1980களில் பிரபலமா இருந்த நடிகையா இந்த 6 கோடி ரூபா கார வாங்கனது! இவங்களுக்கு முன்னாடி நயன்தாராலாம் ஒன்னுமே இல்ல

இந்திய சாலைகளில் மெக்லாரன் 750எஸ் கூபே (McLaren 750S Coupe) கார்களை காண்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம் ஆகும். ஏனெனில் இது மிகவும் விலை உயர்ந்த ஒரு கார்களில் ஒன்று. சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த காரை பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடியும். இப்படிப்பட்ட மெக்லாரன் 750எஸ் கூபே காரை, ஒரு கோடீஸ்வர தம்பதியினர் தற்போது வாங்கியுள்ளனர். இத்தனைக்கும் அவர்களிடம் ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்த கார்கள் ஏராளமாக இருக்கின்றன.

இதில், போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் (Porsche 911 GT2 RS), போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S), ஃபெராரி 296 ஜிடிபி (Ferrari 296 GTB), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி (Mercedes Benz GLS 350d) மற்றும் மெர்சிடிஸ் மேபெக் எஸ்500 (Mercedes Maybach S500) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Madhuri Dixit - Shriram Nene Buys McLaren 750S Coupe

இவ்வளவு விலை உயர்ந்த கார்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில் தற்போது மெக்லாரன் 750எஸ் கூபே காரை வாங்கியிருப்பது, மாதிரி தீக்ஸித் (Madhuri Dixit) - ஸ்ரீராம் நேனே (Shriram Nene) தம்பதியினர் ஆவர். 1980, 90களில் பாலிவுட் திரையுலகை கலக்கிய நடிகை மாதுரி தீக்ஸித்தும், அவரது கணவர் ஸ்ரீராம் நேனேவும் தீவிரமான கார் காதலர்கள் ஆவர்.

இதன் வெளிப்பாடுதான் அவர்களின் புதுவரவான மெக்லாரன் 750எஸ் கூபே கார். நாங்கள் ஏற்கனே குறிப்பிட்டபடி இந்த காரின் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் ஆகும். செயல்திறன் மிக்க இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 750 ஹெச்பி பவர் மற்றும் 800 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

McLaren 750S Coupe

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.8 வினாடிகளிலேயே இந்த கார் எட்டி விடும். அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு வெறும் 7.2 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும்.

மறுபக்கம் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 331 கிலோ மீட்டர்களாக உள்ளது. மெக்லாரன் 750எஸ் கூபே காரின் செயல்திறனை விளக்குவதற்கு வேறு உதாரணங்கள் தேவையில்லை. இது போன்ற சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதால், சூப்பர் கார் ஆர்வலர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஃபெராரி 296 ஜிடிபி கார்தான், மெக்லாரன் 750எஸ் கூபே காரின் நேரடி போட்டி மாடல் ஆகும். ஆனால் அந்த காரையும் கூட, மாதுரி தீக்ஸித் - ஸ்ரீராம் நேனே தம்பதியினர் வைத்துள்ளனர். இதில் இருந்தே செயல்திறன் மிக்க கார்களை அவர்கள் எவ்வளவு நேசிக்கின்றனர்? என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இங்கே மற்றொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். மாதுரி தீக்ஸித் - ஸ்ரீராம் நேனே தம்பதியினரிடம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட விலை உயர்ந்த கார்கள் மட்டுமல்லாது, டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) போன்ற நடுத்தர வர்க்க மக்கள் பயன்படுத்தும் கார்களும் கூட இருக்கின்றன என்பதுதான் அது!

More from DriveSpark

Article Published On: Tuesday, November 19, 2024, 23:17 [IST]
English summary
Madhuri dixit shriram nene buys mclaren 750s coupe all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+