விமானத்தில் ஜிகர்தண்டா, பருத்திபால் எல்லாம் கேக்காதீங்க! மதுரையில் தமிழில் பேசி தெறிக்கவிட்ட பைலட்!

மதுரையிலிருந்து நேரடியா அபுதாபிக்கு இண்டிகோ நிறுவனம் விமான சேவையை துவங்கியுள்ளது. இந்த விமான பணத்தின் போது விமானி ஒருவர் பயணிகளிடம் தமிழில் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த விரிவான விபரங்களையும் இந்த விமான சேவை குறித்த தகவல்களையும் இங்கே விரிவாக காணலாம் வாருங்கள்.

மதுரையில் உள்ள விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இண்டிகோ நிறுவனம் மதுரையிலிருந்து அதிகமான விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் மதுரையலிருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் துவங்கியுள்ளது. கடந்த 13ம் தேதி முதல் சேவை துவங்கியுள்ளது.

madurai abu dhabi Flight

இந்த விமானம் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் இயங்கும். அதன்படி காலை 7.20 மணிக்கு அபுதாபியில் இருந்து கிளம்பும் இந்த விமானம் மதியம் 1.05 மணிக்கு மதுரையை வந்தடைகிறது. அடுத்தாக மதியம் 2.35 மணிக்கு கிளம்பும் இந்த விமானம் மாலை 5.20 மணிக்கு அபுதாபியை வந்தடைகிறது. இந்த விமானத்தின் முதல் பயணம் நேற்று துவங்கியது.

இந்த முதல் விமானத்தை மதுரையை சேர்ந்த இமானுவேல் என்பவர் இயக்கினார். இந்த முதல் பயணத்தில் பயணித்த பயணிகளிடம் விமானி இமானுவேல் பேசினார். இவர் பேசும் போது சிக்கிரம் கதவை சாத்திவிட்டு கிளம்பிவிடுவோம் எனவும், 4மணி நேரம் பயணம் இருக்கும் எனவும், சுமார் 3000 கி.மீ பயணிக்க வேண்டும் எனவும் பயணத்தை என்ஜாய் செய்யுங்கள் எனவும் பேசினார்.

madurai abu dhabi Flight

பின்னர் மதுரையில் இருந்து கிளம்பும் விமானம் என நீங்கள் ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீர்கள் கிடைக்காது என காமெடியாக பேசினர். இவர் பேசியதை கேட்டு அங்கிருந்தவர்கள் சிரிந்தனர். அடுத்தாக பயணிகளிடம் பயணம் சிறக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும் இந்த விமானி பேசி முடித்ததும் பயணிகளில் ஒருவர் முதல் விமானத்தை மதுரை மண்ணை சேர்ந்த ஒருவர் ஓட்டுவது பெருமையாக இருப்பதாக பேசியிருந்தார். இதுவும் இந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை மதுரை எம்பி சு.வெங்கடேஷன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். விமானத்தை தமிழில் பேசியது மட்டுமல்லாமல் பயணிகள் ரசிக்கும்படி ஒரு விமானி பேசியது நிச்சயம் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.

madurai abu dhabi Flight

இப்படியாக தமிழகத்தில் இயங்கும் விமானங்களில் தமிழ் விமானிகள் இயக்கும் போது அவ்வப்போது விமானங்களை தமிழில் அறிவிப்புகள் வெளியாகும் போது பயணிகள் மகிழ்ச்சிடைவார்கள். இந்த மாதிரியாக தமிழில் அறிவிப்புகள் வெளியாகும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது தனித்துவம் பெற்றதாக இருக்கிறது

டிரைஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விமான பயணம் செய்யும் போது பல நேரங்களில் இந்தியில் தான் அறிவிப்புகள் வரும். அதனால் ஹிந்தி தெரியாத பலர் சிரமப்படுவார்கள். இந்நிலையில் இப்படியாக தமிழ் அறிவிப்புகள் வரும் வீடியோ பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 14, 2025, 22:30 [IST]
English summary
Madurai abu dhabi flight tamil announcement video tamil
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X