அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மபி.. எதில் தெரியுமா..?

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெறுமையை மத்தியபிரதேசம் சூடியுள்ளது. எந்த விஷயத்தில் மபி முதல் மாநிலம் என்ற சிறப்பந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றில் ஒழுங்குமுறையைக் கடைபிடிக்குமாறு கூறியிருந்தது.

இந்த அறிவிப்பின்படி, நாட்டிலேயே முதல் மாநிலமாக ஒருங்கிணைந்த வாகன பதிவு அட்டை திட்டத்தை மத்திய பிரதேச மாநிலம் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

அதாவது, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனித்தன்மை வாய்ந்த முத்திரைகளுடன் வாகனத்திற்கான பதிவு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமங்களை வழங்கி வருகின்றன.

இது மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசத்துடன் வேறுபட்டு காணப்படும். ஆகையால், அதனை சீர்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களும் அவற்றை சீரான அடையாளங்களுடைய அட்டையாக வழங்கும்படி கூறியிருந்தது.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒராண்டு முடிவுறும்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் வாகனங்களுக்கான பதிவெண்ணில் ஒருங்கிணைந்த அட்டை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நாட்டிலேயே இத்திட்டத்தை செயல்பாட்டிற்குக் கொண்டுவரும் முதல் மாநிலம் இதுதான். ஆகையால், நாட்டிலேயே ஒருங்கிணைந்த வாகன பதிவெண் அட்டையைப் பெறும் முதல் மாநிலத்தவர்கள் என்ற பெறுமையை மத்தியப்பிரதேச மாநில மக்கள் பெற்றிருக்கின்றனர்.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

இதுமட்டுமின்றி, ஒருங்கிணைந்த வாகன ஓட்டுநர் உரிமம் அட்டை திட்டத்தையும் மபி செயல்பாட்டுக் கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தை ஏற்கனவே முதல் மாநிலமாக உத்தரபிரதேஷ மாநிலம் செயல்பாட்டுக் கொண்டு வந்துவிட்டது.

ஆகையால், நாட்டிலேயே ஒருங்கிணைந்த வாகன ஓட்டுநர் உரிமத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் இரண்டாம் மாநிலம் என்ற பெறுமை மத்திய பிரதேசம் பெற்றிருக்கின்றது.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

இதுகுறித்து செவ்வாய்கிழமை (பிப்ரவரி 25) போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் கமல்நாத், "நாட்டிலேயே முதல் மாநிலமாக ஒருங்கிணைக்கப்பட்ட வாகன பதிவு அட்டையை மத்திய பிரதேச மாநிலம் செயல்பாட்டிற்கு கொண்டுள்ளது. உபி-க்கு அடுத்தபடியாக இரண்டாம் மாநிலமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் அட்டையையும் மபி செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றது" என தெரிவித்தார்.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

தொடர்ந்து, அன்றைய தினத்தின் மதியமே அத்திட்டத்தை அம்மாநிலத்தின் தலைமை செயலகத்தில் ரிப்பன் வெட்டி முதலமைச்சர் கமல்நாத் மாநிலம் முழுவதும் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தார். இத்துடன், முதல் ஆறு நபர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட வாகன பதிவு அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமங்களை, உரியவர்களிடம் வழங்கி சிறப்பித்தார்.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலத்தின் போக்குவரத்துத்துறை ஆணையர் வி. மதுகுமார் கூறியதாவது, "கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதலின்படி இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது" என்றார்.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

தொடர்ந்து பேசிய அவர், "பதிவு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகிய இரண்டிலும் ஒருங்கிணைத்த அடையாள அட்டை திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது மத்திய பிரதேசம்தான் மாநிலம் முதல் மாநிலம்" என பெறுமிதம் கொண்டார்.

முன்னதாக, இத்திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்த உபி-யில் தற்போது வரை ஓட்டுநர் உரிமத்தில் மட்டுமே ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

இந்த ஒருங்கிணைந்த அடையாள அட்டை முந்தைய ஆவணங்களைப் போன்றல்லாமல் பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்டாக இருக்கின்றது. இதற்காக அட்டையின் இரு பக்கங்களும் பயன்படுத்தப்பட்டு, வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் பற்றிய அனைத்து தகவல்களும் பதிவு சான்றில் அச்சிடப்படுகின்றன.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

இதேபோன்று, ஓட்டுநர் உரிம அட்டையிலும் அதன் உரிமையாளருடைய பிரத்யேக தகவல்கள் வழங்கப்படுகின்றது. இத்துடன், இந்த கார்டில் க்யூஆர் ஸ்கேன் கோடும் வழங்கப்படுகின்றது. அது, ஒரே ஸ்கேனிங்கில் அனைத்து தகவல்களையும் விரல்நுனியில் கொடுத்துவிடும்.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

குறிப்பாக பெயர், முகவரி, இரத்தத்தின் பிரிவு, பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

இத்தைகய பிரத்யேக அட்டைகளை வழங்குவதற்கான கருவி மற்றும் மென்பொருள்கள் ஏற்கனவே தயார்படுத்தப்பட்டுவிட்டன.

அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மத்தியபிரதேசம்... எதில் தெரியுமா..?

மேலும், இந்த ஆவணத்தில் ஏதேனும் பிழை இருக்குமானால் அவற்றை திருத்துவதற்கான மேற்கொள்ளவும் ஏற்பாடுச் செய்யப்பட்டள்ளது.

இந்த தரத்திலான கார்டுகள்தான் மிக விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது. இதன் ஆரம்பப் புள்ளியாக மத்திய பிரதேசத்தில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என மத்திய பிரதேச மாநிலத்தின் போக்குவரத்துத்துறை ஆணையர் வி. மதுகுமார் தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
MP Has Launches Unified Vehicle Registration Card As The First State In The Country. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X