வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

புதிய வாகனங்களின் விலையை உயர்த்தும் வகையில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால் ஒட்டுமொத்த வாகன உலகமே அதிர்ச்சியில் உறைந்திருந்தது. பலரின் ஷாக்கிற்கு காரணமாக அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் தற்போது பின் வாங்கியிருக்கின்றது. இதுகுறித்த முழுமையான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

சென்னை உயர்நீதிமன்றம், செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்பனையாகும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கான பரந்த காப்பீட்டூ திட்டம் கட்டாயம் என அறிவித்து உத்தரவிட்டது. விபத்து குறித்த ஓர் வழக்கு விசாரணையின் போதே இந்த அதிரடி உத்தரவை நீதிமன்றம் அறிவித்தது.

வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

இதனால் புதிய வாகனங்களின் விலை பல மடங்கு உயரும் நிலை ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமே பேரதிர்ச்சியில் உறைந்தது என்றுகூட கூறலாம். குறிப்பாக பட்ஜெட் வாகன விரும்பிகள் மத்தியில் உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு அவர்களை அதிர்ச்சியின் விளிம்பிற்கே எடுத்துச் சென்றது.

வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

இந்த நிலையில், அனைவருக்கும் ஆதரவளிக்கும் வகையில் மற்றும் ஓர் அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. அதாவது, கட்டாய நீண்ட நாள் பம்பர் டூ பம்பர் காப்பீடு திட்டத்தை உயர்நீதிமன்றம் பின் வாங்கிக் கொள்வதாக கூறியிருக்கின்றது. இதனால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியிருக்கின்றனர்.

வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

நீண்ட கால காப்பீட்டு திட்டம் இந்தியாவிற்கு புதிதல்ல. இதற்கு முன்னதாகவும் இத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதனால் வாகனங்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதன் விளைவாக விலை கட்டுப்பாட்டு இத்திட்டத்தை மறு பரிசீலனைக்கு உட்படுத்தியது. காப்பீட்டு நிறுவனங்களுடன் திட்டத்தை ஒழுங்குப்படுத்துவற்கான பணியில் அது களமிறங்கியது.

வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் உயர்நீதிமன்றம் மீண்டும் இத்திட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட்டது. தற்போது தனது உத்தரவை பின் வாங்குவதாக அறிவிப்பும் வெளியிட்டிருக்கின்றது. வாகனங்களில் பயணிப்பவர்கள், பில்லியன் ரைடர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு பரந்த காப்பீட்டு திட்டத்தை நீதிமன்றம் கட்டாயமாக்கியது. குறிப்பாக, பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் இந்த அதிரடி உத்தரவை நிறுவனம் வெளியிட்டிருந்தது.

வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

ஆனால், இதை நடைமுறைப்படுத்த தற்போது சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தினால் நீதிமன்றம் உத்தரவை பின் வாங்கியிருப்பதாக அறிவித்திருக்கின்றது. முன்னதாக நீண்ட கால காப்பீடு குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவை வெளியிட்டதை அடுத்து, அந்த உத்தரவை அமல்படுத்தும் பணியில் துறை சார்ந்த அதிகாரிகள் களமிறங்கியிருந்தனர். இந்த நிலையிலேயே உத்தரவு தற்போது பின் வாங்கப்பட்டிருக்கின்றது அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

முன்னதாக நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தை உச்ச நீதிமன்றம் 2018 செப்டம்பர் மாதம் அமல்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவினால் புதிய வாகனங்களின் விலை மிகக் கடுமையாக உயரவிருந்தது. அது, தற்போது இருக்கும் விலையில் இருந்து எட்டு சதவீதம் தொடங்கி பத்து சதவீதம் வரை உயர்த்துவதற்கான சாதகத்தை ஏற்படுத்தியது.

வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

இதன் விளைவாக பைக் மற்றும் ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்களின் விலை ரூ. 5 ஆயிரம் தொடங்கி ரூ. 6 ஆயிரம் வரையும், ஆரம்ப நிலை கார் மாடல்களான ஆல்டோ மற்றும் க்விட் போன்ற கார்களின் விலை ரூ. 50 ஆயிரம் வரையிலும், அதுவே சற்று உயர் நிலை மாடல்களாக இருந்தால் (க்ரெட்டா போன்ற உயர் ரக எஸ்யூவி வாகனங்கள்) அவற்றின் விலை ரூ. 2 லட்சம் வரையிலும் உயரும் என வாகன கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

நல்ல வேலையாக இதைத் தடுக்கும் வகையில் தனது உத்தரவை நீதிபதி எஸ். வைத்தியநாதன் பின் வாங்கியிருக்கின்றார். ஏற்கனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக புதிய வாகனங்களின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றனர். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதன் காரணத்தினால் வாகன உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக வாகனங்களின் விலைகளை உயர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

இந்த நிலையில் நீண்ட கால காப்பீட்டு திட்டம் இன்னும் சில சதவீதம் புதிய வாகனங்களின் விலையை உயர்த்துமானால் வாகனங்களின் விற்பனை பல மடங்கு பாதிக்கும் என வாகனத்துறை பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வாகனத்துறை இருக்கின்றது. ஆகையால், பொருளாதார நிபுணர்களும் இதனால் உயர்நீதிமன்றத்தில் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். தற்போது, உத்தரவு பின்வாங்கப்பட்டிருப்பதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியிருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Madras hc withdraws bumper to bumper insurance order
Story first published: Tuesday, September 14, 2021, 19:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X