ஹைட்ரஜனில் ஓடும் ரயில்... இதுமட்டும் பயன்பாட்டுக்கு வந்துச்சு இப்போ இருக்க கட்டணம் பாதியளவு குறையும்?..

அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் 'மேட் இன் இந்தியா' ஹைட்ரஜன் ரயில் அடுத்த ஆண்டு டிசம்பரில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியாகி உள்ள கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியன் ரயில்வேஸ், வந்தே மெட்ரோ ரயில்களை உருவாக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த ரயில்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் தொடர் வண்டிகளைக் காட்டிலும் மாறுபட்ட பயண அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ரயில்களை ரீ-பிளேஸ் செய்யும் விதமாக வந்தே மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன.

ஹைட்ரஜன் ரயில்

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த தகவலை ரயில்வேத் துறை மற்றும் கம்யூனிகேஷன் துறையின் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அண்மையில் உறுதிப்படுத்தினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை (18 டிசம்பர்) அன்று நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே இந்த தகவலை அவர் உறுதிப்படுத்தினார். இதுமட்டுமின்றி உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள் எப்போது வெளியுலகிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது என்கிற தகவலையும் அவர் வெளியிட்டு உள்ளார்.

அவர் கூறியிருப்பதன்படி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய தயாரிப்பு ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது இந்த ரயிலின் வடிவமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவுற்று ரயில் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வந்தே மெட்ரோ ரயில் உலக தரம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

ஆகையால், இதன் வருகை மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது எண்ணற்ற 1950 மற்றும் 60-களில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையை படிப் படியாக குறைக்கும் வகையில் இந்த ரயில்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இந்த மெட்ரோ ரயில்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் வகையிலேயே பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

அதாவது, தற்போது பயன்பாட்டில் இருக்கும் சில மெட்ரோ ரயில்களைக் காட்டிலும் மிகக் குறைவான கட்டணத்தில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக முக்கியமாக இந்த ரயிலை அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களைக் கருத்தில் கொண்டே தயாரிப்பதாகவும், மேல்மட்ட மக்களைக் கவனத்தில் கொண்ட தயாரிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறியிருக்கின்றார். முழுக்க முழுக்க இந்த ரயில் இந்திய தயாரிப்பாக தயார் செய்யப்பட்டு வருகின்றது.

இதனை இந்திய பொறியாளர்களைக் கொண்டே அரசு வடிவமைத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது வடிமைப்பு செயல்முறை பணிகளே மும்பரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும், அது வெகு விரைவில் முடிவுறும் நிலையில் இருக்கின்றது. இந்த நிலையிலேயே டிசம்பர் 2023க்குள் நாட்டின் முதல் ஹைட்ரஜன் வெளியிடப் போவதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியன் ரயில்வேஸ் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை, அது வந்தே பாரத் 3 ரக ரயிலையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

இதில் ஸ்லீப்பர் கிளாஸ்கள் இடம் பெறும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். ஆகையால், விரைவில் வந்தே பாரத் ரயில் நீண்ட நெடிய பயணங்களுக்கும் பயன்பாட்டிற்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது. வந்தே பாரத் 3 ரயில் உலக தரத்திற்கு ஏற்றதாகவும், எதிபார்த்திராத பல்வேறு மிக முக்கிய சிறப்பு வசதிகளுடனும் உருவாக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக தற்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் ரயில்களைக் காட்டிலும் இது அதி-நவீன வசதிகள் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

ஒய்-ஃபை, சொகுசான இருக்கை என பற்பல வசதிகளுடன் இந்த ரயில் உருவாக்கப்பட்டு வருவது குறப்பிடத்தகுந்தது. இத்துடன், புதிய ரயில் பாதை உருவாக்கும் பணியிலும் அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் நாள் ஒன்றிற்கு 12 கிமீ ரயில் பாதைகளை அரசு உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. அடுத்த ஆண்டு முதல் நாள் ஒன்றிற்கு 16 கிமீ முதல் 17 கிமீ வரையில் ரயில் பாதைகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுதவிர ரயில் பயணத்தை எளிமையானதாக மாற்றும் முயற்சியில் ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டு வருகின்றது. இத்துடன், பழமையான ரயில் நிலையங்களை நவீன மயமாக்கும் பணிகளையும் ரயில்வேத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 20, 2022, 17:16 [IST]
English summary
Made in india hydrogen train details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+