இந்திய சாலைகளில் சுற்றியது ஏலியன்களின் வாகனமா! நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி! பறக்கும் தட்டுகளை விட பயங்கரம்!
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்பு நாம் யாரும் பார்த்திராத வித்தியாசமான வாகனம் ஒன்று சாலையில் பயணம் செய்வதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு சிறிய காரை போன்று உள்ள இந்த வாகனம், பைக்குகளை போல் நன்றாக வளைந்து செல்கிறது. இதற்கு முன்பு இப்படி ஒரு வாகனத்தை பார்த்ததில்லை என்பதால், நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் இது ஏலியன்களின் (Aliens), அதாவது வேற்று கிரக வாசிகளின் வாகனமா? எனவும் பலர் வேடிக்கையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இது வேற்று கிரக வாசிகளின் வாகனம் எல்லாம் கிடையாது. இது லிங்க்ஸ் லீன் எலெக்ட்ரிக் கார் (Lynx Lean Electric Car) ஆகும். லிங்க்ஸ் கார்ஸ் (Lynx Cars) என்ற டென்மார்க் (Denmark)நாட்டு நிறுவனத்தின் தயாரிப்பு இது என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வித்தியாசமான எலெக்ட்ரிக் காரில், 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதே நேரத்தில் வழக்கமான கார்களை போல், 4 சக்கரங்கள் இருக்காது. 3 சக்கரங்கள் மட்டுமே இருக்கும். முன் பகுதியில் 1 மற்றும் பின் பகுதியில் 2 என இந்த எலெக்ட்ரிக் காரில், 3 சக்கரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

இது ஒரு 'டில்டிங் கார்' (Tilting Car) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது பைக்குகளை போல், இந்த எலெக்ட்ரிக் காரை சாய்த்து கொண்டே பயணம் செய்ய முடியும். அதிகபட்சமாக 45 டிகிரி கோணத்தில் இந்த எலெக்ட்ரிக் காரை சாய்த்து கொண்டே பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே த்ரில்லிங்கான டிரைவிங் அனுபவத்தை இந்த எலெக்ட்ரிக் கார் கொடுக்கும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் கார் வெறும் 7 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 169 கிலோ மீட்டர்கள் ஆகும்.
மறுபக்கம் இந்த எலெக்ட்ரிக் காரில், 12 kWh லித்தியம் மாங்கனீஸ் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈக்கோ மோடில் இதன் டிரைவிங் ரேஞ்ச் 150 கிலோ மீட்டர்கள் எனவும், ஸ்பீடு மோடில் இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 100 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், பயணம் செய்யக்கூடிய தொலைவே டிரைவிங் ரேஞ்ச் என அழைக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சாலைகளில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை கூட எளிதாக பார்த்து விடலாம். ஆனால் இது போன்ற டில்டிங் கார்களை பார்ப்பது என்பது உண்மையிலேயே மிகவும் அரிதான ஒரு விஷயம்தான். அனேகமாக நாம் வீடியோவில் பார்க்கும் இதுதான், இந்தியாவில் உள்ள ஒரே ஒரே லிங்க்ஸ் லீன் எலெக்ட்ரிக் டில்டிங் கார் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








