டாடா, மஹிந்திராவால் நமக்கு கெத்து... 'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள்

'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள் மற்றும் காவல் படைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா, மஹிந்திராவால் நமக்கு கெத்து... 'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள்

இந்தியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய சந்தைக்காக பல்வேறு எஸ்யூவி ரக கார்களை உருவாக்கி இங்கே விற்பனை செய்து வருகின்றன. இந்த எஸ்யூவி கார்களை இந்தியாவின் ராணுவம் மற்றும் பாராமிலிட்டரி படைகளும் பயன்படுத்தி வருகின்றன. அதே சமயம் வெளிநாடுகளை சேர்ந்த ராணுவம் மற்றும் காவல் துறைகளும் 'மேட்-இன்-இந்தியா' எஸ்யூவிக்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.

டாடா, மஹிந்திராவால் நமக்கு கெத்து... 'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள்

அப்படி 'மேட் இன் இந்தியா' எஸ்யூவி கார்களை பயன்படுத்தும் வெளிநாடுகளின் ராணுவம் மற்றும் காவல் துறைகள் பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். 'மேட் இன் இந்தியா' கார்கள் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுவது, அதுவும் ராணுவம், காவல் துறையால் பயன்படுத்தப்படுவது நமக்கு பெருமை அளிக்கக்கூடிய ஒரு விஷயமே. வாருங்கள், இனி செய்திக்குள் செல்லலாம்.

டாடா, மஹிந்திராவால் நமக்கு கெத்து... 'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள்

டாடா ஹெக்ஸா - வங்கதேசம் (Tata Hexa - Bangladesh)

வங்கதேச ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்துவதற்கு ஹெக்ஸா எஸ்யூவி ரக கார்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றது. ஒரு 'மேட் இன் இந்தியா' எஸ்யூவி வங்கதேச ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வாகனம் என்பதே இதன் அர்த்தமாகும். வங்கதேச ராணுவத்திடம் ஒப்புதல் பெறும் முன், ஹெக்ஸா மீது டாடா மிக கடுமையான சோதனைகளை செய்ய வேண்டியிருந்தது.

டாடா, மஹிந்திராவால் நமக்கு கெத்து... 'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 - தென் ஆப்ரிக்கா (Mahindra XUV500 - South Africa)

வெளிநாடுகளை சேர்ந்த காவல் படைகளின் மத்தியில் மஹிந்திரா ஸ்கார்பியோ மட்டும் மிகவும் பிரபலமான 'மேட் இன் இந்தியா' எஸ்யூவி கிடையாது. மஹிந்திரா எஸ்யூவி500 எஸ்யூவியும் பிரபலமாக இருந்து வருகிறது. குறிப்பாக தென் ஆப்ரிக்கா காவல் படையின் அதிகாரப்பூர்வ வாகனமாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி உள்ளது.

டாடா, மஹிந்திராவால் நமக்கு கெத்து... 'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள்

தென் ஆப்ரிக்கா காவல் படை பயன்படுத்துவது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் டபிள்யூ8 வேரியண்ட் ஆகும். 4 வீல் டிரைவ் அமைப்பு இந்த காரில் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி கடும் போட்டியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

டாடா, மஹிந்திராவால் நமக்கு கெத்து... 'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள்

டாடா சபாரி ஸ்ட்ரோம் -அல்ஜீரியா (Tata Safari Storme - Algeria)

அல்ஜீரிய காவல் படையின் முக்கியமான கார்களில் டாடா சபாரி ஸ்ட்ரோமும் ஒன்று. டாடா சபாரி ஸ்ட்ரோம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதுடன், சௌகரியமான கேபினையும் பெற்றுள்ளது. அத்துடன் ஆஃப் ரோடு திறன்களிலும் தலைசிறந்து விளங்குகிறது. இவை அனைத்து மலிவான விலையில் கிடைப்பதுதான், டாடா சபாரி ஸ்ட்ரோமை அல்ஜீரியா காவல் படை தேர்ந்தெடுக்க காரணம்.

டாடா, மஹிந்திராவால் நமக்கு கெத்து... 'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள்

மஹிந்திரா ஸ்கார்பியோ - மாலத்தீவுகள் (Mahindra Scorpio - Maldives)

4 வீல் டிரைவ் அமைப்புடன் கூடிய மஹிந்திரா ஸ்கார்பியோ காரை மாலத்தீவுகள் காவல் படை பயன்படுத்தி வருகிறது. மாலத்தீவுகள் மட்டுமல்லாது, பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்பு படையும் ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களை பயன்படுத்தி வருகிறது. பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படை, 4 வீல் டிரைவ் அமைப்புடன் கூடிய 398 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவிக்களை கடந்த 2016ம் ஆண்டு வாங்கியது.

டாடா, மஹிந்திராவால் நமக்கு கெத்து... 'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள்

மாலத்தீவுகள் மற்றும் பிலிப்பைன்ஸ் வரிசையில், இலங்கையும் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவிக்களை பயன்படுத்தி வருகிறது. இலங்கையில் காவல் துறையினர் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை பயன்படுத்தி வருகின்றனர். சக்தி வாய்ந்த இன்ஜின், சௌகரியமான கேபின், திறன் வாய்ந்த 4 வீல் டிரைவ் அமைப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவிற்கு வெளியேயும் ஸ்கார்பியோ பிரபலமாக திகழ்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Made-in-India Tata, Mahindra Cars Used By Foreign Military Forces. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X