விஜய் மட்டும்தான் வச்சிருக்காருனு பாத்தா அம்பானி வீட்டுலேயும் இருக்கா! கப்பல் போன்ற கார்!

சொகுசு கப்பல் மாதிரி இருக்கும் கார் ஒன்றிற்கு இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. லெக்சஸ் (Lexus) நிறுவனத்தின் எல்எம் 350எச் (LM 350h) கார் மாடலுக்குதான் உச்ச நட்சத்திரங்கள் மத்தியில் சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக திரைப்பிரபலங்கள் பலர் இந்த காரை வாங்கியிருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. லெக்சஸ் எல்எம் 350எச் ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடல் ஆகும்.

இந்த வாகனம் சந்தையில் 4 மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இருப்பதுலேயே அதிக விலையைக் கொண்டதாக எல்எம் 350எச் மாடலின் 4 இருக்கைகளைக் கொண்ட ஆப்ஷனே இருக்கின்றது. இதன் விலை ரூ. 2.5 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

Vijay brand new lexus lm

இத்தகைய அதிக விலைக் கொண்ட காரையே இந்திய திரை நட்சத்திரங்கள் பலர் வாங்கி இருக்கின்றனர், வாங்கிக் கொண்டும் இருக்கின்றனர். அப்படி யாரெல்லாம் இந்த காரை சமீபத்தில் வாங்கினார்கள் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மேலும், லெக்சஸ் எல்எம் 350எச் சொகுசு எம்பிவி காரின் சிறப்புகள் பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்கூட இந்த காரை வாங்கியிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த கார் அவருடைய வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சிகளே இணையத்தில் வெளியாகின. அந்த காரில் பதிவெண்கூட இடம் பெறாமல் இருந்ததை நம்மால் காண முடிந்தது.

India s stars choose lexus lm 350h

இவர் மட்டுமல்ல இந்த காரை பாலிவுட் திரையுலகிலும் பலர் வாங்கி இருக்கின்றனர். அந்தவகையில், ரன்பிர் கபூர், ஜன்வி கபூர் போன்ற உச்ச நட்சத்திரங்களும் வாங்கியிருக்கின்றனர். திரை நட்சத்திரங்களோடு சேர்ந்து இன்னும் சில பிரபலங்களும் இந்த காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹர்திக் பாண்டியாவும், இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி ஆகியோரும் இந்த காரை வாங்கி இருக்கின்றனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அனைவரும் இந்த காரை வெகு சமீபத்திலேயே வாங்கியிருக்கின்றனர். இந்த காரின் டெலிவரி பணிகளை லெக்சஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கடந்த ஜூலை மாத இறுதியிலேயே தொடங்கியது. இந்த நிலையிலேயே ஒவ்வொரு பிரபலங்களாக இந்த வாகனத்தை வாங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Ranbir kapoor lexus lm 350h

இந்த எம்பிவி காரில் சொகுசு அம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் மிக தாராளமான மனதுடன் லெக்சஸ் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 48 அங்குல அளவிலான பெரிய திரை, 23 ஸ்பீக்கர்களைக் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஆர்ம் ரெஸ்ட், யுஎஸ்பி சார்ஜர், ஒயர்லெஸ் சார்ஜர், ரீடிங் லேம்ப், குடைகளை வைப்பதற்கான தனி இடம் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமில்லைங்க, சிறிய குளிர்சாதன பெட்டி, இரட்டை சன்ரூஃப், முக்கிய கருவிகளைக் கட்டுப்படுத்துவதற்கான டச் கன்ட்ரோல்கள் போன்ற அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, இதன் இருக்கைகள் மிகவும் மிருதுவானதாக இருக்கும். அதேவேளையில், இதன் 4 சீட்டர் வெர்ஷனில் விமானங்களில் வழங்கப்படுவதைப் போன்ற இருக்கையே வழங்கப்பட்டு இருக்கும்.

அதில் காலை நீட்டிப்போட்டுக் கொண்டு, சாய்ந்தவாறு பயணிக்க முடியும். இத்துடன், டிவியை பார்த்துக் கொண்டும் பயணிக்கலாம். எனவே, நீண்ட தூர பயணமாக இருந்தாலும், அது பயணமாகவே தெரியாது. மாறாக வீட்டுக்குள் இருப்பதைப் போன்ற உணர்வையே இந்த கார் வழங்கும் என தெரிகின்றது.

இது மட்டுமில்லைங்க இன்னும் அதிக ஆடம்பர வசதிகளைத் தாங்கியதாகவே எல்எம் 350எச் மாடலின் 4 சீட்டர் தேர்வு இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த தேர்வை முழுக்க முழுக்க ஆடம்பர பயணத்தை விரும்பும் பணக்காரர்களுக்கு ஏற்றதாகவே லெக்சஸ் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

எஞ்சினை பொருத்த வரை இந்த வாகனத்தில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைபிரிட் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 239 என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. இ-சிவிடி மற்றும் இ-4 வீல் டிரைவ் ஆகிய அம்சங்களையும் இந்த கார் மாடல் தன்னுள் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லெச்கஸ் எல்எம் 350எச் சொகுசு காருக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பவம் அமைந்திருக்கின்றது. மேலே பார்த்த பிரபலங்களைப் போலவே இன்னும் சில பிரபலங்கள் இந்த வாகனத்தை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, August 26, 2024, 5:00 [IST]
English summary
Luxury mpv lexus lm 350h mpv owners of india vijay to ambani
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X