குப்பபோல கிடக்கும் இந்த கார்களின் மதிப்பு எவ்வளோனு தெரிமா? இந்த கார்கள எல்லாம் தூக்கிபோட எப்படி மனசு வந்துச்சோ

விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் குப்பை போல் போடப்பட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதில் ஆச்சரியம் என்ன என்றால் அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்கூட குப்பை போல போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, லேண்ட் ரோவர் (Land Rover) மற்றும் ஆடி (Audi) போன்ற நிறுவனங்களின் காஸ்ட்லியான கார்களும் அங்கே இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் அதன் உரிமையாளர்களால் கை விடப்பட்ட கார் மாடல்கள் என கூறப்படுகின்றது.

'என்ன!.. இவை அனைத்தும் கை விடப்பட்ட கார்களா!.. அப்போ இது வெளிநாடாக இருக்குமோ' என நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை, இந்தியாவிலேயே இந்த கார்கள் கை விடப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. வீடியோவின்படி இது மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அரங்கேறி இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.

Luxury cars abandoned in pune

அந்த ஒரே ஒரு யார்டில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் கை விடப்பட்டு இருக்கின்றன. அனைத்தும் இப்போது மிகப் பெரிய சேதத்திற்கு ஆளாகி உள்ளன. குறிப்பாக, தூசி மற்றும் துருவிற்கு அங்கிருக்கும் பெரும்பாலான வாகனங்கள் இரையாகத் தொடங்கி இருக்கின்றன.

குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் காரின் முன் பக்கம் முழுவதுமாக சிதைந்து கவலைக்கிடமாகக் காட்சியளிக்கின்றது. இது அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான கோஸ்ட் சீரிஸ் 2 (Rolls-Royce Ghost Series II) கார் மாடல் ஆகும். இது கை விடப்பட்டு கார் காதலர்களின் கண்களின் ரத்த கண்ணீரையே வரவைக்கும் உள்ளது.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 5 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய மிகவும் காஸ்ட்லியான காரே முகம் முழுக்க சிதைந்த நிலையில் அங்கு கை விடப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் (Mercedes-Benz S-Class), ஆடி டிடி (Audi TT), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) போன்ற ஆடம்பர கார்களும் அங்கே கை விடப்பட்டிருக்கின்றன.

இந்த கார்கள் எதற்காக கை விடப்பட்டிருக்கின்றன?, அவற்றிற்கு என்ன ஆகின? என்பது போன்ற எந்த விபரங்களும் இல்லை. கார்கள் இருக்கும் நிலைமையை வைத்து பார்க்கையில் அவை விபத்தைச் சந்தித்தவையாக இருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. அதேபோல், பழுது பார்க்க முடியாமல் இந்த நிலைமைக்கு அக்கார்கள் கைவிடப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

Abandoned audi car

சில கார்களுக்கு இந்தியாவில் பழுது பார்ப்பது என்பது இயலாத ஒன்று. அதை பழுதுபார்க்க ஆகக் கூடிய செலவு என்பது புதிய காரின் விலைக்கு இணையானதாக இருக்கும். இந்த காரணத்திற்காக கார்கள் கை விடப்பட்ட சம்பவம் பல நம் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன. இந்த மாதிரியான ஆடம்பர கார் மாடல்களும் இங்கே சில இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அவை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியாகவில்லை. அந்த இடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் கார் மாடல்கள் மட்டுமில்லைங்க இன்னும் பல ஆடம்பர மற்றும் வழக்கமான கார் மாடல்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், அரை கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ (Mercedes-Benz GLA), மிட்சுபிஷி பஜேரா (Mitsubishi Pajero) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) போன்ற கார்களும் அங்கே கை விடப்பட்ட நிலையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கு உள்ள பெரும்பாலான வாகனங்கள் சேதமுற்றும், முக்கிய பாகங்கள் காணாமல் போன நிலையிலும் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. முக்கியமாக லைட் மற்றும் பாடி பேனல்கள் உள்ளிட்டவையே காணாமல் போயிருக்கின்றன. அவை சமூக விரோத கும்பலால் களவாடப்பட்டு இருக்கலாம் அல்லது விபத்தின்போது நிகழ்விடத்திலேயே கை விடப்பட்டு இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 5:00 [IST]
English summary
Luxury cars abandoned in pune rolls royce and range rover worth crores
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+