கடலின் ஆழத்தையும், காதலின் ஆழத்தையும் காட்டும் ஓர் அற்புத நீர்மூழ்கி படகு!!
ஆடம்பர படகுகள் குறித்து ஏற்கனவே சில செய்திகள் பார்த்திருக்கிறோம். ஆனால், அவற்றை விஞ்சும் வகையில், தேனிலவு மற்றும் இளம் தம்பதியருக்கு ஏற்ற புதிய ஆடம்பர நீர்மூழ்கி படகு ஒன்று கட்டப்பட்டுள்ளது.
குளிர்பிரதேசங்கள்தான் கூடாரம் என்று எண்ணும் இளம் தம்பதியருக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில், பல ஆடம்பர வசதிகள் நிறைந்த இந்த நீர்மூழ்கி படகு சேவையை ஆலிவர்ஸ் டிராவல்ஸ் வழங்கி வருகிறது.

மிதவை மாளிகை
இந்த படகில் ஆடம்பரமான படுக்கை அறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் பக்கவாட்டில் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் வழியாக கடல் வாழ் உயிரினங்களின் நடமாட்டத்தை துணையுடன் சேர்ந்து கண்டு களிக்க முடியும்.

வரவேற்பு அறை
இந்த ஆடம்பர நீர்மூழ்கி படகில் வரவேற்பை மிக பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இதிலும், கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

காதலின் ஆழம்
கரீபியன் கடற்பகுதியில், கடலுக்கு அடியில் 650 அடி வரை இந்த நீர்மூழ்கி படகு செல்லும். இந்த நீர்மூழ்கி படகு நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு விருந்தினர்களை அழைத்துச் செல்வதற்கு ஹெலிகாப்டர் அல்லது அதிவேக படகுகள் வசதியும் செய்து தரப்படுகிறது.

பொழுதுபோக்கு வசதிகள்
இந்த ஆடம்பர நீர்மூழ்கி படகில் ஏராளமான பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. மியூசிக் சிஸ்டம், விளையாட்டு உபகரணங்களும் இருக்கின்றன.

கட்டணம்
ஒரு தம்பதியினர் இந்த ஆடம்பர நீர்மூழ்கிப் படகில் ஒரு இரவு தங்குவதற்கு 1.75 லட்சம் பவுண்ட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டணத்தில் தம்பதியர் விரும்பும் உணவுகளை வழங்குவதாக ஆலிவர்ஸ் டிராவல்ஸ் தெரிவித்துள்ளது.

புதிய அனுபவம்
புல்லையும், கல்லையும் பார்த்து சலித்துப் போன தம்பதியருக்கு இது புதிய அனுபவத்தை தரும்.


Click it and Unblock the Notifications








