முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மாநில முதல் அமைச்சர் போன்ற உயர் பதவிகளை வகிப்பவர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவர்களின் வாகனங்களுக்கு முன்பும், பின்பும் நிறைய வாகனங்கள் அணிவகுத்து செல்லும். இந்த கான்வாயில் பாதுகாப்பு அதிகாரிகளும், அரசு உயர் அதிகாரிகளும் பயணம் செய்கின்றனர்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

ஆனால் உயர் பதவிகளை வகிப்பவர்களின் கான்வாய் செல்லும்போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் என்பவரே இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டார்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி சென்னை அடையாறு பகுதியில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாதிக்கப்பட்டார்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

அவர் சுமார் 25 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அத்துடன் உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இதன் பேரில் உள்துறை செயலாளர் பிரபாகர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

அப்போது நடைபெற்ற சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாக உள்துறை செயலாளர் பிரபாகர் கூறினார். மேலும் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாது எனவும் அவர் உறுதியளித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

இதன் பேரில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது. பொதுவாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாயில் 12 வாகனங்கள் வரும். இந்த எண்ணிக்கை பாதியாக, அதாவது வெறும் 6 வாகனங்களாக குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்தன.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

பொதுமக்களை தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டை முன்வைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே தற்போது தமிழ்நாடு அரசை பாராட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் உள்துறை செயலாளர் பிரபாகர் நேரில் ஆஜரானார்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

அப்போது பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டுக்களை தெரிவித்தார். தமிழ்நாடு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டுக்களை தெரிவித்தார்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

அத்துடன் முதல் அமைச்சரின் பாதுகாப்பில் எவ்விதமான சமரசங்களையும் செய்து கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார். தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவித்திருப்பது தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. முதல் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே மு.க.ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

அவரது தலைமையின் கீழான ஆட்சியின் மீது தற்போது வரை பொதுமக்களுக்கு அதிருப்திகள் எதுவும் எழவில்லை. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இது எதிரொலித்தது. ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு அதிருப்திகள் எதுவும் இல்லாத காரணத்தால், உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை! தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு! எதற்காக தெரியுமா?

இதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அணுகுமுறையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த உடனேயே கான்வாய் வாகனங்களை குறைத்ததையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான அணுகுமுறை என்று சமூக வலை தளங்களில் தற்போது நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 20, 2021, 23:59 [IST]
English summary
Madras high court lauds tamil nadu government here is the reason why
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+