4 கோடி ரூபாய் ரேஞ்ச் ரோவர் காரில் தேவதை போல் வந்து இறங்கியது அவரா? வயசானாலும் அழகு இன்னும் குறையல!!
மாதுரி தீட்சித் (Madhuri Dixit), பிரபலமான பாலிவுட் நடிகை. இவர், 4 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக வாங்கிய ரேஞ்ச் ரோவர் காரில் காட்சி தந்து உள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாலிவுட் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகள் மிகுந்த பிரபலத்தில் இருந்துள்ளனர். அந்த வகையில், 1990ஆம் காலக்கட்டத்தில் நடிப்பின் உச்சத்தில் இருந்தவர் நடிகை மாதுரி தீட்சித். இவர் புதியதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், அந்த காரில் மாதுரி தீட்சித் சமீபத்தில் காட்சி தந்துள்ளார்.

பொதுவாகவே, பாலிவுட் பிரபலங்கள் புது, புது லக்சரி கார்களை அவ்வப்போது வாங்குவார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம். தங்களது ஸ்டேட்டஸை அவ்வப்போது வெளிக்காட்டுவதற்காக இவ்வாறு கார்களை வாங்கி குவிக்கின்றனர். குறிப்பாக, கம்பீரமான ரேஞ்ச் ரோவர் கார்கள் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் மிக பிரபலமானவைகளாக உள்ளன.
ஆதலால், நடிகை மாதுரி தீட்சித் புதியதாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியிருப்பது ஒன்றும் ஆச்சிரியமான விஷயம் அல்ல. மாதுரி தீட்சித் வாங்கியிருப்பது விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயாகிராஃபி லாங் வீல்பேஸ் கார் ஆகும். லாங் வீல்பேஸ் என்பது காரின் நீளத்தை குறிக்கிறது. அதாவது, இவர் வாங்கியிருப்பது நீளமான ஆட்டோபயோகிராஃபி கார் ஆகும்.

நடிகர் மாதுரி தீட்சித் வாங்கியிருக்கும் காரில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் உடன் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி லாங் வீல்பேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.16 கோடியாக தற்சமயம் உள்ளது. ஆனால், ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் காரின் ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.4 கோடி வந்துவிடும்.
மும்பையில் ஜூஹு என்கிற கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள பகுதிக்கு நடிகை மாதுரி தீட்சித் தனது கணவரும் டாக்டருமான ஸ்ரீராம் நேனி உடன் தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரில் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், மாதுரி தீட்சித்தின் இந்த புதிய காரில் '0006' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளதை காணலாம். அதாவது, இந்த நம்பர் பிளேட்டிற்காக நடிகை மாதுரி தீட்சித் கூடுதல் பணத்தை செலவழிக்க வேண்டி இருந்திருக்கும்.

அதுமட்டுமின்றி, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி காரை பளபளப்பான சன்செட் கோல்டு நிறத்தில் இந்த நடிகை வாங்கியுள்ளார். இந்த பிரத்யேகமான பெயிண்ட்டிற்காகவும், மாதுரி தீட்சித் கூடுதல் பணத்தை செலவழித்து இருப்பார் என கூறப்படுகிறது. மாதுரி தீட்சித்தின் இந்த ரேஞ்ச் ரோவர் காரில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினோம் அல்லவா... ஆட்டோபயோகிராஃபி காரில் டீசல் என்ஜின் உடன் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது.
இந்த காரில் பொருத்தப்படும் 6-சிலிண்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. என்ஜின் உடன் இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் மூலமாக என்ஜினின் ஆற்றல் ஆனது காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை மாதுரி தீட்சித்திடம் ஏற்கனவே மெர்சிடிஸ்-மேபக் எஸ்560, போர்ஷே 911 டர்போ எஸ் கார்கள் உள்ளன. இருப்பினும், புதியதாக ஒரு காரை வாங்க வேண்டும் என்பதற்காக இந்த ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். இது மாதுரி தீட்சித்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது அவரது கணவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும், பாலிவுட் சினிமா வட்டாரத்தில் இது மற்றுமொரு ரேஞ்ச் ரோவர் கார்.


Click it and Unblock the Notifications









