1980, 90களில் இளசுகளின் தூக்கத்த கெடுத்த நடிகையா இது! தயாரிப்பாளர்கள் அள்ளி குடுத்த காசெல்லாம் காரா மாறீருச்சு
இந்திய சந்தையில், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில், மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue). அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), சல்மான் கான் (Salman Khan), ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), காத்ரீனா கைஃப் (Katrina Kaif), அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும், ரேஞ்ச் ரோவர் வோக் உள்ளது. இந்த வரிசையில் பிரபல நடிகையான மாதுரி தீக்ஸித்தும் (Madhuri Dixit) ரேஞ்ச் ரோவர் வோக் காரை வைத்துள்ளார்.
57 வயதாகும் மாதுரி தீக்ஸித்திற்கு அறிமுகமே தேவையில்லை. இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். கடந்த 1980 மற்றும் 90களில் மாதுரி தீக்ஸித் புகழின் உச்சத்தில் இருந்தார். அந்த சமயத்தில் அவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளி வந்தன.

நடிப்பை போலவே, சொகுசு கார்களை அதிகம் விரும்ப கூடியவராக மாதுரி தீக்ஸித் உள்ளார். இவரிடம் ஏராளமான சொகுசு கார்கள் உள்ள நிலையில், கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ரேஞ்ச் ரோவர் வோக் காரை வாங்கினார். இந்த ரேஞ்ச் ரோவர் வோக் கார், மாதுரி தீக்ஸித்தின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாதுரி தீக்ஸித்தின் ரேஞ்ச் ரோவர் வோக் காரில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 296 பிஹெச்பி பவரையும், 1,500-2,000 ஆர்பிஎம்மில் 650 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த சொகுசு காரில் மாதுரி தீக்ஸித் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் மாதுரி தீக்ஸித் காரில் இருந்து இறங்கிய பின், ஒரு கட்டிடத்தின் உள்ளே செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இது பாலிவுட் திரையுலகில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட சஜீத் நடியட்வாலாவின் (Sajid Nadiadwala) அலுவலகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதுரி தீக்ஸித் மிகவும் தீவிரமான கார் காதலர் ஆவார். அவரது கணவர் டாக்டர் ஸ்ரீராம் மாதவ் நானேவும் (Dr Shriram Madhav Nene) கூட கார் காதலர்தான்.
மாதுரி தீக்ஸித் - டாக்டர் ஸ்ரீராம் மாதவ் நானே தம்பதியிடம், ஃபெராரி 296 ஜிடிஎஸ் (Ferrari 296 GTS), போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S), போர்ஷே 911 ஜிடி3 (Porsche 911 GT3) மற்றும் மெர்சிடிஸ் மேபெக் எஸ்560 (Mercedes Maybach S560) போன்ற கார்கள் எல்லாம் உள்ளன.
இந்த மிகவும் விலை உயர்ந்த கார்களை எல்லாம் குழந்தைகள் போல் கருதுவதாக டாக்டர் ஸ்ரீராம் மாதவ் நானே தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்ததாக 9 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி (Lamborghini) கார் ஒன்றை வாங்க விரும்புவதாக அவர் சமீபத்தில் கூறியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாதுரி தீக்ஸித்தும், அவரது கணவர் டாக்டர் ஸ்ரீராம் மாதவ் நானேவும், கார்களை எந்த அளவிற்கு விரும்புகின்றனர்? என்பதை அவர்களது கார் கலெக்ஸன் மூலமாக புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த கார் கலெக்ஸனை வைத்திருப்பவர்களில், மாதுரி தீக்ஸித் - டாக்டர் ஸ்ரீராம் மாதவ் நானே தம்பதியினர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.


Click it and Unblock the Notifications








