மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்குதா? என்ன தெரியுமா?
பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னையில் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைக்கிறார். அதன்படி சென்னை எழும்பூர் முதல் நாகர்கோவில் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலையும் மதுரையிலிருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயிலையும் துவக்கி வைக்கிறார். இந்த செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இதில் மதுரையிலிருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயிலாக அறிமுகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த ரயில் இயக்கப்பட்டதில்லை இந்த ரயிலில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. ஒவ்வொரு முக்கிய நகரங்களாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பலர் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க அதிகம் விருப்பம் காட்டுகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அதிக வசதிகள் மற்றும் அதிவேகமான பயணம் ஆகியவற்றை இந்த வந்தே பாரத் ரயில் கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் இயங்கும் புல்லட் ரயிலுக்கு இணையாக இந்த ரயிலில் வசதிகள் இருப்பதால் மக்கள் பலர் இந்த வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய அதிகம் விருப்பம் காட்டுகிறார்கள். இந்நிலையில் முதலில் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் வெள்ளை நிற பெட்டிகளை கொண்டதாக இருந்தது. தற்போது ஆரஞ்சு மற்றும் கிரே பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தான் தயாரிக்கப்படுகிறது.
இப்படியாக ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வரும் முதல் வந்தே பாரத் ரயில் மதுரையிலிருந்து பெங்களூரு வரை அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில் தான் இந்த வந்தே பாரத் ரயிலுக்கும் இதுவரை தமிழகத்தில் இயங்கி வந்த வெள்ளை நிற வந்தே பாரத் வெயிலுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறது. முக்கியமாக இந்த வித்தியாசம் கொண்டு வருவதற்கு காரணம் பராமரிப்பு செலவு தான்.
வெள்ளை நிற வந்தே பாரத் ரயிலை சுத்தப்படுத்துவது என்பது கடினமான காரியமாக இருக்கிறது. இதனால் இந்த ரயிலை சுத்தப்படுத்தும் பணியாளர்கள் அதிக சிரமப்பட்டு வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு தற்போது வெள்ளை நிற வந்த ரயில்களை முற்றிலுமாக நிறுத்திவிட்டு ஆரஞ்சு நிறத்தில் மட்டுமே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் அப்டேட் செய்யும் போது மற்ற சில அப்டேட்களும் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை நிற வந்தே பாரத் ரயிலில் உள்ள சீட்டுகளை விட ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயிலில் உள்ள சீட்டுகள் அதிக குஷன் தன்மையுடன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியில் உள்ள பூட் ரெஸ்ட்கள் நீட்டிக்கப்பட்டதாக வழங்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் வெள்ளை நிற வந்தே பாரத் ரயில் பயணம் செய்த பயணிகள் சொன்ன குறைகளாக இருக்கிறது.
அடுத்ததாக ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள வாஷ்பேஷன்கள் சற்று ஆழம் கொண்டதாக இருக்கிறது. வெள்ளை நிற வண்டியை பாரத் ரயிலில் பொருத்தப்பட்டிருந்த வாஷ்பேஷன்கள் ஆழம் குறைவாக இருந்ததால் தண்ணீர் வெளியே தெளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தார்கள். இதன் அடிப்படையில் இதன் ஆழம் அதிகப்படுத்தி தண்ணீர் வெளியே தெரிக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆரஞ்சு நிறம் வந்தே பாரத் ரயிலில் சீட்டு சாய்வு ஆங்கிள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நன்றாக சாய்ந்து கொண்டு பயணிகளால் பயணம் செய்ய முடியும். மேலும் இந்த ரயிலில் உள்ள கழிவறைகளில் லைட்டிங் மேம்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை நேர வந்தே பாரத் ரயிலில் லைட்டிங் அதிக வெளிச்சமாக இல்லை என்ற புகார் இருந்தது. அதற்கு தீர்வாக இந்த அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளை நிற வந்தே பாரத் ரயில்களில் உள்ள ரீடிங் லைட்டுகள் ரெஜிஸ்டிவ் டச் தொழில்நுட்ப மூலம் இயங்கும் வகையில் கொடுக்கப்பட்டிருந்தது. அதை மேம்படுத்தும் விதமாக இந்த ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில்களில் கெபாசிட்டிவ் டச் கொண்ட ரீடிங் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ரயிலில் ரோலர் ப்ளைண்டுகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டி கிளைம்பிங் டிவைஸ்களும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அதிகம் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ரயில்வே நிர்வாகம் வெள்ளை நிற வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்திய பின்பு பயணிகளின் கருத்துக்களை கேட்டு அதில் இதையெல்லாம் மேம்படுத்த வேண்டும் என பயணிகள் விரும்புகிறார்கள். அதையெல்லாம் மேம்படுத்தி ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயிலை உருவாக்கியுள்ளது. இந்த ரயிலை தற்போது முதன்முதலாக தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளதால், இந்த ரயில் பயணிக்க தமிழக மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications








