1990களில் கொடி கட்டி பறந்த நடிகை! 7 கோடி ரூபா காரை வாங்கனது அவங்களா! வயசு ஆக ஆக அழகு இன்னும் கூடிகிட்டே போகுது

திரைப்பட நடிகைகள் விலை உயர்ந்த கார்களை வாங்குவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். ஆனால் சொகுசு கார்கள்தான் (Luxury Cars) பெரும்பாலான திரைப்பட நடிகைகளின் தேர்வாக இருந்து கொண்டுள்ளன. அதாவது ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான், திரைப்பட நடிகைகளின் முதன்மையான தேர்வு. ஃபெராரி (Ferrari) போன்ற நிறுவனங்களின் செயல்திறன் மிக்க சூப்பர் கார்களை (Super Cars), நடிகைகள் வாங்குவது என்பது அரிதிலும் அரிதான ஒரு விஷயம் ஆகும்.

அப்படிப்பட்ட அரிதான நிகழ்வு ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. ஆம், இந்தியா முழுக்க பிரபலமாக உள்ள நடிகை ஒருவர், மிகவும் விலை உயர்ந்த ஃபெராரி 296 ஜிடிஎஸ் (Ferrari 296 GTS) காரை வாங்கியுள்ளார். தற்போதைய நிலையில் இந்த காரின் ஆன்-ரோடு விலை (On-Road Price) 7.20 கோடி ரூபாய் ஆகும்.

Madhuri Dixit Spotted In Ferrari 296 GTS

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை, ஃபெராரி 296 ஜிடிஎஸ் கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிலோ மீட்டர்களாக உள்ளது.

இப்படிப்பட்ட செயல்திறன் மிக்க காரை வாங்கியிருப்பது, பிரபல பாலிவுட் நடிகையான மாதுரி தீக்ஸித் (Madhuri Dixit) ஆவார். மாதுரி தீக்ஸித் தனது புத்தம் புதிய ஃபெராரி 296 ஜிடிஎஸ் காரை டெலிவரி எடுத்து பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Madhuri Dixit Spotted In Ferrari 296 GTS Car

யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மாதுரி தீக்ஸித் உடன் அவரது கணவர் டாக்டர் ஸ்ரீராம் நேனேவையும் (Dr. Shriram Nene) நம்மால் காண முடிகிறது. மாதுரி தீக்ஸித் - ஸ்ரீ ராம் நேனே தம்பதியினர் தீவிரமான கார் ஆர்வலர்கள் ஆவார்கள். அவர்களிடம் ஏற்கனவே பல்வேறு விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கின்றன.

அவர்களது கார் கலெக்ஸனில் (Car Collection) மெர்சிடிஸ் மேபெக் எஸ்560 (Mercedes Maybach S560), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), மெக்லாரன் 750எஸ் கூபே (McLaren 750S Coupe) மற்றும் போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த வரிசையில் ஃபெராரி 296 ஜிடிஎஸ் கார் தற்போது அவர்களுடைய வீட்டிற்கு வந்துள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 3.0 லிட்டர் ட்வின் டர்போ வி6 இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 830 பிஹெச்பி பவர் மற்றும் 740 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்ந்த மற்றும் செயல்திறன் மிக்க காரை வாங்கியதற்காக சமூக வலை தளங்களில் மாதுரி தீக்ஸித்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாதுரி தீக்ஸித்திற்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு நாடு முழுக்க ரசிகர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலம். கடந்த 1980 மற்றும் 90களில் அவர் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். நீங்கள் மாதுரி தீக்ஸித்தின் ரசிகராக இருந்தாலோ அல்லது அவரை போலவே கார் காதலராக இருந்தாலோ உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்.

மாதுரி தீக்ஸித்திடம் ஏற்கனவே ஃபெராரி 296 ஜிடிஎஸ் கார் இருக்கிறதே? என்பதுதான் அது. அவரிடம் ஏற்கனவே இருப்பது ஃபெராரி 296 ஜிடிபி (Ferrari 296 GTB) ஆகும். தற்போது வாங்கியிருப்பது ஃபெராரி 296 ஜிடிஎஸ். இந்த இரண்டும் வெவ்வேறு கார்கள் ஆகும். ஃபெராரி 296 ஜிடிபி காரின் ஹார்டு டாப் கன்வெர்டபிள் வெர்ஷன்தான் ஃபெராரி 296 ஜிடிஎஸ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மாதுரி தீக்ஸித் தொடர்ச்சியாக வாங்கி கொண்டுள்ள விலை உயர்ந்த கார்கள் எல்லாம், கார்கள் மீது அவர் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவதாக உள்ளன. மிகவும் தீவிரமான கார் காதலர் என்பதால், வரும் காலங்களில் மாதுரி தீக்ஸித் இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களை எல்லாம் வாங்குவார் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 15, 2025, 12:40 [IST]
English summary
Madhuri dixit spotted in ferrari 296 gts worth rs 7 20 crore viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+