லிட்டர் 10 ரூபாயில் காருக்கான எரிபொருள் கண்டுபிடித்த மத்திய பிரதேச மெக்கானிக்!

Posted By:

சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்களை தயாரிப்பதிலும், மாற்று எரிபொருள் வாகன தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் உலகின் பல முன்னணி கார் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றன.

ஆனால், அதற்கான பெரும் முதலீடுகளால் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான விலையில் இதுவரை சிறந்த மாற்று எரிபொருள் வாகனங்கள் அல்லது மாற்று எரிபொருளை வழங்குவதில் சிக்கல் இருந்து வருகிறது.

இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மெக்கானிக் ஒருவர் பன்மடங்கு குறைவான விலையில் தயாரிக்கக்கூடிய காருக்கான எரிபொருளை கண்டறிந்து, அதனை தனது காரில் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார். அதுபற்றிய சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மெக்கானிக் மேதை

மெக்கானிக் மேதை

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரயீஸ் மர்கானி [44] என்பவர்தான் இந்த புதிய எரிபொருளையும், அதனை பயன்படுத்தி காரை இயக்குவதற்கான நுட்பத்தையும் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளார்.

 எரிபொருள்

எரிபொருள்

கால்சியம் கார்பைடு மற்றும் தண்ணீர் கலவையின் வேதிவினை மூலமாக கிடைக்கும் அசிட்டிலின் வாயு மூலமாக தனது காரை அவர் இயக்குகிறார். கடந்த 6 மாத கால தீவிர முயற்சியின் பலனாக இந்த வாகன எரிபொருள் நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.

மலிவு விலை

மலிவு விலை

தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 70 ரூபாய் வரை விற்கிறது. ஆனால், ரயீஸ் கண்டறிந்திருக்கும் எரிபொருளின் விலை ரூ.10 லிருந்து ரூ.20 வரை இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 காப்புரிமை

காப்புரிமை

இந்த புதிய தொழில்நுட்பத்தை விலைக்கு தருமாறு சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ரயீஸை அணுகியுள்ளது. அதனை தருவதற்கு அவர் மறுத்துவிட்டதோடு, தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

 முதலீடு

முதலீடு

இந்த புதிய எரிபொருள் தொழில்நுட்பத்தின்படி, எரிபொருள் தயாரிப்பதற்கு தனது நகரத்தில் ஆலை அமைப்பதற்கு இந்திய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ரீமாடல் கார்

ரீமாடல் கார்

தனது காரில் சில மாற்றங்களை செய்து இந்த எரிபொருளை அவர் பயன்படுத்தி அசத்துகிறார். மேலும், அந்த காரின் பின்புறத்தில் தண்ணீருக்கான சிலிண்டரும், அதில் கார்படைுகளையும் போட்டு, வண்டியை கிளப்புகிறார். இந்த எரிபொருள் மூலமாக, இந்தியர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆறுதல் கிடைக்கும் என்று அவர நம்பிக்கை தெரிவிக்கிறார்.

 

Photo credit: ANI News

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Please Wait while comments are loading...

Latest Photos