லாரி, லாரிக்கு மேல ஒரு கிரேன்.. அசால்டாக இழுத்து சென்ற கார்.. இந்த காருக்கு பேய் பிடிச்சிருக்குமோ!

லாரி, லாரிக்கு மேல ஒரு கிரேன் இருந்த நிலையில் காரொன்று அது இரண்டையும் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இவை இரண்டையும் இழுத்துச் சென்ற கார் மாடல் எது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் அதிக பவர்ஃபுல்லான கார் மாடல்களில் ஒன்றே லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலே கிரேன் ஒன்றை ஏற்றி வந்த லாரியை அசால்டாக இழுத்துச் சென்றிருக்கின்றது. இதுகுறித்த வீடியோவை இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

Car tows truck

இந்த காரின் இழுவை திறன் 3,700 கிலோவாகும். ஆனால், இதைவிட பலமடங்கு அதிக எடைக் கொண்ட வாகனத்தையே டிஃபெண்டர் 110 இழுத்து மிகப் பெரிய சாதனையைப் படைத்திருக்கின்றது. ஆமாங்க, இந்த டிரக்கின் எடை மட்டுமே 15 ஆயிரம் கிலோவாகும். அதேவேளையின் இந்த கிரேனின் எடை 25 ஆயிரம் கிலோ முதல் 30 ஆயிரம் கிலோ வரையாகும்.

இத்தகைய மாபெரும் எடையைக் கொண்ட வாகனங்களையே டிஃபெண்டர் 110 இழுத்து சென்றிருக்கின்றது. என்ன காரணத்திற்காக இவ்ளோ பெரிய வாகனம் இழுத்துச் செல்லப்பட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும், இந்த நிகழ்வின் வாயிலாக டிஃபெண்டர் 110 காரின் அதீத திறன் பற்றி வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

Car tows lorry

பலர் இந்த காரை அதன் அதீத சொகுசு வசதிக்காக வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் இந்த கார் இந்தியாவின் கரடு-முரடான சாலைக்கு ஏற்றது என்கிற காரணத்தினால் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே இது அதீத இழுவை திறன் கொண்டது என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

மேலும், இதனால் தன்னை விட பலமடங்கு அதிக எடைக் கொண்ட வாகனத்தையும் இழுத்துச் செல்ல முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதிக சொகுசு வசதிகளுக்கு பெயர்போன கார் மாடலாக டிஃபெண்டர் 110 காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்திய திரைப்பிரபலங்கள் மத்தியிலும், தொழிலதிபர்கள் மத்தியிலும் இந்த கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Luxury car defender tows lorry

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்திய செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது. அதில், இந்த கார் மாடலுக்கு செல்வந்தர்கள் மற்றும் சில பணக்கார அரசியல்வாதிகள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகளிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் டிஃபெண்டர் கார் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டு பெட்ரோல் மற்றும் ஓர் டீசல் எஞ்ஜின் தேர்வை வழங்குகின்றது. டிஃபெண்டர் 90, டிஃபெண்டர் 110 மற்றும் டிஃபெண்டர் 130 ஆகியவை அவை ஆகும். இதில் டிஃபெண்டர் 130 லேட்டஸ்ட் மாடலாக இருக்கின்றது.

இதேபோல், எஞ்சின் விஷயத்திலும் இந்த கார் மாடலில் மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டார் மற்றும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் மோட்டார் ஆகிய தேர்வுகளே வழங்கப்படுகின்றன.

எஞ்சினைப் போலவே கியர்பாக்ஸிலும் பன்முக ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இந்த டிஃபெண்டர் காரை இந்தியாவில் மம்மூட்டி, ஆசிஃப் அலி, அர்ஜூன் கபூர், சன்னி தியோல், ஆயுஷ் ஷர்மா, ரவி தேஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களைப் போலவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் போன்ற அரசியல்வாதிகள் மற்றும் முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் அதிக பாதுகாப்பு வசதிகளைத் தாங்கியதாகவும் காட்சியளிக்கின்றது. இதனால்தான் முக்கிய அரசியல்வாதிகள் தொடங்கி தொழிலதிபர்களும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 1.2 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 30, 2023, 18:57 [IST]
English summary
Luxury car tows truck with hevay weight crane
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X