தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

மிக கடுமையான வார்த்தைகளால், தமிழக போலீசாரை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உசுப்பி விட்டுள்ளனர். இதனால் காக்கிகள் இன்னும் தீவிரமாக அதிரடி காட்ட தயாராகி வருகின்றனர்.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இங்கு சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் விஷயத்தில் நீதிமன்றங்களும் அவ்வப்போது தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறன்றன. இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு சராசரியாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 1.50 லட்சம்.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். இதன் காரணமாகதான் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க மிக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் மற்றும் காரில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற நாட்டின் ஒரு சில நகரங்களில் இந்த விதிமுறைகள் மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழக தலைநகர் சென்னையில் வாகன ஓட்டிகள் யாரும் இந்த விதிமுறைகளை பெரிதாக சட்டை செய்யவில்லை. தமிழகத்தின் எஞ்சிய நகரங்களிலும் இதே நிலைமைதான்.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

எனவே டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை முறையாகவும், தீவிரமாகவும் அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததுதான்.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

குறிப்பாக கட்டாய ஹெல்மெட் விதிமுறையை மிக கடுமையாக அமல்படுத்தும்படி, தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு கடந்த காலங்களில் சென்னை ஐகோர்ட் அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்தது. ஐகோர்ட்டின் அதிரடியை தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக போலீசார் சாட்டையை சுழற்ற தொடங்கினர்.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது எவ்விதமான கரிசணமும் காட்டாமல், அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் போலீசாரால் இன்னமும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க முடியவில்லை.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலிலும், மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், போலீசார் சற்று திணறி வருகின்றனர். இந்த சூழலில் இந்த பொது நல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்தது.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

அப்போது டிராபிக் சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கேமராக்களில் பதிவாகியிருந்த சில வீடியோ காட்சிகள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஹெல்மெட் அணியாமல் ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் நீதிபதிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

அத்துடன் ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் பயணம் செய்பவர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யாமல், சிலை போல நின்று வேடிக்கை பார்க்கின்றனர் என்கிற ரீதியில் நீதிபதிகள் மிக கடுமையான அதிருப்தியை தெரிவித்தனர். இது மட்டுமல்லாது, ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து போலீசாரின் பட்டியலை தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

இதற்கு அரசு தரப்பு தங்களின் விளக்கத்தை அளித்தது. கட்டாய ஹெல்மெட் விதிமுறையை போலீசார் மிக தீவிரமாக அமல்படுத்தி கொண்டுதான் உள்ளனர். எனினும் ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் பயணம் செய்யும்போது, விபத்து நேர்ந்தால் என்ன நடக்கும்? என்பது குறித்த விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு முழுமையாக ஏற்படவில்லை.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

எனவே போக்குவரத்து காவல் துறை சரிவர செயல்படவில்லை என கூறி விட முடியாது என்று அரசு தரப்பு விளக்கம் அளித்தது. ஆனால் என்ன செய்வது? அரசு தரப்பின் விளக்கத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை தீவிரமாக அமல்படுத்த தவறிய போக்குவரத்து போலீசார், அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

அரசு இதனை செய்ய தவறும் பட்சத்தில், நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் கறார் காட்டினர். இதன்பின் இந்த வழக்கின் விசாரணையை நாளை மறு நாளுக்கு (ஜூலை 26) நீதிபதிகள் ஒத்திவைத்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த கெடுபிடியால், கட்டாய ஹெல்மெட் விதி முன்பை காட்டிலும் இன்னும் தீவிரமாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

ஏற்கனவே தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை மூலம் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக காவல் துறை தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் உள்ளது. அப்படி இருந்தும் கூட நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளதால், வரும் நாட்களில் நடவடிக்கை இன்னும் தீவிரமாகலாம். எனவே நீங்கள் ஹெல்மெட் பயன்படுத்துவதை விரும்பாதவர் என்றால், இன்றே உடனடியாக ஹெல்மெட் வாங்கி விடுங்கள்.

தமிழக போலீசாரை உசுப்பி விட்ட சென்னை ஐகோர்ட்டின் அந்த ஒரு வார்த்தை... மீண்டும் அதிரடி காட்ட தயார்...

இதன் மூலம் காவல் துறை நடவடிக்கைகளில் இருந்து நீங்கள் தப்புலாம். அது மட்டுமா? சாலை விபத்துக்களில் இருந்தும் ஹெல்மெட் உங்களை பாதுகாக்கும். ஆனால் பெயரளவிற்கு ஏதோ ஒரு ஹெல்மெட்டை வேண்டா வெறுப்பாக பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். தரமற்ற ஹெல்மெட்டை அணிவதும் ஒன்றுதான், அணியாமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே தரமான ஹெல்மெட்டை வாங்கி பயன்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Madras High Court Seeks Action Against Traffic Cops Who Do Not Enforce Compulsory Helmet Rule. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X