டெல்லி பல்கலைகழகத்திற்குள் அணிவகுத்த சொகுசு கார்கள் படை! சினிமாவுலதான் இப்படி நடக்குறதை எல்லாம் பாத்திருப்போம்

டெல்லி பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் சமீபத்தில் நடைபெற்றது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கான புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்யும் பொருட்டே தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது வாக்குகளைச் சேகரிக்கும் பணியில் வேட்பாளர் மாணவர்கள் ஈடுபட்டனர். அதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கின்றது. வேட்பாளர்கள் தங்களின் பலத்தைக் காண்பிக்கும் விதமாக மிக மிக விலையுர்ந்த கார்களில் வந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். லம்போர்கினி, பென்ட்லீ போன்ற மிக மிக உயர் வகை கார்களை எல்லாம் மாணவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இதனாலேயே இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கின்றது. லம்போர்கினி மற்றும் பென்ட்லீ கார் மாடல்கள் மட்டுமல்ல இன்னும் பல மிக மிக விலை உயர்ந்த கார்களை எல்லாம் அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடைபெறும்போது வேட்பாளர் மாணவர்கள் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இதுபோன்று செயல்படுவதுண்டு.

Du student election car convoy land rover

அந்தவகையிலேயே இந்த ஆண்டும் அவர்கள் தங்களின் செல்வ பலத்தைக் காண்பித்திருக்கின்றனர். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் (Mercedes-Benz G-Wagen), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) மற்றும் டிஃபெண்டர் (Defender) உள்ளிட்ட கார்களை எல்லாம் மாணவர்கள் தங்களின் கான்வாயில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

மிக முக்கியமாக லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), பென்ட்லீ பென்டேகா (Bentley Bentayga) மற்றும் கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Continental Flying Spur) கார் மாடல்களையும் அவர்கள் வாக்கு சேகரிப்பின்போது பயன்படுத்தி இருக்கின்றனர். இதுமட்டுமில்லைங்க, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS), பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) உள்ளிட்ட சொகுசு கார் மாடல்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இத்தகைய விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் மாணவர்களின் தேர்தல் கான்வாயில் பயன்படுத்தப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் பயன்படுத்தப்பட்டு இருப்பது ஆச்சரியத்தின் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இருக்கின்றது. மிகவும் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த ஓர் கார் மாடலே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகும்.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பே 7 கோடி ஆகும். மேலும், இந்தியாவில் மிகவும் குறிப்பிட்ட சில நபர்களிடத்திலேயே இந்த சொகுசு கார் பயன்பாட்டில் இருக்கின்றது. நடிகர் விஜய்கூட இந்த காரையே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. பீஸ்ட் பட வெற்றியைத் தொடர்ந்து படக் குழுவினருடன் அவர் ஓர் ஜாலி ரைடை இந்த காரிலேயே செய்திருந்தார்.

Du student election car convoy rolls royce ghost

இந்த காரை தற்போது அவர் வைத்திருக்கவில்லை என கூறப்படுகின்றது. 6.6 லிட்டர் வி12 ரக எஞ்சின் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 570 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுதவிர, உல்லாச கப்பலில் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கக் கூடிய அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதனால்தான் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பிரியமான காராக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இருக்கின்றது. இத்தகைய காரையே டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கேம்பைனின் போது பயன்படுத்தி இருக்கின்றனர். அதேநேரத்தில், இந்த கான்வாயில் பயன்படுத்தப்பட்ட அனைத்தும் அந்த மாணவர்களுக்கு சொந்தமான வாகனம் என்று கூறிவிட முடியாது. ஒரு சிலர் இந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. இதுதவிர, சில வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களின் வாகனங்களை வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அந்த அளவிற்கே ஆடம்பர கார்களின் மீதான மோகம் இந்தியர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் தங்களின்மீது கவனத்தை ஈர்க்கும் பொருட்டு வாடகைக்கு சொகுசு வாகனங்களை எடுத்து தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்தி இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2024, 13:46 [IST]
English summary
Luxury cars including bentley and lamborghini featured in delhi university student election convoy
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X