அப்பளம்போல் நொறுங்கிய இந்தியாவின் காஸ்ட்லியான ஆடம்பர கார்கள்! ஒரே ஒரு காரோட ரேட்டை கேட்டதுக்கே தலை சுத்துது!

மிக மிக விலை உயர்ந்த சொகுசு வகை சூப்பர் கார்கள் இரண்டு விபத்தில் சிக்கி அப்பளம் நொறுங்கி இருக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. விபத்தில் சிக்கியிருக்கும் இரண்டு கார்களின் விலையும் கோடியில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இந்த விபத்து சம்பவம் ஒட்டுமொத்த வாகன உலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இத்தகைய விபத்து நிகழ்வு அரங்கேறியது எப்படி? எங்கு அரங்கேறியது? மற்றும் விபத்திற்கான காரணம் என்ன? என்பது போன்ற விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

இதுதவிர, விபத்தில் சிக்கியிருப்பது என்ன கார் மாடல்கள்? அவற்றின் இந்திய மதிப்பு எவ்வளவு? மற்றும் அவற்றின் சிறப்புகள் என்ன என்பது போன்ற விபரங்களையும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம். குறிப்பாக, இந்த விபத்து நிகழ்வின் வாயிலாக கற்பிக்கப்பட்டு இருக்கும் பாடம் என்ன என்பது பற்றியும் காணலாம்.

Test drive crash

விபத்தில் சிக்கி நொறுங்கிக் கிடக்கும் இரண்டுமே பென்ஸ் நிறுவனத்தின் அதிக திறனை வெளியேற்றக் கூடிய சூப்பர் வகை சொகுசு கார் மாடல்கள் ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி63 எஸ்இ (Mercedes-Benz AMG GT63 SE) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி எஸ்எல்55 ரோட்ஸ்டர் (Mercedes-Benz AMG SL55 Roadster) ஆகிய கார் மாடல்களே ஒன்றோடு ஒன்று நேருக்கு-நேர் மோதி விபத்தைச் சந்தித்திருக்கின்றன.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக உயரிய விலைக் கொண்ட கார் மாடல்கள் இவையாகும். எக்ஸ்-ஷோரூமிலேயே ஏஎம்ஜி எஸ்எல் 55 ரோட்ஸ்டர் கார் மாடல் ரூ. 2.44 கோடிக்கும், ஏஎம்ஜி ஜிடி 63 எஸ்இ ரூ. 3.30 கோடிக்கும் விற்கப்படுகின்றது. இத்தகைய விலை உயர்ந்த கார்களே விபத்தில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கி இருக்கின்றன.

இரண்டும் கார்களும் டெஸ்ட் டிரைவ் செய்யும்போதே விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகின்றது. மேலும், கேரளா மாநிலம் கொச்சியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மிக மிக அதிக வேகத்தில் வந்த போதே இரண்டு கார்களும் கட்டுப்பாட்டை இழந்து மோதியிருக்கின்றன. இந்த விபத்தினால் இரண்டு கார்களின் ஒரு பக்கமே முழுமையாக சிதைந்துப் போயிருக்கின்றன.

மேலும், கடுமையான விபத்தின் காரணமாக மீண்டும் பயன்படுத்த உகந்ததல்லாத வாகனங்களாக அவை மாறியிருக்கின்றன. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதன்படி, இந்த விபத்திற்கு ஜிடி 63 எஸ்இ காரை ஓட்டி வந்தவரே காரணம் என கூறப்படுகின்றது. அதை ஓர் பெண் ஓட்டி வந்ததாகவும், அவர் ஆரம்பத்திலேயே காரை கட்டுப்படுத்த முடியாமல் திணறியதாகவும் கூறப்படுகின்றது.

Mercedes amg test drive crash

இந்த நிலையிலேயே அதீத வேகத்தினால் சாலையோரத்தில் இருந்து பழைய ரயில்வே டிராக்கில் மோதி, பின்னர் மீண்டும் எதிரில் வந்த எஸ்எல் 55 ரோட்ஸ்டருடன் அக்கார் மோதி இருக்கின்றது. இந்த விபத்து அரங்கேறும்போது மணிக்கு 60 கிமீ அல்லது அதற்கும் அதிகமான கிமீ வேகத்தில் அந்த கார்கள் பயணித்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

இத்தகைய மிக மோசமான விபத்தினாலேயே இரண்டு கார்களின் ஒரு பக்கமும் முழுமையாக உருக்குலைந்து போயிருக்கின்றன. கதவு, ஒரு பக்க ஹெட்லேம்ப், கிரில், ஃபெண்டர் மற்றும் வீல் என ஒருபக்கத்தில் இருக்கக் கூடிய பெரும்பாலான பாகங்கள் 100 சதவீத இழப்பைச் சந்தித்து இருக்கின்றன.

இந்த விபத்தில் கார்கள் உருக்குலைந்ததோடு, ஜிடி 63 ஏஎம்ஜி காரை ஓட்டி வந்த பெண் மிகக் கடுமையான காயங்களுக்கு ஆளாகியதாகவும் கூறப்படுகின்றது. மேலும், அவரை தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. புதிதாக காரை வாங்க செல்லும்போது கார்களை ஓட்டி பார்த்து வாங்குவது என்பது நல்ல நடவடிக்கைதான்.

மேலும், இது ஓர் வழக்கமான செயலும்கூட. ஆனால், போதிய அனுபவம் இல்லாமல் அதிகபட்ச வேகத்தில் காரை இயக்குவது என்பது எத்தகைய ஆபத்தான சூழலை ஏற்படுத்தும் என்பதையே இந்த விபத்து சம்பவம் நமக்கு பாடம் கற்பித்திருக்கின்றது. தொடர்ந்து, டெஸ்ட் டிரைவின்போது கார்கள் விபத்தில் சிக்கும் நிகழ்வு என்பதும் சமீப சில காலமாக தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

ஆகையால், காரை டெஸ்ட் டிரைவ் செய்ய செல்பவர்கள் சற்று அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. ஜிடி 63 ஏஎம்ஜி காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் எஞ்சினே பன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 630 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்துடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 317 கிமீ ஆகும். இதேபோல் அதிக திறனை வெளியேற்றக் கூடிய ஓர் கார் மாடலே எஸ்எல் 55 ரோட்ஸ்டர் ஆகும்.

இதில், பொருத்தப்பட்டு இருக்கும் 4.0 லிட்டர் வி8 பை-டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 469 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் ஆற்றலையும் வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 295 கிமீ ஆகும். இதுமாதிரியான அதிக வேகத்தில் செல்லும் கார் மாடல்களே டெஸ்ட் டிரைவின்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்ட் டிரைவ் வாகனங்கள் வாடிக்கையாளர்களால் விபத்தில் சிக்கும் சோக நிகழ்வு அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே இந்த இரண்டு காஸ்ட்லியான கார்களின் விபத்து சம்பவம் நாட்டில் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆகையால் வரும் நாட்களில் கார் விற்பனையாளர்கள் டெஸ்ட் டிரைவ் விஷயத்தில் புதிய விதி மற்றும் கெடுபிடிகளைக் கடைபிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 27, 2024, 5:00 [IST]
English summary
Luxury mercedes amg cars crash during test drive
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X