சாதாரண செஃப் தானேன்னு நினைச்சோம் மாதம்பட்டி ரங்கராஜ் கிட்ட இவ்வளவு கோடி மதிப்பில் கூட கார்கள் இருக்குதா?

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தற்போது மிகப்பெரிய சமையல் ஜாம்பவான் என மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தன்னிடம் உள்ள கார் கலெக்ஷன் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இவரிடம் அப்படி என்னென்ன கார்கள் இருக்கின்றன என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் சாதாரண நடிகர் மட்டுமல்ல மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கூட கேட்டரிங் சேவைகளை செய்துள்ளார்.

madhampatty rangaraj car collection

இவ்வளவு பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் கலை நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று உள்ளார். இதனால் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம் உள்ள கார் கலெக்ஷன் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார். இது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது அதை விரிவாக காணலாம்.

டாடா இண்டிகா: டாடா நிறுவனம் இண்டிகா என்ற காரை நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனை செய்து வந்தது. இந்த கார் 1998 ஆம் ஆண்டு முதல் முறையாக விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலகட்டங்களில் முதன்முறையாக கார் வாங்கும் பலர் இந்த காரை தான் வாங்குவார்கள். முக்கியமாக டிராவல்ஸ் பயன்பாட்டிற்கு இந்த கார் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜன் முதன்முதலாக இந்த காரை தான் வாங்கி உள்ளார்.

madhampatty rangaraj car collection

ஃபோர்டு எண்டேவர்: ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியே சென்று இருந்தாலும் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் இன்னும் மவுசு இருக்கிறது. இப்படியாக ஃபோர்டு நிறுவனத்தின் எண்டேவர் கார் இன்னும் நல்ல மவுசுடன் விற்பனையாகி வரும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது காராக இந்த ஃபோர்டு எண்டேவர் காரை தான் வாங்கியுள்ளார். இன்றளவும் அரசியல்வாதிகள் மத்தியில் இந்த காருக்கு தனி மவுசு இருக்க தான் செய்கிறது.

ஜாகுவார் எக்ஸ்எப்: என்னதான் கார் வைத்திருந்தாலும் சொகுசு கார்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. இப்படியாக மாதம்பட்டி ரங்கராஜ் முதன்முதலாக வாங்கிய சொகுசு கார் என்றால் அது ஜாகுவார் என்ற கார் தான். இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 76 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை அவர் வாங்கி இருந்தாலும் தற்போது அவரிடம் இந்த கார் இல்லை.

madhampatty rangaraj car collection

பிஎம்டபிள்யூ எக்ஸ்3: பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ் 3 கார் இன்றளவும் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகும் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 72.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜ் இந்த காரையும் சொந்தமாக வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்த காரை இவர் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பிரபலங்கள் சொந்தமாக வைத்திருக்கிறார்கள்.

வால்வோ வி40: வால்வோ நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ரக காரான இது இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. கடந்த 2019ம் ஆண்டு இந்த காரின் தயாரிப்பை அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. ஐந்து சீட்டர் கொண்ட இந்த கார் இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனையானது. இந்த கடைசியாக விற்பனையாகும் போது ரூபாய் 31.92 லட்சம் என்ற விலையில் விற்பனையானது. இந்த காரையும் மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கி தனது பயன்பாட்டிற்காக வைத்துள்ளார்.

madhampatty rangaraj car collection

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜிஎல்ஏ என்ற காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் மூன்று விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ரூபாய் 58.15 லட்சம் என்ற அதிகபட்ச விலையில், இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரையும் மாதம்பட்டி ரங்கராஜ் சொந்தமாக வாங்கி பயன்படுத்தி வருகிறார்.

ஜாகுவார் எக்ஸ்ஜே எல்: மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே பயன்படுத்தி வந்த ஜாகுவார் என்ற காரை கொடுத்துவிட்டு தற்போது ஜாகுவார் எக்ஸ்ஜே எல் என்ற 4 சீட்டர் சொடன் காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்த கார் ரூபாய் 1.97 கோடி என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. மொத்தம் 6 விதமான வேரியன்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. அவரிடம் உள்ள காஸ்ட்லியான காரில் இதுவும் ஒன்றாகும்.

போர்ஷே மேக்கன்: போர்ஷே மேக்கன் கார் ஒரு 5 சீட்டர் கொண்ட எஸ்யூவி ரக காராகும் இந்த கார் மூன்று விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. என்கேப் சோதனையில் 5 ஸ்டார் பெற்ற இந்த கார் பாதுகாப்பில் சிறப்பான பெயரை பெற்ற காராகும். இந்த கார் 1.53 கோடி என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இதுவும் மாதம்பட்டி ரங்கராஜிடம் உள்ள கோடிகள் மதிப்பிலான கார்களில் ஒன்றாகும்.

ஆட்டோபயோகிராபி ரேஞ்ச்ரோவர்: மாதம்பட்டி ரங்கராஜ் அடுத்த புதிய காராக லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் காரின் ஆட்டோபயோகிராபி வெர்ஷனை வாங்கப் போவதாக இந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த கார் ரூபாய் 3.43 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை வாங்கினால் அவரிடம் உள்ள மிக காஸ்ட்லியான காரில் இதுதான் முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே கேட்டரிங் சேவை துறையில் மிகப்பெரிய பிரபலமடைந்துள்ளார். இவர் கேட்டரிங் சேவைக்காக பலர் காத்திருக்கிறார்கள். பல முக்கிய பிரபலங்களின் திருமண விழாவிற்கு இவரது கேட்டரிங் சேவையை தான் புக் செய்கிறார்கள். இவர் அடுத்ததாக சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்க வேண்டும் என்பதை கனவாக வைத்துள்ளார் என்பதையும் இந்த பேட்டி தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 4, 2024, 10:32 [IST]
English summary
Madhampatty rangaraj car collection tata indica to jaguar xj
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X