ஆடம்பர கார் கம்பெனிகளின் ஆடம்பர கைக்கடிகாரங்கள்!
கார்கள் எப்படி அந்தஸ்துக்கும், அவசிய தேவைகளுக்கும் உதவுகின்றனவோ அதேபோன்று, ஒருவரது அந்தஸ்தை கூட்டுவதில் கைக்கடிகாரங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இதை மனதில் கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல முன்னணி கார் தயாரிப்பாளர்கள் லிமிடேட் எடிசன் கைக்கடிகாரங்களை அவ்வப்போது வெளியிடுவதுண்டு.
அந்த வகையில், உலகின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பாளர்கள் சிறப்பு பதிப்பாக வெளியிட்ட ஆடம்பர கைக்கடிகாரங்களை ஸ்லைடரில் காணலாம். நேர்த்தியான வடிவமைப்பு, தரம் என தங்களது கார்கள் போன்றே இந்த கைக்கடிகாரங்களும் அந்த நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன. ஆடம்பரம் மிளிரும் அந்த கைக்கடிகாரங்கள் பற்றிய தகவல்கள் இதோ உங்களுக்காக...

ஃபெராரி கைக்கடிகாரம்
தனது ஃபார்முலா -1 அணி வரலாற்றை கொண்டாடும் விதமாக இந்த கைக்கடிகாரத்தை ஃபெராரி வெளியிட்டது. கபேஸ்டன் ஸ்கூடேரியா ஃபெராரி ஒன் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த ஆடம்பர கைக்கடிகாரத்தின் பாகங்கள் டைட்டானியம், மெக்னீசியம் கலவையில் செய்யப்பட்டது.

அம்மாடியோவ்
மொத்தம் 60 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால், ஒரு கைக்கடிகாரத்தின் விலை 3 லட்சம் டாலராம். இந்திய மதிப்பில் ரூ.அம்மாடியோவ், அப்படியே இந்திய ரூபாயில் சொன்னால் ஒன்றரை கோடியை தாண்டுகிறது ஒரு கடிகாரத்தின் விலை. மேலும், இந்த விலையில் ஃபெராரி கலிஃபோர்னியா காரை வாங்கி விடமுடியும்.

போர்ஷே வாட்ச்
போர்ஷே வெளியிட்ட இந்த கைக்கடிகாரத்தின் பெயர் பி6980 டைவர். ஜெர்மனி கடற்படை வீரர்களுக்காக போர்ஷே நிறுவனத்தால் வடிவமைத்து தரப்பட்டது.

தண்ணீர் புகா வசதி
தண்ணீர் புகாத வசதி கொண்ட இந்த போர்ஷேவின் ஆடம்பர கைக்கடிகாரத்தில் விலை இந்திய மதிப்பில் ரூ.5.46 லட்சம்.

புகாட்டி வாட்ச்
18 கேரட் கொண்ட ரோஸ் கோல்டு என்ற தங்கத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆடம்பர கைக்கடிகாரம் இது. இதன் கேஸில் 6 சஃபையர் கிறிஸ்டல் பதிக்கப்பட்டுள்ளது. புகாட்டி வேரோன் காரில் பயன்படுத்தப்படும் கார்பன் ஃபைபர்தான் இதன் மேற்புறத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

புகாட்டி வாட்ச் விலை
பார்மிஜினி புகாட்டி டைப் 372 சூப்பர் ஸ்போர்ட் என்று பெயரிடப்பட்ட இந்த ஆடம்பர கைக்கடிகாரம் இந்திய மதிப்பில் ரூ.1.40 கோடி விலை கொண்டது.

பென்ஸ் சில்வர் ஆரோ
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வெளியீடு. எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டது. பென்ஸ் லோகோவுடன், காரில் மேற்புறம் திறந்து மூடும் கதவுகள் போன்று இதன் கேஸையும் கதவு போன்று திறந்து மூட முடியும்.

கடிகாரத்தில் ரிமோட்
இந்த கைக்கடிகாரத்தில் இருக்கும் ரிமோட் பட்டன்கள் மூலம் காரின் கதவை திறந்து மூட முடியும்.

அஸ்டன் மார்ட்டின்
அசத்தலான இந்த ஆடம்பர கைக்கடிகாரம் அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் வாடிக்கையாளர்களுக்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டது. இந்த கைக்கடிகாரத்தில் இருக்கும் கிறிஸ்டல் பொத்தான்கள் மூலம் காரின் கதவை திறந்து மூட முடியும். மேலும், காரை நிறுத்திவிட்டு வெளியில் வந்துவிட்டால் கூட இதன் ஹெட்லைட்டை இந்த வாட்ச் மூலம் அணைத்து விட முடியும்.

விலை
அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்ட இந்த ஆடம்பர கைக்கடிகாரத்தில் விலை இந்திய மதிப்பில் ரூ.13.84 லட்சம்.

மார்கன்
மார்கன் நிறுவனத்தின் சிறப்பு வெளியீடு. டைட்டானியம், டங்ஸ்டன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், செராமிக்ஸ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.

மார்கன் வாட்ச் விலை
ஹப்லாட் பிக் பேங் ஏரோ பேங் மார்கன் என்ற பெயர் கொண்ட இந்த ஆடம்பர கைக்கடிகாரம் லிமிடேட் எடிசான வெளியிடப்பட்டது. 500 மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த கைக்கடிகாரம் ரூ.12.43 லட்சம் விலை கொண்டது.

ஆல்ஃபா ரோமியோ
8சி காம்படிசியோன் காரின் டாக்கோமீட்டர் போன்ற டிசைன் செய்யப்பட்ட இந்த கைக்கடிகாரத்தை ஆல்ஃபா ரோமியோ கார் நிறுவனம் வெளியிட்டது. 18 கேரட் ரோஸ் கோல்டு மற்றும் டைட்டானியம், வைரம் போன்ற கார்பன் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

விலை
ரூ.13.57 லட்சம் விலையில் இந்த ஆடம்பர கைக்கடிகாரம் விற்பனை செய்யப்பட்டது.

போர்ஷேவின் ஆடம்பரம்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல எட்டெர்னா கடிகார நிறுவனம் இந்த ஆடம்பர கடிகாரத்தை போர்ஷேவுக்கு தயாரித்து கொடுத்தது. 18 கேரட் ரோஸ் கோல்டு, டைட்டானியம் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது.

போர்ஷே வாட்ச் விலை
மொத்தம் 50 கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. ரூ.1.46 கோடி விலை கொண்டது.

யுஆர் சிசி1 வாட்ச்
யுஆர்சிசி 1 வெளியிட்ட இந்த கைக்கடிகாரம் இரண்டு பகுதிகளை கொண்டதாக டிசைன் செய்யப்பட்டது. ஒன்று மணி நேரத்தையும் மற்றொன்று நிமிடத்தையும் குறிக்கும் வகையில் இருக்கிறது.

யுஆர்சிசி 1 வாட்ச் விலை
மொத்தம் 25 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஒன்றின் விலை மட்டும் ரூ.1.15 கோடி.

பென்ட்லீ கைக்கடிகாரம்
பென்ட்லீ சூப்பர்ஸ்போர்ட் கார் மாடலின் டேஷ்போர்டை அடிப்படையாக கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. டைட்டானியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பென்ட்லீ சூப்பர் ஸ்போர்ட் காரில் அதிகபட்சமாக 330.695 கிமீ வேகத்தை எட்டியதை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது.

பென்ட்லீ வாட்ச் விலை
மொத்தம் 1000 கைக்கடிகாரங்கள் தயாரிக்கப்பட்டன. ஒன்றின் விலை ரூ.5.43 லட்சம்.


Click it and Unblock the Notifications








