற்றை அவை தயாரித்து வழங்கி வருகின்றன.

சூடுபிடிக்கும் கொரோனா போர்.. கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. பணியாளர்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்!

இந்த பணிக்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதன்மூலமே, மருத்துவர்கள் பயன்படுத்தும் கண்ணாடி முகமூடிகள் முதல் கையுறைகள் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சூடுபிடிக்கும் கொரோனா போர்.. கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. பணியாளர்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்!

இந்நிலையில், இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, அதன் பணியாளர்களையும் கொரோனா வைரசிடம் இருந்து காப்பதற்கான பாதுகாப்பு கவசங்களைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

சூடுபிடிக்கும் கொரோனா போர்.. கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. பணியாளர்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்!

அதுமட்டுமின்றி கொரோனாவிற்கு எதிரான போரில் கூடுதல் பங்கினை அளிக்கும் விதமாக மக்களுக்காகவும் குறிப்பிட்ட பாதுகாப்பு கவசங்களை தயாரிக்க இருக்கின்றது பிஎம்டபிள்யூ.

இதனடிப்படையில், ஏற்கனவே கையிருப்பில் இருந்த ஒரு லட்சம் முக மாஸ்க்குகள் அரசுக்கு வழங்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

சூடுபிடிக்கும் கொரோனா போர்.. கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. பணியாளர்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்!

இதுதவிர, கூடுதலாக 50 ஆயிரம் மாஸ்க்குகள் மற்றும் மில்லியன் எண்ணிக்கையிலான மருத்து கையுறைகளை பிஎம்டபிள்யூ கடந்த புதனன்று வழங்கியிருக்கின்றது.

தொடர்ந்து, அடுத்து வரும் ஒரு சில வாரங்களில் மேலும் மில்லியன் எண்ணிக்கையிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

சூடுபிடிக்கும் கொரோனா போர்.. கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. பணியாளர்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்!

கடந்த சில வாரங்களுக்கு வாகன உற்பத்தியை நிறுத்திய பிஎம்டபிள்யூ நிறுவனம், பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. இந்த பணியை வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி வரை மேற்கொள்ள இறுதி வரை மேற்கொள்ள இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

சூடுபிடிக்கும் கொரோனா போர்.. கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. பணியாளர்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்!

கொடிய உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவின் காரணமாக உலக நாடுகள் பல பேராபத்தில் சிக்கியிருக்கின்றன. அதிலும், மனித இனம் மிகப்பெரிய சொல்ல முடியாத துயரத்தைச் சந்தித்து வருகின்றது. இதற்கு தென் அமெரிக்காவில் இருக்கும் எக்குவேடார், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே உதாரணம்.

சூடுபிடிக்கும் கொரோனா போர்.. கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. பணியாளர்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்!

உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,30,210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்பெயினில் 1,48,220 பேரும், இத்தாலியில் 1,39,422 பேரும், ஜெர்மனியில் 1,13,296 பேரும், பிரான்ஸில் 1,12,950 பேரும், சீனாவில் 81,802 பேரும், ஈரானில் - 64,586 பேரும், பிரிட்டனில் 60,733 பேரையும் கொரோனா பாதித்துள்ளது.

சூடுபிடிக்கும் கொரோனா போர்.. கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. பணியாளர்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்!

ஆதில், எக்குவடோர் நாடு சொல்ல முடியாத துயரத்தைச் சந்தித்து வருகின்றது. மிக ஏழ்மையான நாடுகளில் எக்குவடோரும் ஒன்று. இங்கு இறப்போரின் விகிதம் நாளுக்கு அதிகரித்து வருகின்றது. ஆகையால், சவ பெட்டுகளுக்கு பதிலாக அட்டைப் பெட்டிகளை அந்நாடு சடலங்களை அடக்கம் செய்ய பயன்படுத்தி வருகின்றன.

சூடுபிடிக்கும் கொரோனா போர்.. கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. பணியாளர்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்!

மேலும், உடல்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாத காரணத்தால் ஒரு சிலர் இறந்த உறவினர்களின் உடலை சாலையோரங்களில் வீசிச் செல்கின்றனர். இவ்வாறு உலக நாடுகள் பெருத்த விபரீதத்தைச் சந்தித்து வருகின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த உதவி வரவேற்பளிக்கும் வகையில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 9, 2020, 11:40 [IST]
English summary
Luxury Car Maker BMW To Start Producing Face Masks. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+