பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

பிரசவத்திற்கு இலவசமாக சவாரி சென்ற ஆட்டோ டிரைவர் போலீசால் பாதிக்கப்பட்டார். அவர் வெளியிட்ட வீடியோ வைரலானதால், மாஸான சம்பவம் நடந்துள்ளது.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. தினசரி வேலைக்கு சென்றால்தான் வருமானம் என்ற நிலையில் இருப்பவர்கள், இதனால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆட்டோ டிரைவர்களும் அடங்குவர். ஊரடங்கு காரணமாக சுமார் 2 மாதங்களுக்கும் மேல் ஆட்டோ டிரைவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர்.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

அதன்பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு, ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனாலும் ஆட்டோக்களை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. இன்னமும் ஒரு சில ஊர்களில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக, ஆட்டோக்களில் பயணிக்க மக்களும் தயக்கம் காட்டுகின்றனர்.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

எனவே ஆட்டோ டிரைவர்களின் துயரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும், பிரசவத்திற்காக கர்ப்பிணியை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். மதுரை மாநகரில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

மதுரை மேலஅனுப்பானடி பகுதியில் வசித்து வருபவர் முத்து கிருஷ்ணன். 40 வயதாகும் இவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். கொரோனா வைரஸ் ஊரடங்கு பிரச்னையால், மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர்களில் முத்து கிருஷ்ணனும் ஒருவர். ஆனால் எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளிலும் இவரது ஆட்டோவில் கர்ப்பிணிகளுக்கு எப்போதும் இலவசம்தான்.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

கடந்த 8ம் தேதியன்று, அவரது வீட்டிற்கு அருகே கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்தார். இதுகுறித்த தகவல் முத்து கிருஷ்ணனுக்கு கிடைத்தது. எனவே கர்ப்பிணியை தனது ஆட்டோவில் ஏற்றி கொண்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முத்து கிருஷ்ணன் அழைத்து சென்றார். அங்கு அவரை அனுமதித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

அப்போது கோரிப்பாளையம் பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். முத்து கிருஷ்ணனின் ஆட்டோவையும் அவர்கள் நிறுத்தி விசாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது கர்ப்பிணிக்கு இலவசமாக உதவிய சம்பவத்தை காவல் துறையினரிடம், முத்து கிருஷ்ணன் எடுத்து கூறியுள்ளார். இருந்தபோதும் அவர் கூறிய எதையும் காவல் துறையினர் காதில் வாங்கவில்லை.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

மேலும் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான சலானை முத்து கிருஷ்ணனின் கையில் திணித்து விட்டனர். ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும்போது, கர்ப்பிணிக்கு உதவி செய்ததற்காக, காவல் துறையினர் அபராதம் விதித்ததால், முத்து கிருஷ்ணன் மனம் வெதும்பினார். எனவே நடந்த சம்பவங்களை விவரித்து, வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார்.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கியது. சாத்தான்குளம் விவகாரம் உள்ளிட்ட காரணங்களால், ஏற்கனவே காவல் துறையினர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அப்படிப்பட்ட சூழலில் இந்த வீடியோ வெளியானதால், காவல் துறையினரின் நடவடிக்கைகளுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

உயர் அதிகாரிகள் யார் கண்ணிலாவது இந்த வீடியோ சிக்கினால், தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்று முத்து கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்ப, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவின் கவனத்திற்கு இந்த வீடியோ சென்றது. உடனே முத்து கிருஷ்ணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அவர், போலீசாரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

அத்துடன் முத்து கிருஷ்ணனிடம் வசூல் செய்யப்பட்ட அபராத தொகையை உடனடியாக அவரிடமே திரும்ப ஒப்படைக்கவும், அவர் மீதான வழக்கை ரத்து செய்யவும் காவல் துறையினருக்கு அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.

பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்

மதுரை ஆட்டோ டிரைவர் முத்து கிருஷ்ணன் பேசிய வீடியோவை அதிரடி பஷீர் என்பவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை காவல் துறையினர் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் முத்து கிருஷ்ணன் போல், அவசரத்திற்காக வெளியே வருபவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி விட்டு நடவடிக்கை எடுப்பது சிறந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Madurai: Auto Driver Fined Rs.500 For Taking Pregnant Woman To Hospital - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X