அப்பா பெரிய அரசியல்வாதியா இருந்தாலும் சொந்த காலில் நிற்க விரும்பும் மகன்! காரில் இருந்து மொத்தமும் கடன் தான்!!
சினிமா (Cinema) பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் புதியதாக விலையுயர்ந்த கார்களை வாங்கினாலே அது அவர்களது பெற்றோர்கள் வாங்கி கொடுத்ததாக இருக்கும் என்றே நாம் நினைக்கிறோம். அந்த வகையில், மலையாள திரைப்பட நடிகரும், கேரளாவின் ஒரேயொரு பாஜக எம்பி-யுமான சுரேஷ் கோபி (Suresh Gopi) அவர்களின் மகன் மாதவ் சுரேஷ் (Madhav Suresh) சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ (Volkswagen Golf GTI) காரை வாங்கிய போதும் இந்த காரை நிச்சயமாக சுரேஷ் கோபி தான் வாங்கி கொடுத்திருப்பார் என நம்மில் பலர் நினைத்தோம். ஆனால், இந்த ஃபோக்ஸ்வேகன் காரை தனது சொந்த முயற்சியில் வாங்கியுள்ளதாக மாதவ் சுரேஷ் தனது சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பிரபலமான கார் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் ஒரு நிலையான மார்க்கெட்டை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடிக் கொண்டிருக்கிறது. இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ப குறைந்த விலையிலான கார்களை விற்பனைக்கு கொண்டுவரவே முடிந்தவரையில் ஃபோக்ஸ்வேகன் முயற்சிக்கிறது. இதற்கிடையில் அவ்வப்போது விலையுயர்ந்த கார்களையும் அறிமுகம் செய்கிறது.

அந்த வரிசையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த செயல்திறன்மிக்க மற்றும் விலைமிக்க கார், கோல்ஃப் ஜிடிஐ ஆகும். உலக நாடுகள் பலவற்றில் வரவேற்பை பெற்ற கோல்ஃப் காரின் ஜிடிஐ வெர்சனாக கோல்ஃப் ஜிடிஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் 150 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள கோல்ஃப் ஜிடிஐ கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகளை கடந்த ஜூன் மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் துவங்கியது.
குறிப்பாக, கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான கோல்ஃப் ஜிடிஐ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கொச்சியில் செயல்படும் ஃபோக்ஸ்வேகன் ஷோரூம் ஒன்று ஒரே நாளில் 25 கோல்ஃப் ஜிடிஐ கார்களை கஸ்டமர்களுக்கு வழங்கியதை நமது செய்தித்தளத்தில் கூட பார்த்து இருந்தோம். இந்த 25 கார்களில் பெரும்பாலானவற்றை மலையாள சினிமா பிரபலங்கள் தான் டெலிவிரி பெற்றுள்ளனர்.

அந்த வரிசையில், நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகன் மாதவ் சுரேஷும் இந்த காரை டெலிவிரி பெற்று இருந்தார். கோல்ஃப் ஜிடிஐ காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.53 லட்சமாக உள்ளது. ஆன்-ரோடு விலை ரூ.60 லட்சம் அளவிற்கு வந்துவிடும். காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களை வாங்கினால் காரின் விலை ரூ.65 லட்சத்தை தொட்டுவிடும்.
இவ்வளவு விலையுயர்ந்த காரை மாதவ் சுரேஷ் தனியாளாக வாங்கியிருக்க வாய்ப்பில்லை... இதில் தந்தை சுரேஷ் கோபியின் உதவி இல்லாமல் இருந்திருக்காது என பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இதில் தந்தையின் உதவி எதுவும் இல்லை எனவும், முழுக்க முழுக்க வங்கி கடனுதவி மூலம் இந்த கோல்ஃப் ஜிடிஐ காரை வாங்கியுள்ளதாகவும் மாதவ் சுரேஷ் சமீபத்தில் யூடியூப் சேனல் (Youtube Channel) ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளார்.

மற்ற சாதாரணமான இளைஞர்களை போல கடனுதவி மூலமாகவே இந்த காரை வாங்கியுள்ளதாக கூறும் மாதவ் சுரேஷ், அதனை திருப்பி நான் தான் செலுத்த வேண்டும் எனவும் பரிதாபத்துடன் தெரிவிக்கிறார். கோல்ஃப் ஜிடிஐ காரின் விலை இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், இந்த காரை இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உற்பத்தி செய்வது இல்லை.
சில சொகுசு கார்களை பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து, இந்தியாவில் முழு காராக அசெம்பிள் செய்து விற்பனை செய்வர். ஆனால் அவ்வாறு கூட இல்லாமல், ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார்கள் முழுவதுமாக வெளிநாட்டில் முழு காராக உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இதன் காரணமாகவே இந்த காரை இந்தியாவில் முதற்கட்டமாக 150 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடனுதவி பெற்று ரூ.60 லட்சத்தில் கார் வாங்குகிறார் என்றால் நிச்சயமாக அவர் தனிப்பட்ட வாழ்வில் உயரிய பொறுப்பில் இருக்கக் கூடியவராகவே இருப்பார். இதில் இருந்து மாதவ் சுரேஷ் சொந்த காலில் நிற்கிறார் என்பதை அறிய முடிகிறது. ஒருவேளை, இதுதான் மாதவ் சுரேஷ் சொந்த முயற்சியில் வாங்கிய முதல் காராகவும் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









