திடீரென குறுக்கே வந்த ஆட்டோ! ரூ1 லட்சம் போச்சு! மதுரை மேம்பாலத்தில் நடந்த கொடூரம்!
இந்தியாவில் பல வாகன ஓட்டிகள் சாலைகளில் பயணிக்கும் போது சில நிமிடங்களை சேமிப்பதற்காக ராங் ரூட்டில் பயணிப்பது சாதாரண விஷயமாக இருக்கிறது. ஆனால் இப்படி பயணிப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் ஆபத்துகள், மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பெரிய அளவில் அவர்கள் கவலைப்படுவதில்லை. இப்படியாக ஆட்டோ டிரைவர் ஒருவர் ராங் ரூட்டில் வந்ததால் ஏற்பட்ட விபத்தில் கார் உரிமையாருக்கு ரூ1 லட்சம் செலவு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பேட் டிரைவர்ஸ் ஆஃப் பெங்களூரு என்ற யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கியா சோனட் கார் ஒன்று மதுரையில் ஒரு மேம்பாலம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த போது காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவான காட்சிகள் அவை. இந்த காட்சிகளின்படி மதுரையில் மலை பெய்து கொண்டிருந்த நேரம் இவர் காரில் சென்று கொண்டிருந்தார். கார் ஒரு மேம்பாலத்தில் இருந்து இறங்கி கொண்டிருந்தது. இது ஒரு வழி பாதை மேம்பாலம் ஆகும்.

இதனால் எதிரே வாகனங்கள் வராது என்ற தைரியத்தில் சென்று கொண்டிருந்தார். வலது பக்கம் உள்ள லேனில் பயணம் செய்தார். கார் அப்பொழுது சாதாரண வேகத்திலேயே சென்றது. ஒரு பெரிய வலது பக்க டர்ன் இருந்தது. அதில் அவர் திரும்பி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஆட்டோ ஒன்று எதிரே வந்தது. இது ஒரு வழி பாதை என்பதால் எதிரே வாகனம் வாராது என்ற தைரியத்தில் சென்ற இவருக்கும் ஆட்டோ வருவதை ஒரு நொடி சுதாரிக்க முடியவில்லை.
ராங் ரூட்டில் வந்த ஆட்டோ டிரைவரும் காரை எதிர்பார்க்கவில்லை. இதனால் எதிரே வந்த காரின் வலது பக்கத்தில் ஆட்டோ மொதியது. இது மட்டுமல்ல இந்த ஆட்டோவிற்கு பின்னால் ஒரு ஸ்கூட்டரும் ராங் ரூட்டில் வந்துள்ளது. ஆட்டோ வேகமாக வேறு வந்தது. அது மலை பெய்யும் நேரம் என்பதால் சாலையும் ஈரமாக இருந்தது. எதிரில் கார் வருவதை பார்த்ததும் ஆட்டோ டிரைவர் உடனடியாக பிரேக்கை பிடிக்க முயற்சித்தார். ஆனால் சாலை ஈரமாக இருந்ததால் ஆட்டோ ஸ்கிட்டாகி கார் மீது மோதியது.

இதனால் புதிதாக வாங்கிய கியா சோனட் கார் பலத்த சேமடைந்தது. வலது பக்க ஹெட்லைட், ஃபென்டர், மற்றும் பம்பர் ஆகிய பகுதிகள் சேதமாகின. இந்த வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை சரி செய்ய ரூ1.1லட்சம் செலவானதாகவும், அதற்காக இன்சூரன்ஸ் மூலம் கிளைம் செய்யப்பட்டது போக பாக்கி உள்ள ரூ9000 தான் கையில் இருந்து செலவு செய்துள்ளதாகவும் வீடியோவில் உள்ள சப் டைட்டில் மூலம் தெரிவித்துள்ளார்.
வாகனத்தை ராங் ரூட்டில் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். மேலும் இந்த வீடியோ ஆட்டோ ஓட்டி வந்தவருக்கு லைசென்ஸ் கூட கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் உண்மை தன்மை குறித்து தெரியவில்லை. அவரிடம் லைசென்ஸ் இருந்ததா? அல்லது வாகனம் ஓட்டும் போது கையில் லைசென்ஸ் இல்லாமல் இருந்ததா என்ற முழுமயான விபரம் தெரியவில்லை. ஆனால் அவர் ராங் ரூட்டில் வந்தது தான் விபத்திற்கு முக்கியமான காரணம் என தெரிகிறது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்தருக்கு என்ன ஆனாது என்ற விபரமும் தெரியவில்லை. வாகனம் ஓட்டும் போது இப்படியாக ராங் ரூட்டில் வந்து விபத்தில் சிக்குவது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சில நிமிடங்களை சேமிக்க வேண்டும் என கருதி பலர் பெரிய ஆபத்தில் சிக்க முயற்சிக்கிறார்கள். இது பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தவறான பாதையில் வாகனம் ஓட்டி செல்வது சட்டப்படி குற்றமாகும். பலர் இதை எந்த வித யோசனையும் இல்லாமல் எப்படியாவது தப்பி சென்று விடலாம் என கருதி ஓட்டி செல்கிறார்கள். இது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரவில்லை. இப்படியான சட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற பிரச்சனைகள் திரும்ப நடக்காது.


Click it and Unblock the Notifications









